Home Historical Novel Raja Muthirai Part 1 Ch46 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch46 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

67
0
Raja Muthirai Part 1 Ch46 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch46 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch46 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 46 பயங்கரப் பெண்

Raja Muthirai Part 1 Ch46 | Raja Muthirai | TamilNovel.in

கேரளத்தில் இன்று உள்ள கொட்டாரக்கரா என்ற சிற்றுரும், அதிலிருந்து சில மைல் தூரத்திலுள்ள கொல்லம் என்ற துறைமுகமும், பாண்டிய நாட்டின் காயலும் கொற்கையுமிருந்த நிலையில் இருந்தன. காயல் துறைமுகமாகவும் கொற்கை அதன் அங்காடியாகவும் கிழக்குக் கடலுக்கு இருந்தது போலவே, மேற்குக் கடலுக்குக் கொல்லம் துறைமுகப் பட்டினமாகவும் கொட்டாரக்கரா என்ற கோட்டாற்றுக்கரை அதன் அங்காடியாகவும் விளங்கி வந்தன. பண்டை நாளில் காயலுக்கும் கொற்கைக்கும் பாண்டிய நாட்டிலிருந்த முக்கியத்துவம் கொல்லத்துக்கும் கோட்டாற்றுக் கரைக்கும் சேரநாட்டில் இருந்துவந்தது. மேற்குக் கடல் வாணிபத்தின் அங்காடியா பிருந்த காரணத்தால் பெரும் காவலுடனும் சிறப்புடனும் விளங்கிய கோட்டாற்றுக்கரை, பலமான கோட்டையுடனும் காவலுடனும் விளங்கி வந்ததென்றால் அதில் வியப்பில்லையல்லவா? அத்தகைய பலமான கோட்டையை இரண்டாயிரம் வீரர்களைக் கொண்டு கைப்பற்றி விடலாமென வீரபாண்டியனிட்ட திட்டத்தைப் பற்றி இளநங்கை சந்தேகங்கொண்டாளென்றால் அதிலும் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது?

இருப்பினும் மலையடிவாரத்தில் நின்றிருந்த சேரர் படையைக் கண்டதும் இளநங்கையின் இதயத்திலிருந்த சந்தேகங்கூட ஓளவு குறையத் தொடங்கியது. கீழேயிருந்த சேரன் படை அவன் எதிர்பார்த்தது போல் பெரும் படையாயிருந்தாலும், அதன் அணிவகுப்பு மலைச்சரிவில் இறங்கும் புரவிப்படையின் வேகத்தைத் தாங்கக்கூடிய நிலையில் இல்லையென்பதை உணர்ந்தாள் இளநங்கை சேரன் படையில் சுமார் நாலாயிரம் வீரர்கள் இருந்தாலும் அவற்றில் பெரும்பாகம் புரவிப் படையாயிருந்ததை அவன் கவனித்தாள். தவிர மீதியுள்ள சுமார் ஆயிரம் காலாட்களும் புரவிப்படையின் இரு பகுதிகளிலும் பிரித்து நிற்க வைக்கப் பட்டிருப்பதையும் பார்த்துப் பெரும் பலவீனமான அணிவகுப்பை எதிரி செய்திருப்பதை உணர்ந்தாள்.

அவள் கண்கள் சென்ற திசைகளையெல்லாம் கவனித்த வீரபாண்டியன் புன்முறுவல் கொண்டான். “உபதளபதி! முதல் போரில் இறங்கு முன்பாகவே படை அணிவகுப்பை எடை போடப் புரிந்துகொண்டாயே என்ற பாராட்டுச் சொற்களும் அவன் உதடுகளிலிருந்து உதிர்ந்தன.

அதுவரை மலையடிவாரத்தில் நின்ற சேரன் படைப் பிரிவை நோக்கிக்கொண்டு நின்ற இளநங்கை தன் விழிகளை வீரபாண்டியனை நோக்கித் திருப்பினாள். தனது சாம்பல் நிறப் பெரும் புரவியின் பக்கங்களில் முழந்தாள்களை ஊன்றி சற்று எழுந்து நின்ற வீரபாண்டியன் வதனம் பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாய் இருந்தது அவளுக்கு. அப்பொழுது மாலை நேரம் அணுகி கொண்டிருந்ததால் கடலில் மூழ்க யத்தனித்து கொண்டிருந்த கதிரவனின் மஞ்சள் கிரணங்கள் அவன் கவசங்களில் தாக்கிப் பதிலொளி கிளப்பியதால், அந்தப் பிரதிபலிப்பு அவன் முகத்திலும் ஜொலித்துக் கொண்டிருந்தது. அந்த அக்கினிக் கொழுந்தில் விரிந்த அவன் கழுகுப் பார்வையும், பயங்கர முகமாறுதலும், முகத்தின் அழகுக்குக் கழுகின் வேகத்தையும் பார்வையையும்கூட அளித்திருந்தது. சிறு பட்சிகள் மீது இறங்கத் தயாராயிருக்கும் பெரிய வல்லூறு போல் கீழேயிருந்த சேரர் படையை எடை போட்டான் பாண்டிய இளவரசன் அப்படிச் சில விநாடிகள் எடை போட்டு அவளை நோக்கித் தன் கழுகுக் கண்களை திருப்பிய வீரபாண்டியன் சொன்னான்: “உபதளபதி! நீ! நினைத்தது சரி. எதிரி காலாட் படை நடுவில் நிறுத்தி புரவிப்படையை இரு எண்களாகப் பிரித்துப் பக்கங்களில் நிறுத்தியிருக்க வேண்டும்” என்று.

“மலைச்சரிவில் வேகமாக இறங்கும் புரவிகள் மீது அம்பு எய்து கொல்ல தரையில் மண்டியிட்டு உட்கார்ந்து சில வளைத்து அம்பு தொடுக்கும் காலாட்படை உதவும். அதை எதற்காகப் பக்கவாட்டில் நிறுத்தியிருக்கிறான் எதிரி?” என்று வினவினான் இளநங்கை.

“எதிரிக்கு நமது பலம் தெரிந்திருக்கிறது” என்று கூறினான் வீரபாண்டியன்.

“ஆம், ஆம்,” என்று கூறினாள் இளநங்கை.

“ஒற்றர்களைக் கொண்டு நானே தெரியப்படுத்தினேன் இரண்டு நாட்களுக்கு முன்பு” என்று வீரபாண்டியன் நினைவுறுத்தினான் அவளுக்கு.

“கோட்டாற்றுக் கரைமீது இளைப்பாறுகையில் முன்னோடிகளை அனுப்பினீர்களே? அதுதான் தெரியுமே எனக்கு.”

“அதன் உபயோகம் இப்பொழுது தெரிகிறதா?

“என்ன உபயோகமோ?”
இரண்டாயிரம் வீரர் கொண்ட சிறு படை எதிரியின் பெரும் படையை நேர்முகமாகத் தாக்கும் என்று எந்தப் படைத் தலைவனும் எதிர்பார்க்கமாட்டான். சிறு படை எப்பொழுதும் இரு கூறாகப்பிரிந்து பக்கவாட்டுகளில் தாக்கும் என்பதுதான் சம்பிரதாயப் போர். சம்பிரதாயத்தை நாம் சிறிது மாற்றுகிறோம்.” இதைச் சொன்ன அரபாண்டியன் இளநங்கையை உற்று நோக்கினான்.

அப்பொழுது அவன் போர்முறை அவளுக்குப் புரிய வில்லை. ஏதும் விளங்காத பார்வையை அவன்மீது விசினாள், “நீங்கள் சொல்வது விளங்கவில்லை.” என்றாள்.

வீரபாண்டியன் அவள் கண்களுடன் தனது கண்களை நன்றாக உறவாட விட்டுக் கூறினான். “உபதளபதி! நமது படை இருகூறாகப் பிரிந்து பக்கவாட்டுகளில் இறங்கித் தாக்கும் என்று எதிர் பார்க்கிறான் எதிரி. அது சம்பிரதாயப் போர். அதனால் தான் பக்கவாட்டுகளில் வில் வீரரை நிறுத்தி வைத்திருக்கிறான். நமது படைகள் பிரிந்து மலைச் சரிவில் இறங்கித் திரும்பிப் பக்கவாட்டுகளில் வருமானால், எதிரி காலாட்படையினர் மண்டியிட்டு வில்வளைத்துப் புரவிகளின் வயிறுகளில் அம்பெறிவார்கள். புரவிகள் அலறி விழும். வீரர்கள் உருண்டு புரளுவார்கள். அந்தச் சமயத்தில்! எதிரியின் புரவிப்படை இரண்டாகப் பிரிந்து மலைச் சரிவில் உருண்டு எழுந்திருக்க முயலும் வீரர்கள்மீது பாய்ந்து விடும். அப்பொழுது முடிவு ஒன்றுதான். நமது படை அழிந்துவிடும். இதுதான் வழக்கம்.”

அந்த விளைவை நினைத்துப் பார்க்கவும் அஞ்சினாள் இளநங்கை. “அப்படியானால் நாம் என்ன செய்யப்போகிறோம்?” என்றும் வினவினாள் அச்சத்துடன்.
வீரபாண்டியன் புரவியில் நன்றாக அமர்ந்து நிமிர்ந்தான். பிறகு கூறினான் “பழக்கத்தை மாற்றப் போகிறோம்?” என்று.

“அப்படியானால்…” என்று துவங்கிய இளநங்கை வாசகத்தை முடிக்கவில்லை. வீரபாண்டியனின் துணிகரத் திட்டம் அவளுக்கு மெல்லப் புலனாகியது.

“நமது புரவிப்படை நேராக மலைச் சரிவில் வேகத்துடன் இறங்கும்…” என்றான் வீரபாண்டியன்.

“உம்!” இளநங்கை மூச்சை இழுத்துப் பிடித்தும் கொண்டாள். உபதளபதியாகப் படைக்குத் தலைமை வகித்து நடத்தும் முதல் போர் தனக்கு அது என்ற நினைப்பினால்.

“மலைச்சரிவு இறக்கம் நமக்கு அதிக வேகத்தைத் தரும். அந்த வேகத்துடன் இறங்கினால் தமது புரவிய படையின் தாக்குதலை எதிரியின் புரவிப்படை தாங்க முடியாது. நாம் இறங்கும் வேகத்திலேயே தாக்கி அதைப் பிளந்துவிட வேண்டும்” என்று கூறிய வீரபாண்டியன் மேற்கொண்டு அவளுடன் சம்பாஷணையில் இறங்காமல் உத்தரவுகளைப் பிறப்பித்தான்.

“உபதளபதி! நமது புரவிப் படை இப்பொழுது லேசாக இரண்டாகப் பிரியும். சிறிது நேரம் இறங்காமல் காலம் தாழ்த்தும். எதிரி தனது திட்டம் சரிதானென்று நினைப்பான். ஒரு பிரிவின் தலையில் நீயும், இன்னொன்றின் தலையில் நானும் நிற்போம். அப்படிப் பிரிந்த வண்ணமே மெல்ல தமது இரு பிரிவுகளும் சில அடிகள் மலைச் சரிவில் இறங்கும். பிறகு, திடீரென நாமிருவரும் ஒன்று சேர்ந்து பாய்ந்து இறங்குவோம். எதிரியின் படையை நோக்கி. இதே சமயத்தில் நமக்குப் பின்னாலிருக்கும் படைகளும் ஒன்று பட்டுக் கோட்டை வாசலை இடிக்கும். பெரும் மரத்தூண் போல் எதிரிமீது மோதும். நாமிருவரும் எதிரிப் படை மீது விழுந்ததும், நான் படையை ஊடுருவிச் சென்று விடுகிறேன். நீ விளிம்பிலேயே நின்று போரிடு. நான் எதிரிப் படையை ஊடுருவிச் சென்றபின் திடீரெனத் திரும்பித் தாக்குவேன். உன் படைப்பிரிவு முன் விளிம்பிலும் என் படைப் பிரிவு பின் விளிம்பிலும் இருக்க, இடையே சேரன் புரவிப்படை அகப்பட்டுக் கொள்ளும். கதவுகளுக்கிடையில் அப்பளம்போல் நொறுங்கிவிடும்” என்றான் வீர பாண்டியன்.

இளநங்கை அவன் உத்தரவைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாகத் தலையை அசைத்தாள், அதன் பின்பு தனக்குப் பின்னாலிருந்த காலாட்படைத் தலைவனொருவனை அழைத்துச் சொன்னான் வீரபாண்டியன். “புரவிப் படை இறங்கிப் பாதி தூரம் சென்றதும் காலாட்படை இரு பிரிவாகப் பிரிந்து மலைச்சரிவுகளில் இறங்கி எதிரியின் இரு பக்கங்களிலு முள்ள காலாட்படையுடன் போரிடட்டும். இதனால் காலாட்படையுடன் காலாட்படை மோதும். புரவிப்படையுடன் புரவிப்படை மோதும். புரிகிறதா?

புரிந்து கொண்டதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான் காலாட்படைத்தலைவன். கடைசியாக இளநங்கையை நோக்கிய வீரபாண்டியன், “இளநங்கை! உன் முதல் போர் இது! இதில் வீரவாகை நீ சூடிவிட்டால் உன் பெயர் வரலாற்றில் நிலைக்கும்” என்று அன்புடன் கூறினான். எதிரிப் படைகளைக் கண்ட பிறகு முதல் முதலாக அவன் தன் பெயரைச் சொல்லி அழைத்ததை உணர்ந்த இளநங்கை, “இன்னும் நான் பெண் என்பதை நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்” என்று தனக்குள் கூதிக்கொண்டாள். அந்த நினைப்பு அவளுக்குப் பெரும் இன்பத்தை அளித்தது. அந்த இன்பம் இணையற்ற பலத்தையும் அளித்தது. காதலனின் பக்கத்தில் நின்று போராடும் பாக்கியம் தனக்கு ஏற்பட்டதை நினைத்துப் பெருமிதம் அடைந்த இளநங்கை, வீரபாண்டியன் வாளை உயர்த்திய அதே சமயத்தில் தன் வாளையும் உயர்த்தினாள்.

அந்த இருவர் வாட்களும் உயர்ந்ததும் கொம்புகள் ஊதின. முரசுகள் ஆர்த்தன. புரவிப் படை இரண்டாகப் பிளவுபட்டு மெல்ல மெல்ல மலைச்சரிவில் இறங்கியது. ஒரு பிரிவின் தலையில் இறங்கிக் கொண்டிருந்த இளநங்கை கதிரவன் மறைந்து விட்டதையும், இருள்சூழ முயலுவதையும் கண்டான். எதிரியின் புரவிப்படை பெரும் சுவர்போல் அவள் கண்களுக்கெதிரே காட்சியளித்தது. அப்படையினர் இருள் மூளுமுன்பாக முன்னெச்சரிக்கையுடன் பந்தங்களையும் ஆங்காங்கு கொளுத்திக் கொண்டதையும் கவனித்தான்.

வீரபாண்டியனின் சாம்பல் நிறப் புரவி ஒரே நிதானமான தடையுடன், பொதிய மலைக்காட்டில் கேட்ட அதே சீரான குளம்பொலியுடன் மலைச்சரிவில் இறங்கியது. அந்த நிதானத்திலேயே இளநங்கையும் தன் புரவியை இறக்கினாள். இப்படிச் சில அடி தூரம் இரு பிரிவுகளாகப் பாண்டியப் படை இறங்கியதும், வீரபாண்டியன் வான் ஆகாயத்தில் திடீரென எழுத்து மும்முறை ஆடியது கொம்புகள் பீறிட்டு அலறின. இளநங்கை தனது புரவிப் படைக்கு வாட்சைகை செய்து, வீரபாண்டியனின் புரவியுடன் தன் புரவியை இணைத்தாள். பிரிந்த பாண்டியப் படை கூடிய விநாடியில் வெகு வேகத்துடன் மலைச்சரிவில் பாய்ந்து சென்றது.
அடுத்து நிகழ்ந்தது பெரும் பயங்கரம். பாய்ந்து வரும் பாண்டியப் புரவிப் படையை எதிர்க்கப் புரவிப் படையைத் தவிர வேறு மார்க்கமில்லாததால் புரவிகளிலிருந்து வேல்களை எறிய உத்தரவிட்டான் சேரர் படைத்தலவன். சில வேல்கள் பறந்தவுடனேயே இறங்கிவிட்ட பாண்டியப் படை பெருவேகத்துடன் எதிரியுடன் மோதிவிட்டது.

படைகள் மோதிய வேகத்தால் சற்றே தளர்ந்த திரியின் புரவிப்படை, பூகம்பத்தால் பீடிக்கப்பட்ட கட்டிடம் போல் ஒருமுறை உலுங்கி விரிசல் கொடுத்தது. வீரர்களை வெட்டியும், வேலால் தாக்கிப் புரவிகளிலிருந்து வீழ்த்தியும் உட்புகுந்து விட்ட வீரபாண்டியன் எதிரியின் டையை ஊடுருவிச் சென்றான். இளநங்கையும் உருவிய வாளாலும் வேலாலும் எதிரிப் படையின் ஒரு பகுதியைத் தாக்கினாள். அந்தப் போர் அவளுக்குக் கன்னி முயற்சி, புது அனுபவம். தன்னந்தனியே வாளையும் வேலையும் அவள் கையாண்டு, கொற்கையின் துஷ்ட வாலிபர்களைச் சமாளித்திருக்கிறாள். கொற்கைப் படைப் பயிற்சியிலும் பங்கு கொண்டிருக்கிறாள். ஆனால் இத்தகைய பயங்கரப் போரில் அவள் ஈடுபடுவது முதல் தடவை. அதற்கு அவளை வீரபாண்டியன் பலமாகத் தயார் செய்திருந்தான். எதிரி தாக்கும்போது குதிரையைத் திருப்பும் முறை, வாளையும் வேலையும் உபயோகப்படுத்தும் முறை, அனைத்தும் போதித்திருந்தான். ஆனாலும் அனுபவத்தில் அவை வருவது இப்பொழுதுதானே?

இருப்பினும் பயிற்சியை நன்றாகப் பயன்படுத்தினான் இளநங்கை. அவள் மார்பையும் முகத்தையும் காத்த இரும்புக் கவசத்தின்மீது தாக்கிய வேல்களையும் வாட்களையும் லட்சியம் செய்யாமல், எதிரியின் புரவிப் படையைத் தாக்கினான். வீரபாண்டியன் உத்தரவுப்படி விளிம்பிலேயே நின்று தனது படைகளைத் தாக்க உத்தரவிட்டாள். சுமார் இரண்டு நாழிகைக்குள் வீர பாண்டியன் எதிரிப் படையை ஊடுருவிக் கடைசிவரை சென்று திடீரெனத் திரும்பினான். அவன் படைப்பிரிவும்கும் இளநங்கையின் படைப்பிரிவுக்கும் இடையே சேரன் புரவிப்படை அகப்பட்டுக் கொண்டது.

போர் மும்முரமாக நடந்தது; புரவிகள் ஈட்டிகள் தாக்கி அலறி விழும் ஒலிகளும், வாட்களும் ஈட்டிகளும் உராயும் ஒலிகளும், காயமுற்று விழும் வீரர்களின் மரண ஒலங்களும் பெரும் பயங்கரத்தை விளைவித்தன. புரவிய படை போராட முற்பட்ட சிறிது நேரத்துக்குள் கைகலத்த காலாட்படையின் கோஷம்வேறு வானைப் பிளந்தது இருள் மூண்டு விட்டதால் பந்தங்களின் ஜ்வாலைகள் கூடப் பயங்கரமாகத் தெரிந்தன.

அரை ஜாமத்திற்குள் எதிர்பாராதவிதமாக முறியடிக் கப்பட்ட எதிரிப்படை, கோட்டைக்குப் பின்வாங்க முயன்றும் பயனில்லை. பின்புறத்தில் மீண்டும் சுழன்ற சென்ற வீரபாண்டியன் புரவிப்படை அவர்களைத் தேக்கித் தாக்கியது. ஆகவே கோட்டைத் தலைவன் சமாதான சங்குகளை ஊதப் பணித்தான், அந்தச் சங்கொலிகள் கேட்டதும் சேரர் படையின்பகுதி போர் நிறுத்தம் செய்தது புரவியின்றி நாலைந்து வீரர்களுடன் நடந்துவந்த எதிரிய படைத்தலைவனைப் புரவி மீதிருந்தே சந்தித்த வீரபாண்டியன், “உங்கள் பெயர்?” என்று வினவினான்.

“விஜயவர்மன்,” என்று பதில் கூறினான் கோட்டைத் தலைவன்,
“விஜயவர்மரே! நீங்கள் பெரும் வீரர்; சம்பிரதாயப் படி. போர் நடந்திருந்தால் உங்களை நான் வென்றிருக்க முடியாது.” என்றான் வீரபாண்டியன்.

எதிரியின் பாராட்டுகளைக் கேட்ட விஜயவர்மன் கண்கள் வியப்புடன் வீரபாண்டியனை ஏறிட்டு நோக்கின. “நன்றி,” என்ற ஒற்றைச்சொல் துயரத்துடன் உதிர்ந்தது. அவன் நாவிலிருந்து, அத்துடன் அவன் கூறினான் “கோட்டைக் கதவுகளைத் திறக்க உத்தரவிட்டு விட்டேன்” என்று.

வீரபாண்டியன், “நீங்களும் புரவியொன்றில் ஏறி வாருங்கள்” என்று கூறிவிட்டு, இளநங்கையை நோக்கித் திரும்பி, “உபதளபதி! சரணடைந்தவர்களைக் காவல் செய்ய ஏற்பாடு செய். பிறகு நீயும் புறப்பட்டுக் கோட்டைக்கு வா, கோட்டைத் தலைவன் மாளிகையில் என்னைச் சந்தி,” என்று உத்தரவிட்டுத் தன் புரவியைத் திருப்பினான கோட்டையை நோக்கி.

அப்பொழுதுதான் இளநங்கையை நோக்கிய விஜய வர்மன் வாயைப் பிளந்தான். “இது…இது” என்று தடுமாறவும் செய்தான்.

புரவியைச் சத்துத் தேக்கிய வீரபாண்டியன் புன்முறுவல் செய்து, பெண்தான், இருப்பினும் பயங்கரப் பெண். இவள் போராடியதைத்தான் நீங்கள் பார்த்தீர்களே!” என்று கூதிப் பெரிதாக நகைத்துவிட்டுக் கோட்டையை நோக்கிப் புரவியை நடத்தினான்.

பாண்டியப் படையின் உபதளபதி ஒரு பெண்ணென்று அறிந்ததும் சிலையெனச் சில விநாடிகள் நின்ற விஜயவர்மனும் தன்னைச் சமாளித்துக்கொண்டு புரவியொன்றில் ஏறி வீரபாண்டியனையும் அவன் வீரர்களையும் தொடர்ந்து சென்றான். சென்ற நிலையிலும், “உண்மை, பயங்கரப் பெண்தான்” என்று சொல்லிக் கொண்டே சென்றான்.

Previous articleRaja Muthirai Part 1 Ch45 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch47 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here