Home Historical Novel Raja Muthirai Part 1 Ch42 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch42 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

61
0
Raja Muthirai Part 1 Ch42 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch42 |Raja Muthirai Part1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch42 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 42 சித்திரமும் கைப் பழக்கம்

Raja Muthirai Part 1 Ch42 |Raja Muthirai Part1|TamilNovel.in

சிங்கணனைச் சேர நாட்டுப் பாதையில் செல்ல விட்டு, தனது திட்டத்தில் பூர்ண நம்பிக்கையுடனும் மகிழ்ச்சி துள்ளிய மனத்துடனும் வீரபாண்டியன் கோட்டைக்குத் திரும்பியபோது, இருட்டு நன்றாக ஏறிவிட்டதால் கோட்டையெங்கும் தீபங்களும், தீப்பந்தங்களும் ஜொலித்துக் கொண்டிருந்தன.

சிங்கணன் கோட்டையைவிட்டு அகன்றதால், ராகு அகன்றபின் ஒளிவிடும் முழுமதியைப் போலப் புது மெருகுடன் பிரகாசித்த அந்தக் கோட்டையைத் தூரத்தில் கண்டதுமே இளவரசன் மகிழ்ச்சி வசப்பட்டானானாலும், முத்துக்குமரி அந்தச் சமயத்தில் எப்படியிருக்கிறாளோ, என்ன துன்பங்களை அனுபவிக்கிறாளோ என்ற வேதனையும் அந்த மகிழ்ச்சியுடன் கலந்து, மகிழ்ச்சிக்கு ஓரளவு களங்கத்தையே கற்பித்ததால், ஓரிரு முறைகள் கோட்டையை நோக்கித் துன்பப் பெருமூச்சும் விட்டான் அந்த மாவீரன். மகிழ்ச்சியில் வேதனை கலந்துவிட்ட காரணத்தால், தனக்கு வணங்கிய கோட்டைக் காவலரைக் கவனியாமலே உள்ளே நுழைந்த இளவரசன், மலைச்சரிவு விடுதித் தாழ்வரையில் நின்ற இளநங்கை மீதுகூடக் கண்ணை ஓட்டாமலே புரவியை நடத்திக் கொண்டு மன்னன் விடுதி நோக்கிச் சென்றான்.

விடுதிக்குள் நுழைந்த பின்பும் இதயத்தில் வேதனை யிருந்ததால், அங்கிருந்த மஞ்சத்தில் அமர்ந்து காவல னொருவனை விளக்கும், எழுது கருவிகளும் கொண்டுவரப் பணித்தான். காவலன் கொண்டு வந்த பதம் செய்த பெரு ஓலைத் துண்டுகளில் ஒன்றை எடுத்து அதில் எழுத்தாணியால் கோடுகளை அப்படியும் இப்படியும் இழுத்துக் குறிகளும் போடலானான். அவன் முகத்தில் விளைந்திருந்த தீர்க்காலோசனையைக் கண்ட காவலன் மூச்சுக்கூட விடாமல் யவனர் விளக்கு ஒன்றைப் பக்கத்தில் தூக்கிப் பிடித்துக் கொண்டு நின்றானென்றால், சற்று நேரம் பொறுத்துப் பக்கத்து அறை ஒன்றிலிருந்து வெளியே வந்த மன்னன் கூட அவன் யோசனைக்கு இடைஞ்சல் விளைவிக்காமல் அடிமேலடி எடுத்து வைத்து வெளியே சென்றுவிட்டான்.

சிந்தனை சித்தத்தைக் கவ்வி நின்றதால் அண்ணன் வந்து சென்றதைக்கூடக் கவனியாமல் முதல் ஓலையில் சில கோடுகளை இழுத்துக் குறிகள் போட்ட வீரபாண்டியன், அடுத்தபடியே அடுத்த ஓலையிலும் ஏதேதோ வரையலானான்.

இப்படி ஒன்றன்பின் ஒன்றாக ஐந்து ஓலைப்பட்டை களில் ஏதேதோ கோடுகளையும் வீரபாண்டியன் வரைந்து முடிக்கக் கிட்டத்தட்ட அரை ஜாம நேரம் ஆகிவிட்ட தானாலும், அந்த நேரம் ஓடியதைச் சிறிதும் கவனிக்காமலே தனது ஒவ்வோர் ஓலையையும் கீறிக் கோடுகள் போட்டு முடிக்க நீண்ட நேரம் பிடித்தது அவனுக்கு. ஒவ்வொரு கோட்டையும் குறிகளையும் தீர்க்காலோசனைக்குப் பின்பே அவன் வரைந்தானாதலால் நேரம் அதிகமாக ஓடி விட்டதோ, பின்னால் விளக்குப் பிடித்து நின்ற காவலன் மாறிவிட்டதோ ஏதும் தெரியவில்லை இளவரசனுக்கு அவன் தானே தனக்கு சிருஷ்டித்துக் கொண்ட தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான். பொருதையும் கோட்டாறும் சேரநாட்டு மலைகளும் கலந்த பெரு உலசம் அது. பெரு உலகம் மட்டுமல்ல போருலகமும் கூட
அவன் குறிவைத்த இடங்களில் மனத்திலேயே அவன் நடத்திக்கொண்ட பெரும் அணிவகுப்புகளும், போர்களும் பேரொலியை அவன் சித்தத்தில் கிளப்பிக் கொண் டிருந்தன. இந்தப் போர் விவரங்கள் இதயத்தைச் சூழ்ந்துவிட்டதால் முத்துக்குமரியைப் பற்றி ஆரம்பத்திலிருந்த மனவேதனை சிறிது மறைந்துவிடவே, இளவரசன் உதடுகளில் சிறிது புன்சிரிப்பும் உதயமாயிற்று. அந்தப் புன்சிரிப்பு முகத்திலும் படர்ந்து, கண்களிலும் சிதறியது ஐந்தாவது ஓலையை அவன் வரைய ஆரம்பித்தபோது அந்தப் புன்சிரிப்பு சிறிது அதிகமாக விரியவும் செய்தது. திடீரென அவன் எழுத்தாணி ஐந்தாவது ஓலையில் பரபரப்புடன் நடமாடியது..

ஓலைமீது அதன் நடனம் முடிந்ததும் சற்று மெல்ல நகைக்கவும் செய்த வீரபாண்டியனை, “ஆம்” என்று சீறிய சப்தமொன்று சட்டென்று திமிர வைத்ததால், வரபாண்டியன் தசைப்பு நின்றது. தலை திரும்பியது, கண் களில் சற்றுப் பயமும் படர்ந்தது.

எதற்கும் அசையாத வீரபாண்டியன் கூட அந்த நிலையில் சற்று அசைந்தான். என்றும் குழம்பாத அவன் முகமும் அந்தச் சில வினாடிகளில் குழம்பி நின்றது. அவன் பின்னால் யவனர் விளக்கின் சங்கிலியை ஏந்திப் பிடித்த வண்ணம் இளநங்கை நின்றிருந்தாள்.

வீரபாண்டியன் அவளைப் பார்த்துப் பார்த்துப் பெரிதும் பிரமித்தான். கையில் விளக்கேத்தி, முகத்தில் விளைந்திருந்தது உண்மைக் கோபமா, பொய்க் கோபமா என்று யாரும் ஊகிக்க முடியாத நிலையில் நின்றிருந்தாள் அவள். அவள் விளக்கேந்தி தின்ற நிலையில் பவன நாட்டு விளக்குப் பதுமை போலிருந்தாளேயன்றி, வாணாதித்தன் மகளாக, கொற்கை முத்தங்காடியைச் சுற்றும் விஷமக்காரியாகக் காட்சியளிக்கவில்லை. அன்று காலையில் அவள் தலையில் சூடிய செண்பகப் பூ வதங்கியிருந்தாலும் வாசனையைப் பெரிதும் கிளப்பியதால் அந்த வாசனை அந்த முன் மண்டபம் பூராவுமே பரவிக் கிடந்தது. ‘இளநங்கையின் வரவைக் கவனிக்காவிட்டாலும் இந்த வாசனையையாவது நான் முகாந்திருக்க வேண்டுமே, ஏன் முகரவில்லை? என் நாசியும் முகரும் சக்தியை இழந்துவிட்டதா?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான் அந்த இளங்காளை. அவன் கண்கள் அவளை வட்டமிட்டன.

இளங்காளையின் பார்வையால் இளநங்கை சற்றே நெகிழ்ந்தாள். சற்று சங்கடத்துடன் “இனவரசர் ரசிகர் என்பது தெரிகிறது,” என்று உஷ்ணத்துடன் கூறவும் செய்தாள்.

அந்த உஷ்ணத்தைக் கவனிக்கவில்லை இளங்காளை, தேடுகளின் செழுமையையும், நீரோட்டத்தையும், அசைவையும் கவனித்தான். உதடுகள் இகழ்ச்சியுடன் கொடிகளுக்கு இழுபட்டபோது புஷ்டிக் கன்னங்களில் விழுந்த குறிகளையும் கவனித்தான். ஒருமுறை தலையை லேசாகச் சாய்த்துத் தன் தோள்மீது விழுந்து கிடந்த அவள் சேலை முந்தானையையும் பார்த்தான். கேவலம் அந்தச் சேலை, உயிரற்ற பொருள், எத்தனை உயிர்த்துடிப்புடன் இயக்கித் தன்னைப் பெரும் புரட்டாகப் புரட்டிவிடுகிறது என்பதை எண்ணி வியக்கவும் செய்தான்.

“ஆராய்ச்சி பலமாயிருக்கிறது.” என்ற சொற்கள் மீண்டும் வெளிவந்தன அவள் உதடுகளிலிருந்து.
“ஆமாம்,” என்றான் வீரபாண்டியன், ஏதோ சொல்ல வேண்டுமென்பதற்காக.

“என்ன ஆமாம்?” என்று கேட்டான் அவள்.

“ஆராய்ச்சி.”

“எதைப்பற்றி?”

போரைப்பற்றி.”

“போரைப்பற்றியா?”

“அதற்கு இதை வரைய வேண்டுமா?” என்ற இளநங்கை, அவன் மடியில் விழுந்த ஐந்தாவது ஓலையை எடுத்து நீட்டினாள்.

இளவரசன் அவளை நோக்கித் திருட்டுவிழி விழித்தான். இளநங்கையின் கண்களில் கனல் பறந்தது. -பெண்களைப் பற்றிச் சித்திரம் வரைய எத்தனை நாளாகக் கற்றுக்கொண்டீர்கள்?” என்ற சொற்களை உதிர்த்து இளதங்கை, வெகு வேகத்துடன் ஐந்தாவது ஓலையை அவன் கண்கள் முன்பாகக் கோபத்துடன் திணித்தான்.

இளவரசன் அதற்கு நேரிடையாகப் பதில் சொன் வில்லை. “நீ எப்பொழுது வந்தாய்? காவலனிடமிருந்து விளக்கை எதற்காக வாங்கிக்கொண்டாய்?” என்க வினவினான் சங்கடத்துடன். அந்தச் சங்கடத்துடன் சங்கடமாக அவள் இடையிலும் தனது கையை செலுத்தினான்.
“கையை எடுங்கள்,” என்றாள் இளநங்கை.

“ஏன்?” என்று வினவினான் இளவரசன்.

“சித்திரமெழுதத் தடங்கலாயிருக்கும்,” என்றாள் அவள் கோபத்துடன்.

“இருக்காது.” இளவரசன் குரலில் விஷமம் ஒலித்தது.

“ஏன்?”

“மனத்திலிருந்து உருவத்தை எடுத்து வரைய வேண்டியதில்லையே இப்பொழுது?”

“என்ன சொல்கிறீர்கள்?”

“எதிரே நிற்பதால் பார்த்தே வரையலாம்.”

“ஏன், சித்திரத்தில் புலியோ நீங்கள்?”

“இல்லை, மீன்.”

“மீனா !”

“ஆம். புலி சோழர் சின்னம், மீன்தான் எங்கள் சின்னம். புலியைவிட மீன் வலுவுள்ளது.”

“மீனா!”
“ஆம்,” என்று அவள் கண்களைச் சுட்டிக் காட்டிய வீரபாண்டியன், “இந்த மீன்களுக்குள்ள விஷம் புலியிடத்தில் கிடையாது,” என்று கூறி அவளை உற்று நோக்கினான்.

இளநங்கை மெல்ல விளக்குகளுடன் அவனை நோக்கிக் குனிந்தாள். “இத்தனை நேரம் சித்திரக்காரராக இருந்தீர்கள். இப்பொழுது கவிஞராகவும் ஆகிவிட்டீர்கள்,” சன்றாள்.

“இரண்டுக்குமே நீதானே காரணம்!”

இளநங்கை அவன் தலைமீது குனிந்தபடி முணு முணுத்தாள், “நான் காரணமா? நானா காரணம்?” என்று.

“ஆமாம். உன்னை நினைத்து அடிக்கடி இத்தகைய இலைகளில் உன் உருவத்தை வடித்திருக்கிறேன். அந்தக் கைப்பழக்கத்தால் சித்திரத்தில் தேர்ந்தேன்.”

“உம். அப்புறம்?”

“உன்னை அடிக்கடி நினைத்து நினைத்து உவமை காணமுயல்வேன். பாடிக் கூடப் பார்ப்பேன். செந்தமிழும் நாப்பழக்கமல்லவா? கவிஞனுமானேன்…” என்ற வீர பாண்டியனை இடைமறித்த இளநங்கை, “அதுமட்டுமல்ல,” என்றாள் அவன் காதில்.

“வேறென்ன?”

“பைத்தியமுமானீர்கள்.”
“நானா பைத்தியம்?”

“பைத்தியமில்லாவிட்டால் நான்கு ஓலைகளில் போர்த்திட்டத்தைக் குதியிட்டுக் கோடிட்டு, ஐந்தாவது ஓலையில் ஒரு பெண்ணின் உருவத்தை வரைவீர்களா! அதுவும் அந்தப் பெண் நான் என்றும் சொல்கிறீர்கள்..” என்ற இளநங்கை, “நான் இத்தனை மோசமாகவா இருக்கிறேன்? அதுவும் இப்படியா இருக்கிறேன்…?” என்று அதிக வெட்கத்துடனும் சங்கடத்துடனும் ஓலையிலிருந்த உருவத்தைக் காட்டினாள்.

இளவரசன் அவளுக்குப் பதிலேதும் சொல்லவில்லை. அவனது கை அவள் இடையில் வருடியது.

“கைகள் சும்மா இருக்கட்டும்,” என்று எச்சரித்தாள் இளநங்கை.

“இருக்காது,” என்ற வீரபாண்டியன் குரல் கனவுலகத்தில் இருப்பவன் குரலாக ஒலித்தது.

“சித்திரமும் கைப்பழக்கம்.”

“அதனால்?”

“நீ பெண் சித்திரம், கை பழகுகிறது.”

“நன்றாகயிருக்கிறது!”

“நீ செந்தமிழ்… ஆகையால்….”

“நாவும் பழகும் போலிருக்கிறதே?”

“ஆம் இளநங்கை, நாவும் பழகும். இப்பொழுது என நா உதிர்க்கும் சொற்கள் பெரும் கவிதை, தமிழ்கூறும் தல்லுலகத்தில் புதுயுகமொன்றை, புதுச் சரித்திரத்தை சிருஷ்டிக்கப் போகிறது!” என்று வீரபாண்டியன் கனவும் கத்திலிருப்பவன்போல் காட்சியளித்தான். “ஆம் ஆம், அது தான் வழி. சேரனை உள்னைக் கொண்டே ஒழிக்கிறேன், என்று கூறிய வீரபாண்டியன், இளதங்கையின் கையிலிருந்து அந்த ஐந்தாவது ஓலையை வாங்கி, அதிலிருந்த பெண் உருவைப் பார்த்தான். பிறகு மடியில் கிடந்த எழும் தாணியை எடுத்து வேறு சில கோடுகளை அதன்மீது இழுத்து, “இளநங்கை! இது எப்படி ?” என்று வினவினான்.

இளநங்கை அதைப் பார்த்துப் பிரமித்தாள். அவள் கண்கள் ஓலையில் நிலைத்து நின்றுவிட்டன பல வினாடிகள். “எதற்காக இதை இப்படி…?” என்று கடைசியில் திணறிக் கேட்கவும் செய்தான்.

சித்திரத்தின் மாற்றம் சொன்ன கதை ஒரு புதுக்கதை ஓலையில் முதலில் சாதாரண அரைகுறை ஆடையுடன் காட்சியளித்த பெண்ணுருவத்துக்குக் குறுக்கிலும் நெடுக கிலும் சில கோடுகளை வீரபாண்டியன் வரைந்து விட்டதால் அது ராணுவ உடை உடுத்தியது போலும் இடையில் வாளைச் செருகிக் கொண்டது போலும் காட்சியளித்தது. தவிர அதன் கையிலும் பெரும் வேல் உருவெடுத்தது. தலையில் ஒரு கவசமும் துலங்கியது இப்படிப் பெண்ணுக்குப் போர்க் கோலம் அணிவித்த வீரபாண்டியன், “இந்த வீரப்பெண் எப்படியிருக்கிறாள் என்று வினவினான்.

“மிக அழகாயிருக்கிறாள்,” என்றாள் இளநங்கை இகழ்ச்சி குரலில் தொனிக்க.

“உன்னை நீயே பாராட்டிக் கொள்கிறாயா? அது சரி, அதுவும் நல்லதுதான். ஆனால் செயலில் எப்படி, பார்ப்போம்,” என்றான் அவளை நன்றாக ஒரு கையால் அணைத்துக் கொண்டு.

இளநங்கை ஏதும் புரியாத கண்களை அவன்மீது இருப்பினான். “செயலா!” என்றாள் வியப்புடன்.

“ஆம்.” வீரபாண்டியன் குரல் மகிழ்ச்சியுடன் ஒலித்தது.

“என்ன செயல்?”

“போர்ச் செயல்.”

“போர்ச் செயலா?”

“ஆமாம். உனக்குத்தான் வாட்போர் தெரியும். வேலெதியத் தெரியும், சிலம்பாடவும் தெரியும்.”

“தெரிந்தாலென்ன?”

“இதெல்லாம் போருக்குத் தேவையானவை? இனி நீ கற்க வேண்டியது ஒன்றுதான்.”
“என்ன?”

“படைகளை நடத்த வேண்டியது.”

“அவள் கண்கள் பிரமிப்பை உதிர்த்தன. “என்ன! என்ன! நானா! படைகளை நடத்துவதா?”

“ஆம்,” என்ற வீரபாண்டியன் மேலும் சொன்னான்: “இருமுறை வீரரவி உன்னை களவாடப் பார்த்தான். ஆகையால் உன்னைக்கொண்டு அவனை ஒழிப்பதுதான் முறை, தவிர இளநங்கை, இந்திரபானுவும் இல்லை இப்பொழுது. எனக்கொரு துணைத் தலைவன் வேண்டாமா?” என்று.

இளநங்கையின் விழிகள் விழித்தது விழித்தபடி நின்றன. “உங்கள் புத்தி சுவாதீனத்தில் தானிருக்கிறதா?” என்று வினவினாள்.

“இல்லை. நீ அருகிலிருக்கும் போது சுவாதீனத்தில் இருப்பதில்லை. ஆனால் இந்த ஒரு விஷயத்திலிருக்கிறது. என்றான் வீரபாண்டியன் திடமாக.

“மன்னர்…” என்று மென்று விழுங்கினான் இளநங்கை.

“ஒப்புக்கொண்டு விட்டார்” என்ற சொற்கள் அவர் களிருவரையும் தூக்கிவாரிப் போடவைத்தன.

இருவரும் ஒருவரிடமிருந்து மற்றொருவர் பிரித் தெழுந்து விலகி நின்றனர். அவர்களுக்குப் பின்னால் சுந்தரபாண்டியன் மந்தகாச வதனத்துடன் நின்று கொண்டிருந்தான்.

Previous articleRaja Muthirai Part 1 Ch41 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch43 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here