Home Historical Novel Raja Muthirai Part 1 Ch43 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch43 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

69
0
Raja Muthirai Part 1 Ch43 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch43 |Raja Muthirai Part1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch43 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 43 பத்தினி ஆட்சியும் பாண்டியன் கனவும்

Raja Muthirai Part 1 Ch43 |Raja Muthirai Part1|TamilNovel.in

பரஸ்பரப் பிணைப்பிலிருந்து பிரிந்து நின்ற வீர பாண்டியனும் இனநங்கையும், மன்னன் அங்கு வந்து சிறிது நேரமாகியிருக்க வேண்டுமென்பதை அவன் மந்தகாச வதனத்தாலும் நகைப்பை உதிர்த்த சிங்கக் கண்களிலிருந்தும் புரிந்து கொண்டதால் பெரும் சங்கடத்துக்குள்ளாகி, என்ன சொல்வதென்றறியாமல் மௌன விரதத்தையே கடைப் பிடித்தனர். அவர்கள் சங்கடத்தைக் கண்ட மன்னனே அவர்களை நோக்கி வந்து தனது மரமஞ்சத்தில் அமர்ந்து, “தம்பி! எங்கே, அந்த ஓலைகளைக் காட்டு, போர்த்திட்டத்தை நானும் உணர்ந்து கொள்கிறேன்,” என்று கையை நீட்டினான்.

வீரபாண்டியன் அண்ணனை நோக்கிச் சற்றுத் திருதிருவென்று விழித்துவிட்டு ஐந்தாவது ஓலையைக் கையில் மடக்கி மறைத்துக்கொண்டு முதல் நான்கு இலைகளை மட்டும் மன்னனிடம் கொடுத்தான். மன்னன் நிதானமாக அந்த ஓலை ஒவ்வொன்றையும் ஆராய்ந்தான். அதிலிருந்த கோடுகளையும் குறிகளையும் பார்த்து, சிற்சில சமயங்கள், “நன்று, நன்று!” என்று சிலாகித்துச் சிரக் கம்பமும் செய்தான். சுமார் ஒரு நாழிகைக்கு மேலாகவே அந்த நான்கு ஓலைகளையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்து சில மாறுதல்கள் செய்து தம்பியிடம் நீட்டிய சுந்தர பாண்டியன், “தம்பி! நீ எதிரியைச் சந்திக்க உத்தேசித்து இருக்கும் இடங்கள், அவன் பின்வாங்கவோ, எதிர்த்துத் தாக்கவோ கூடிய வழிகள், எல்லாமே சரியாக இருக்கின்றன. தமக்குள்ள குறைந்த படை பலத்தில் பெருங்காரியத்தைச் சாதிக்க உன் திட்டத்தைத் தவிர சிறந்தது வேறில்லை ,” என்று கூறவும் செய்தான்.
“அண்ணா! தங்களுக்குத் தெரியாததை தான் எதுவும் குறிப்பிடவில்லை ஓலைகளில். நாம் இருவரும் தென்மேற்கிலும் வடமேற்கிலும் எதிரியைச் சந்திக்கப் போவதால், எதற்கும் குறிப்புகளிருக்கட்டுமென்தே ஓலைகளில் திட்டத்தை வரைந்தேன்,” என்றான வீரபாண்டியன் தலைவணங்கி.

“சரி, ஐந்தாவது ஓலையைக் கொடு,” என்று சுந்தர் பாண்டியன் சர்வசாதாரணமாகக் கையை நீட்டினான் தம்பியை நோக்கி.

வீரபாண்டியன் கை ஓலையை இறுக மூடிக் கொண்டது. “ஐந்தாவது ஓலையா?” என்று ஏதோ புரியாததுபோல் கேட்டான் வீரபாண்டியன்.

“ஆம். தம்பி! ஐந்தாவது ஓலை,” என்றான் மன்னன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமலே.

“அண்ணா!”

“ஏன் தம்பி?”

“அதற்கும் திட்டத்துக்கும் சம்பந்தம் எதுவுமில்லை.”

“தம்பி “

“ஏன் அண்ணா ?”

“இது வரையில் நமக்குள் எந்த ரகசியமும் கிடையாது…”
“ஆம்”

“இப்பொழுது மாத்திரம் எதற்கு?”

வீரபாண்டியன் பெரும் சங்கடத்துக்குள்ளானான் “அண்ணா! அந்த ஓலையில் திட்டத்தைப்பற்றி ஏதுமில்லை ஏதோ கைக்கு வந்தபடி கிறுக்கியிருக்கிறேன்,” என்றும் கூறினான் சங்கடம் குரலிலும் ஓலிக்க.

சுந்தரபாண்டியன் அதற்கும் மசியவில்லை. “அந்த கிறுக்கலை நாலுந்தான் பார்க்கிறேன்,” என்று கையை மறுபடியும் நீட்டவே செய்தான். வேறு வழியின்றி வீர பாண்டியன் தீட்டிய ஐந்தாவது ஓலையை வாங்கிப் பல கோணங்களில் அதைப் பார்த்த சுந்தரபாண்டியன், “தம்பி! நீ சொன்னது முற்றிலும் சரி, முற்றிலும் சரி,” என்று சிலாகித்தான்.

வீரபாண்டின் பதிலேதும் சொல்லாமல் இளநங்கையைப் பார்த்தான். இளநங்கை தரையை நோக்கினாள். மெல்ல முறுவலும் காட்டினாள். சுந்தரபாண்டியன் கண்களை ஓலைமீது நாட்டியவாறு, “தம்பி! நீ சொன்னது சரி. சித்திரமும் கைப்பழக்கம். தெரியாமலா நமது பெரியோர்கள் அப்படிச் சொன்னார்கள். ஆனால் தம்பி! இந்தக் கைப்பழக்கம் உனக்கு மதுரையில் கிடையாதே. கொற்கை வந்த சொற்ப காலத்திற்குள் ஏற்பட்டு விட்டதா?” என்றும் வினவினான்.

வீரபாண்டியனுக்குச் சங்கடத்திலும் சிறிது கோபம் துளிர்விட்டது. “என்னைப் பார்த்து நகைக்கிறீர்களா? அண்ணா ?” என்று வினவினான், குரலில் உஷ்ணம் தெரிய.
இதில் நகைக்க என்ன இருக்கிறது? சித்திரத்தை முதல் தரமாக எழுதியிருக்கிறாய். ஆனால் இதற்கும் மூல உருவத்துக்கும் பெருவித்தியாசமிருக்கிறது,” என்று கூறிய சுந்தரபாண்டியன் இளநங்கையை ஏறெடுத்து நோக்கினான். “இளநங்கை! வாழ்வில் ஒரே நோக்கம் பரஸ்பர அன்புடையவர்களுக்கு இருப்பது சிலாகிக்கத்தக்கது. தம்பி பெருவீரன். அவனுக்குப் போர்ப் பழக்கமுள்ள பெண் கிடைப்பது பாண்டிய பரம்பரையில் அதிர்ஷ்டம், முக்கியமாக என் அதிர்ஷ்டம்,” என்றும் கூறினான்.

இளநங்கை தன் அழகிய விழிகளை ஏறெடுத்து மன்னனை நோக்கினாள். முழவுத் தோள்களுடனும் விசாலமான மார்புடனும் யாரையும் அச்சுறுத்தும் சிங்கக் கண்களுடனும் அவயவமெங்கும் வீரம் சொட்டக் காட்சியளித்த மன்னனைப் பார்த்து, “மன்னவா! இவர் ஏதோ விளையாட்டுக்குக் கிறுக்கிய ஓலை அது-” என்று ஏதோ சொல்ல முயன்றாள்.

அவளை இடைமறித்த சுந்தரபாண்டியன், இளநங்கை அரசகுல இளவல்களின் விளையாட்டில் நல்லதும் விளைவதுண்டு, துன்பமும் விளைவதுண்டு. அஸமஞ்சன் என்ற ரவிகுல இளவரசனின் விளையாட்டில் துன்பம் விளைந்தது. பாண்டிய இனவலின் இந்த விளையாட்டில் தமிழினத்துக்குப் பெரு நன்மை விளையும். தமிழகத்தில் முதல் பெண்மணி ஆயுதந் தரிக்கட்டும், படைகளை நடத்தட்டும், புதுமைக்கும் புரட்சிக்கும் பாண்டிய நாடு வித்திடட்டும்,” என்றான்.

“ஆனால்….” இளநங்கை மீண்டும் ஏதோ சொல்ல முயன்றாள்.
சுந்தரபாண்டியன் ஒரு தந்தை பெண்ணை நோக்குவது போல் நோக்கிக்கொண்டே அவள் சொற்களை இடையிலேயே வெட்டிக் கூறினான்: “இளநங்கை! உன்னையும் என் தம்பியையும் பார்க்கையில் என் மனம் பூரிக்கிறது. நீங்களிருவரும் போர்க்கோலம் பூண்டு புரவிகளில் செல்வதைப் பார்க்க என் மனம் துள்ளப் போகிறது. சேரநாட்டுக்கும் இதற்குங்கூட ஒரு சம்பந்தம் உண்டு…”, இந்த இடத்தில் மன்னன் கண்களில் கனவு விரிந்தது. அவன் மேலும் தொடர்ந்தான். “பெண்ணே! சேர நாடு தற்சமயம் தாய் வழி அரசு உடையது. சேர நாட்டில்தான் பத்தினித் தெய்வத்தின் முதல் பிரதிஷ்டை நடந்தது. மதுரையை எரித்த கண்ணகிக்குக் கோவில் கட்டிய சேரநாட்டையும் ஒரு பெண் ஏன் எரிக்கக் கூடாது? பெண்வழி அரசு நடக்கும் சேரநாட்டை ஒரு பெண் ஏன் வெற்றி கொள்ளக்கூடாது? அப்படித்தான் நடக்க வேண்டும். தம்பியின் கையைத் தெய்வந்தான் இந்தச் சித்திரத்தைத் தீட்ட வைத்தது. இந்திரபானுவின் பதவியை இன்று முதல் நீ வகிப்பாய். அதற்கான உத்தரவுகள் இன்று பிறப்பிக்கப்படும். நாளைக் காலைக்குள் நீ கோட்டை வீரர் களுக்கு அறிமுகமாவாய்.” இதைச் சொன்ன மன்னன் நிதானித்தான், அவன் கண்கள் இனநங்கையையும் தாண்டி வாயில் வழியாக வெளிப் பரப்பைக் கவனித்தன. பெரும் கனவு அவற்றில் தெரிந்தது.

மன்னனின் உணர்ச்சிப் பெருக்கையும், சொற்களில் தோனித்த வேகத்தையும் கண்களில் விரிந்த கனவையும் கண்ட காதலரிருவரும் பிரமித்து நின்றனர். மன்னனின் சொற்கள் ஓரளவு அச்சத்தைக்கூட விளைவித்தன இளநங்கையின் இதயத்துக்கு. “மன்னா! இதற்கு நான் தகுதி பல்ல..” என்ற வார்த்தைகள் அவளிடமிருந்து உதிர்ந்தன.
மன்னன் உடனே பதில் சொல்லவில்லை. கடைசியில் “ஏன்?” என்று வினவினான்.

“பெண்களின் இடம் வீட்டுக்குள்,” என்றாள் இளநங்கை.

“அவசியம் வரும்போது வெளியிலும் இடம் உண்டு,” என்றான் சுந்தரபாண்டியன்.

“எந்த அவசியம்?” என்று வினவினாள் இளநங்கை.

“வைகையும் பொருநையும் புரண்டு மதுரைக்குள்ளும் கொற்கைக்குள்ளும் வந்தால், பெண்கள் வீட்டுக்குள் இருக்க முடியாது; வெளியில் வந்தாக வேண்டும். வெள்ளத்தை எதிர்த்து எதிர்நீச்சுப் போடவேண்டும். எதிரிகள் படை பெடுத்து ஊருக்குள் புகுந்துவிட்டால் வெளியே வந்து போரிடாமல் என்ன செய்வது?”

“இது அப்படிப்பட்ட சமயமல்லவே?”

“அப்படிப்பட்ட சமயம்தான்.”

“எப்படி?”

“நமது படைபலம் எதிரியின் படைபவத்தில் மூன்றி லொரு பங்குகூடக் கிடையாது. நமக்கிருப்பது சிறுபடை படைகளை நடத்தும் திறன் வாய்ந்தவர் மூவர், நான், தம்பி, இந்திரபானு மூவர்தான். ஒருவர் இப்பொழுது இல்லை. இந்த நிலையில் படையெடுப்பு நம்மீது வந்து, தற்காத்துக் கொண்டாலே பெரிய விஷயம். நாம் போய் எதிர்ப்ப தென்பது பெரும் ஆபத்து. வெற்றியுடன் முடிந்தால் பெரும் சாதனை !”

“ஆம்.”

“இளநங்கை! பாண்டியன் ஒரு சிறு படையுடன் சென்று சேரனை வெற்றிகொண்டான் எனச் சரித்திரம் நம்மைப் பாராட்டப்போகிறது பார்,” என்று மிகுந்த வேகத்துடனும் உற்சாகத்துடனும் கூறினான் பாண்டிய மன்னன்.

தீர்க்க திருஷ்டியுடன் மன்னன் அன்று சொன்ன சொற்களை இளநங்கை தம்பவில்லை. ஏதோ தன்னை ஊக்குவதற்கு மன்னன் அப்படிச் சொல்வதாகவே எண்ணினாள். ஆகவே ஏதும் பேசாமல் தலைதாழ்த்தி வணங்கி அவனிடமிருந்து விடை பெற்றுக்கொண்டான் “தம்பி! படைத்தலைவியை விடுதியில் விட்டு வா. நாளை முதல் அவளுக்கு வேண்டிய அணிவகுப்பு முறைகளைப் போதிக்க ஆரம்பித்து விடு,” என்று கூறினான்.

மன்னன் ஒரு வேளை தன்னைப் பார்த்து நகைக்கிறானோ என்று ஒரு விநாடி வீரபாண்டியனுக்குத் தோன்றினாலும், மன்னன் முகத்தை ஊன்றிப் பார்த்ததும் கொஞ்ச நஞ்சமிருந்த சந்தேகமும் பறந்துவிட்டது வீரபாண்டியனுக்கு. ஆகவே அவனும் தலைவணங்கி இளநங்கையைத் தொடர்ந்தான்.

இளதங்கையின் இதயம் அன்று பெரும் குழப்பத்தி லிருந்ததால் அவள் ஏதும் பேசாமலே முன்னால் நடந்தான் ஏதோ பெரும் கனவொன்று தன்னைச் சூழ்ந்து கொண்டு விட்டதாக நினைத்தாள் அவள். ‘பெண், கவசம் பூண்டு படைகளை நடத்துவதாவது!’ என்று தன்னைத்தானே மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டாள். ஒரு முறை தலை நிமிர்ந்து கோட்டைப் பகுதியைப் பார்த்து, “இத்தனை வீரர்களும் பெண்ணுக்கு அடங்கி நடப்பார்களா?” என்றும் உள்ளத்தில் ஒரு கேள்வியை எழுப்பிக்கொண்டாள்

இத்தகைய நினைப்புகளுடன் தனது விடுதியை அடைந்த அவள் உள்ளே புகாமல் விடுதித் தாழ்வரையிலேயே உட்கார்த்து கொண்டாள். அவளைத் தொடர்ந்து வந்த வீரபாண்டியன் அவளுக்குப் பின்புறம் நின்றான்.

முன்புறம் கோட்டைக் காவலர் உலாவ, பின்புறம் காதலன் நிற்க, தாழ்வரையில் அமர்ந்திருந்த இளநங்கை கேட்டாள், “இதென்ன வேடிக்கை?” என்று.

அவள் உள்ளத்தில் ஓடும் எண்ணத்தைப் புரிந்து கொண்ட வீரபாண்டியன் சொன்னான். “இதில் வேடிக்கை எதுவுமில்லை. எனக்குப் புதிதாக உதித்த யோசனை. அரசர் அனுமதியும் கிடைத்துவிட்டது,” என்று.

“மன்னர்…?” என்று ஏதோ கேட்க முயன்றாள் அவன்.

“அவர் முகத்தைத்தான் நீ பார்த்தாயே. அதில் விளையாட்டா இருந்தது?”

“இல்லை. இல்லை. பெருங் கனவுதானிருந்தது.”

“பின் பொறுப்பு?”

“என் பொறுப்பு?”

“மன்னர் கனவை நனவாக்குவது.”

“என்ன அது? சேர நாட்டை வெற்றிகொள்வதா?”

“அதுவும் ஒன்று.”

“வேறு எது?”

“பத்தினித் தெய்வத்தின் ஆட்சியை சேரநாட்டிலும் நடக்கச் செய்வது?”

“எப்படி?”

“மதுரையில் நடந்தபடி, அவளுக்குச் சிலம்பு இருந்தது”

“சேரநாட்டை எரிக்கச் சொல்கிறீர்களா?”

“நான் சொல்லவில்லை. அதுவே எரியும்.”

“ஏன்”

“பெண்ணுக்கு அநீதி விளைவித்த நகரங்கள் எல்லாமே வரலாற்றில் எரிந்திருக்கின்றன. இலங்கை எரிந்தது. மதுரை எரிந்தது. இப்பொழுது சேரன் தலைநகர் எரியப்போகிறது. முத்துக்குமரியைச் சேரன் அபகரித்திருக்கிறான் என்பது நினைவு இருக்கட்டும்,” என்று உணர்ச்சிப் பெருக்குடன் சொற்களை உதிர்த்த வீரபாண்டியன், “இன்றிரவு உணவருந்தி இளைப்பாறு இளநங்கை, தாளைக் காலையிலிருந்து உனக்குப் பயிற்சி ஆரம்பம்,” என்று சொல்லி, விடுவிடு என்று படிகளில் இறங்கிச் சென்றான்.

“படையெடுப்பு, பத்தினி ஆட்சி, என்ன கோரம் என்ன கோரம்!” என்று முணுமுணுத்துக்கொண்டான இளநங்கை .

Previous articleRaja Muthirai Part 1 Ch42 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch44 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here