Home Historical Novel Raja Muthirai Part 1 Ch5 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch5 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

76
0
Raja Muthirai Part 1 Ch5 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch5 |Raja Muthirai Part 1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch5 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 5 பஞ்சணை நொந்ததடி

Raja Muthirai Part 1 Ch5 |Raja Muthirai Part 1|TamilNovel.in

தந்தையும் தானும் மட்டுமே தனித்திருந்த அந்த வேளையில், வேறு யாருமே உட்புகவோ ஒட்டுக் கேட்கவோ சாத்தியமில்லாத அந்த அந்தரங்க அறையில், ‘ராஜ முத்திரை’ என்ற சொல்லைத் தந்தை எதற்காக அத்தனை ரகசியமாகச் சொன்னார் என்பது புரியவில்லை கோட்டைக் காவலன் செல்விக்கு. அந்த வாலிபன் தந்த பொருளைக் கண்டதும் அவர் பிரமித்தது. அதுபற்றி விவரித்தபோது அவர் பதறியது. எல்லாமே விளங்காத விந்தையாயிருந்தது இளநங்கையின் இதயத்துக்கு ராஜ முத்திரை என்று சொன்ன பிறகு அவர் தன்னை நோக்கிய நோக்கும் விசித்திரமாயிருந்தது அவள் புத்திக்கு, உண்மையில் அந்தப் பொருள் யாருடைய ராஜ முத்திரையாகவும் இருக்க முடியாதென்பதை அவள் உணர்ந்தே இருந்தாள். “சோழர்கள் இலச்சினையாயிருந்தால் புலி பொறித்திருக்க வேண்டும். இப்பொருள் சேரமன்னர்களைச் சேர்ந்ததானால் வில்லும் அம்புமிருக்க வேண்டும். பாண்டிய மன்னர்கள் முத்திரையானால் பொறிக்கப்பட வேண்டியவை இரண்டே இரண்டு மீன்கள், இதில் கோடரி இருக்கிறது. யானை இருக்கிறது. ஒற்றை மீனிருக்கிறது. இதைக் கண்டு ராஜமுத்திரை என்கிறார்; மிரளுகிறார் தந்தை. இதற்குக் காரணமென்ன?” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள் அவள்.

அவளுடைய தந்தையும் அந்தச் சில விநாடிகளில் தீவிர சிந்தனையிலேயே இறங்கியிருந்தார். தான் ராஜ முத்திரை என்று உண்மையை உதிர்த்த பிறகும்கடத் தனது மகள் அகதப்பற்றி வியப்பைக் காட்டாதிருந்தது அவருக்கு எந்த விதத்திலும் ஆச்சரியமாயில்லை. ஓராண்டு காலமாகப் பாண்டி நாட்டில் ஏற்பட்டுக் கொண்டிருந்த மாபெரும் மாற்றங்களை அக்கம் பக்கத்து அரசுகளே உணராதிருக்க, ராஜரீகத்தைப்பற்றி ஏதுமறியாத இளதங்கை என்ன புரிந்து கொள்ள முடியும் என்றே எண்ணினார் அவர். இருப்பினும் ராஜமுத்திரையைப்பற்றியோ அதைக் கொடுத்தனுப்பியிருக்கும் வாலிபனைப்பற்றியோ அவள் ஏதாவது உளறி விட்டால் பேராபத்து நேர்ந்துவிடுமென்பதை அவர் உணர்ந்திருந்ததால், அப்படி ஏதும் நேரிடாது தடுக்க மகளை எச்சரிக்க முற்பட்டு விஷயத்தையும் விளக்கலானார். அதை முன்னிட்டுக் கவலையும் அன்பும் மிகுந்த குரலில், “மகளே! என்று அழைக்கவும் செய்தார்.

இள நங்கை மெல்லத் தன் விழிகளை உயர்த்தி அவரை நோக்கி, “ஏன் அப்பா?” என்று வினவினாள்.

“உன் சிந்தனையில் ஓடுகிற சந்தேகம் புரிகிறது எனக்கு” என்றார் கோட்டைக் காவலர் நிதானமாக.

“சந்தேகமா?” என்று ஏதும் சந்தேகமில்லாதது போல் பாசாங்கு செய்தாள் இளநங்கை.

“சங்கடப்படாதே மகளே! உனக்கேற்பட்டுள்ள சந்தேகம் இன்று பாண்டிய நாடுள்ள நிலையில் யாருக்கும் ஏற்படுவது சகஜம்” என்ற கோட்டைக்காவலர், “இந்த ராஜ இலச்சினை இன்று எந்த மன்னருக்குமில்லையே? இதைப்போய் ராஜ இலச்சினை என்று கூறுகிறாரே தந்தை என்று வியக்கிறாய் நீ.” என்றும் குறிப்பிட்டார்.

தன் மனத்திலிருந்ததை தந்தை அப்படியே சொல்லி விட்டதைக் கண்ட இளநங்கை பெருவியப்புக்குட்பட்டு, “ஆம், தந்தையே எனக்கு வியப்பாகத்தானிருக்கிறது.” என்று ஒப்புக் கொண்டாள்.

கோட்டைக் காவலர் சற்றே நின்ற இடத்தில் அசைந்தார். பிறகு சொன்னார் மிக நிதானமாக, “மகளே! இந்த வியப்பு உனக்கு மட்டுமல்ல. இதைப் புதிதாகப் பார்க்கும் யாருக்குமே ஏற்படும். இதைப் பற்றிய விவரம் பாண்டியரின் பண்டைக்காலச் சரித்திரத்துடன் தொடர் கொண்டது.” என்று.

பண்டைக் காலச் சரித்திரமா? அதைப்பற்றி இப்பொழுது என்ன? நிகழ்காலத்துக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டாள் இளதங்கை.

கோட்டைத் தலைவர் கண்களில் தீப்பொறி பறந்தது “பெண்ணே! முட்டாள்கள் கேட்கும் கேள்வி இது பண்டைக் காலமில்லாமல் நிகழ்காலம் ஏது? சரித்திரமில்லாமல் சமுதாய வளர்ச்சி ஏது? மிருகங்களுக்கும் மனிதனுக்கும் ஒரு வித்தியாசம்தானிருக்கிறது மகளே. அதுதான் வரலாறு. மனிதன் சரித்திரத்தையும் சம்பித் தாயங்களையும் சிருடித்திருக்கிறான். அவை ஒரு பெரும் சங்கிலித்தொடராக ஆண்டுகளில் வளர்ந்து கொண்டு போகின்றன. அறிவாளியாயிருப்பவன் அதன் ஆதியையும் பார்க்கிறான். தானிருக்கும் அன்றைய நிலையையும் பார்க்கிறான். அந்தப் பழைய பெருமைக்குத் தன்னை வளர்த்துக் கொள்ளப் பார்க்கிறான், அந்த வளர்ச்சியில் பழைய குறைகளை நிவர்த்தித்துக் கொள்ளவும் முயலுகிறான். சாத்திரம் இதற்கு உதவுகிறது. சரித்திரம் இதற்கு மட்டுமல்ல உதவுவது மகளே! சரித்திர நிகழ்ச்சிகளை வைத்துப் புலவர்கள் காப்பியங்களை இயற்றிப்பிருக்கிறார்கள். இல்லையேல் இந்தாட்டுக்குச் சிலப்பதி காரம் ஏது? கலிங்கத்துப்பரணி தானேது? சரித்திர நோக்கில் அறிவு விசாலப்படுகிறது. இலக்கியம் மலருகிறது. வேறெதிலும் இலக்கியம் மலருவதில்லை. இதையறியாதவர்கள் கோஷ்டியில் நீயும் சேரவேண்டாம். புத்திசாலியாக விஷயங்களைப் பார்,” என்று விடுவிடுவென்று பேசிக் கொண்டுபோன கோட்டைத் தலைவர் சற்று நிதானித்து, “மகளே! உன்னைத் தொடர்ந்து வந்த வாலிபன் கைக் கங்கணத்திலிருந்த பெரிய முத்தைப்பற்றி நீ சாதாரணமாக நினைத்தாய். நான் பாண்டி நாட்டுச் சட்ட திட்டத்தை விளக்கிய பின், அந்த முத்து அரச குலத்தைச் சேர்ந்தவரிடத் தானிருக்கமுடியும் என்பதைப் புரிந்து கொண்டாயல்லவா?” என்று வினவினார்.

‘புரிந்து கொண்டேன்’ என்று சொல்வதற்குப் பதிலாகத் தலையை அசைத்தாள் இளநங்கை.

கோட்டைத் தலைவர் மேலும் கனவில் பேசுபவர் போல் பேசத் தொடங்கி, “அப்படி இதுவும் ஒரு பொருள் மகளே! இதன் சரித்திரம் மிகப் பழமை கொண்டது. சுமார் ஐந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டது.”

இளநங்கை விஷயத்தை அறிந்து கொள்ளும் நோக்கத் திலிருந்ததால் ஏதும் பேசவில்லை. “சொல்லுங்கள் தந்தையே” என்றாள்.

“ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னால், பொருநையில் மணலடித்து மரக்கலங்கள் உட்புகமுடியாத நிலை ஏற்படுவதற்கு முன்னால் இந்தக் கொற்கை பெரும் துறை முகமாயிருந்ததென்று சொன்னேனல்லவா?” என்றார் கோட்டைக் காவலர்.

“ஆம். சொன்னீர்கள்,” என்றான் இளதங்கை.

“அந்த நாட்களில் பாண்டி நாட்டுக்கு இன்றிருப்பதைப் போல் தலைநகரம் ஒன்றல்ல.”

“இரண்டா!”

“ஆம், இரண்டு, ஒன்று, மதுரை, இன்னொன்று இந்தக் கொற்கை.”

“எதற்காக இரண்டு தலைநகரங்கள்? பாண்டி மன்னர் ஆட்சி பிரிந்து கிடந்ததா?”

“இல்லை ஆட்சி ஒன்றுதான். ஆனால் தலை நகரங்கள் இரண்டு மதுரை, மன்னரின் தலை நகர். கொற்கை, பட்டத்து இளவரசரின் தலைநகர், பாண்டி நாட்டுச் செல்வமெல்லாம் கொற்கையிலிருந்ததால், அந்தச் செல்வத்தை ஈடில்லா முத்து வாணிபத்தைப் பாதுகாக்கத் தேவையிருந்தது. அதற்காகப் பட்டத்து இளவரசர் கொற்கையில் இந்தக் கோட்டையில் வசித்தார். பாண்டி நாட்டின் பெரும் படைப் பிரிவு ஒன்றும் இங்கிருந்தது.

இந்தக் கோட்டையையும் முத்துக் கடலையும் முத்தங்காட்டியையும் யவன வீரர்கள் பாதுகாத்து வந்தனர். இன்று கூடக் கொற்கைக்கும் காயல் பட்டணத்துக்கும் இடையிலுள்ள சாலை பெரியதுதான். ஆனால் இதைவிடப் பன்மடங்கு பெரிய சாலைகள் சதா உருண்டோடும் ரதங்கள், புர வீரர்கள் கூட்டங்கள் இவை இருந்ததாகக் கூறப்படுகிறது கொற்கையில், கொற்கையின் பொற்காலம் அது. அந்த காலத்தில் இங்கிருந்த இளவரசருக்குத் தனிப்பட்ட படைப் பிரிவு மட்டுமல்ல. விசேட அதிகாரங்கள் மட்டுமல்ல. தனி இலச்சினையும் இருந்தது….” என்ற கோட்டைத் தலைவன் தமது மகளை அர்த்த புஷ்டியுடன் நோக்கினார்.

“அந்த இலச்சினை…?” புரிந்து கொண்ட பாவனையில் கேட்டாள் இளநங்கை.

“நீ கையில் வைத்திருப்பது பாண்டி நாட்டின் இரண்டாவது ராஜமுத்திரை, இளவரசர்களின் பிரத்தியே இராஜ இலச்சினை.” என்றார் கோட்டைக் காவலர்.

“அப்படியா?” என்று வினவினாள் இளநங்கை. ஏதோ கேட்கவேண்டும் என்பதற்காக.

“ஆம் மகளே! கோடரியும் யானையும் கலந்த சின்னம் அந்தப் பழைய ராஜமுத்திரை. அது மீண்டும் அமுலுக்கு வந்திருக்கிறது. பாண்டிநாட்டு மகர மீனையும் இணைத்து இது அமுலுக்கு வந்திருப்பது என்னையும் இன்னும் சிலரையும் தவிர யாருக்கும் தெரியாது. ஆனால் இத்தனை துரிதத்தில், இப்படி எதிர்பாராதவிதமாக, அதுவும் உன் மூலமாக என்னிடம் இது வரும் என்று நான் எதிர் பார்க்கவேயில்லை. அதுவும் இதைக் கொடுத்தனுப்பயிருப்பவர் பத்து நாட்களாகக் கொற்கையில் பகிரங்கமாக நடமாடிக் கொண்டிருப்பதும் கோட்டைப் பக்கம் தலை காட்டாதிருப்பதும் விந்தையாயிருக்கிறது” என்று கோட்டைக் காவலர் கவலையுடன் கூறினார்.

யாரவர்?” என்று வினவினாள் இளநங்கையும் குழப்பத்துடன்.

“எனக்குத் தெரியவில்லை மகளே, யாரோ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இளவரசர்களில் ஒருவராகக் கூட இருக்கலாம். யாரென்பதை நாளைக் காலையில்தான் நாம் அறியமுடியும். அதுவும் அவர் சொன்னபடி கோட்டைக்கு வந்தால்,” என்றார் கோட்டைக் காவலர்.

“வராவிட்டால்?” என்று கேட்டாள் இளநங்கை.

“வீரர்களை விட்டுக் கொற்கையைச் சல்லடை போட்டுச் சவிக்கவேண்டும்.”

“ஏன்?”

“அவரைக் காப்பது எனது கடமை. இந்த ராஜ முத்திரையைப் பார்த்தபின்பு அதை வைத்திருப்பவருக்குப் பணித்து சொற்படி நடக்கவேண்டியது என் பொறுப்பு, அவர் யார்? ஏன் வந்திருக்கிறார்? இங்கு என்ன எதிர் பார்க்கிறார்? ஏதும் புரியவில்லையே மகளே! சரி சரி, தீ போய் உறங்கு, இன்னும் ஒரு ஜாமமிருக்கிறது. எப்படியும் நான் உறங்க முடியாது” என்றார் கோட்டைக் காவலர்.

இளநங்கை வேறு ஏதும் பேசாமல் தந்தையிடம் விடை பெற்றுக்கொண்டு தனது அறையை நோக்கி நடந்தாள். அறைக்குள் சென்றதும், அங்கு வாயிற்படியில் உறங்கிக் கொண்டிருந்த பணிமகளை எழுப்பாமலே தனது பஞ்சணையில் சென்று மெல்லப் படுத்தாள். படுத்தாளே தவிர உறக்கம் சிறிதும் பிடிக்கவில்லை அவளுக்கு. உலகத்திலேயே பெயர்போன மெல்லிய துணியில் இலவம் பஞ்சடைத்த இன்பப் பஞ்சகமனதான் அது. அவளுக்குத் தலையிலும் முப்புறங்களிலும் கிடந்த அணைகளும் மென்மையாகவே இருந்தன. அலங்கார தீபத்தின் ஒளியும் மிக இன்பமாகவே இருந்தது. ஆனால் அத்தனை இன்பத்தையும் அவளால் சிறிதளவும் அனுபவிக்க முடியவில்லை. வேதனையே அவள் இதயத்தை வளைத்துக் கொண்டிருந்தது. சில சமயங்களில் வெட்கமும் சூழ்ந்து கொண்டது. அன்றிரலின் நிகழ்ச்சிகளையே அவள் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்தாள். அந்த வாலிபனின் சிரிப்பு உதிர்த்த கண்கள் அப்பொழுதும் அவளைப் பார்த்து தகைத்தன. அவகாது ஒரே சீரான பாதங்கள் அவள் இதயத்தின் மீதும் நடந்தன. அவன் தன்னை மடியில் போட்டுக் கொண்டு இடைக்குச் சிகிச்சை செய்ததை எண்ணியதும், அவள் முகம் மட்டுமல்ல, இதயம் கூடச் சிவந்தது. ‘இடைக் காயத்தைப் பரிசோதிக்கக் கையை வைத்து அத்தனை அழுத்த வேண்டுமா? சேலையை அத்தனை தூரம்…’ என்று எண்ணத் துவங்கி எண்ணத்தை அறுத்துக் கொண்டாள். ‘அவன் யாராயிருக்கும்? இளவாசனாயிருப்பானா?’ என்றும் கேட்டுக் கொண்டாள். ‘எனக்கெப்படித் தெரியும்? தந்தையே குழம்புகிறாரே! அடடே! தந்தையிடம் சொல்ல மறந்துவிட்டேனே. அவர் இடையில் ஒரு பொன் கோடரி வைத்திருந்தாரே! அதைச் சொல்லவில்லையே நான்!’ என்று ஏதேதோ உள்ளூர பேசிக் கொண்டு கண்களை மூடினாள். எதையும் நிவர்த்திக்கும் அசதி அவளை ஆட்கொண்டது.

அவள் கண்விழித்தபோது. பொழுது நன்றாக புலர்ந்திருந்தது. தூரத்திலிருந்த காயல் துறைமுகத்தில் எழுந்த அலைகளின் இரைச்சல் மிகக் கம்பீரமாகக் காதில் கேட்டது. தோப்பு மரங்களிலிருந்த தறுமலர்களைத் தாங்கி வந்ததால், கடற்காற்று உப்பின் வாசனையைத் தரவில்லை. நறுமணத்தையே தந்தது. அவள் கண்ணுக்கெதிரே இருந்த வளையத்தில் சினு பறவைகள் இரண்டு உட்கார்ந்து ஆடிக் கொண்டிருந்தன. தோப்பிலிருந்து வந்த பறவைகளில் இரண்டு, சாளரத்தின் கட்டையிலும் உட்கார்ந்து ‘கூகூ’ என்று கூவி அவளை எழுந்திருக்கத் தூண்டின.

இளநங்கை கண்களை நன்றாகக் கசக்கி விட்டுக் கொண்டாள். பஞ்சணையில் புரண்டாள். பிறகு மெல்ல எழுந்திருந்து தலையணையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். அந்தச் சமயத்தில் பணிமகள் வெளியிலிருந்த படி, “அம்மா! அம்மா! எழுந்து விட்டீர்களா?” என்று அவசரத்துடன் வினவினாள்.

எழுந்துவிட்டேன். வா உள்ளே” என்று இளதங்கை உத்தரவிட உள்ளே நுழைந்த பணிமகள், அவளைப் பார்த்து அசந்து நின்றுவிட்டாள் சில விநாடிகள்.

அவள் அப்படி நின்றதைப் பார்த்த இளநங்கை, “ஏனடி அப்படி விழிக்கிறாய்?” என்று கேட்டாள்.

“உங்கள் முகம் பேயறைந்த மாதிரி இருக்கிறது”

“இருக்கட்டுமே.”

“சிறிதும் உறங்கவில்லையா?”

“இல்லை “

“ஏன்?”

“பஞ்சணை நொந்ததடி” என்று சொல்லி நகைத்தாள் இளநங்கை.

அந்த உற்சாகத்தில் பங்கு கொன்ள மறுத்த பணிமகள் சொன்னாள், “அம்மா! சீக்கிரம் நீராடி உடை மாற்றிக் கொள்ளுங்கள். நான் தலை சீவிச் சிங்காரிக்கிறேன்.” என்றாள்.

“ஏன் எனக்குக் கல்யாணமா?” என்று கேட்டாள் இளநங்கை.

“எனக்குத் தெரியாது. சீக்கிரம் வரச் சொன்னார் உங்கள் தந்தை, அதுவும் நன்றாக அலங்கரித்துக் கொண்டு.” என்றாள் பணிமகள்.

“என்ன அவசரமாம்?” என்று கேட்டாள் இளநங்கை.

“அவர் வந்திருக்கிறார்” என்ற பணிமகள் குரலில் அதிர்ச்சி இருந்தது.

“யார் அந்த அவர்!” சீற்றமிருந்தது இளநங்கையின் கேள்வியில்.

“இளவரசர்!” என்று பணிமகள் மிகப் பணிவுடன் கூறினாள்.

Previous articleRaja Muthirai Part 1 Ch4 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch6 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here