Home Historical Novel Raja Muthirai Part 1 Ch6 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch6 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

64
0
Raja Muthirai Part 1 Ch6 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch6 |Raja Muthirai Part 1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch6 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 6 மறைந்த பிணங்கள்

Raja Muthirai Part 1 Ch6 |Raja Muthirai Part 1|TamilNovel.in

இளவரசர் என்ற சொல்லைக் கேட்டதுடே மிதமிஞ்சிய வியப்பு மண்டிய விழிகளைப் பணிமகள் மீது திருப்பினாள் இளநங்கை.

“என்ன! இளவரசரா? எந்த நாட்டு இளவரசர்? என்று வினவவும் செய்தாள் குரலில் வியப்பு ஒலிக்க.

“எனக்குத் தெரியாது. தங்கள் தந்தை அவரை இளவரசர் என்று அழைத்தார். தங்களை உடனே அழைத்து வரும்படியும் அவசர அவசரமாக உத்தரவிட்டார். அது மட்டுமல்ல. உத்தரவைக் கேட்டுக்கொண்டு நகர முயன்ற என்னை மறுபடியும் விளித்து, ‘இனநங்கை இளவரசர் முன்பு வரும்போது தனது நிலைக்குத் தகுந்தபடி வரட்டும் என்றும் கூறினார். இவ்வளவுதான் நான் அறிந்தது.’ என்றாள் பணிமகள்.

அத்தனை தூரம் பணிமகள் விவரித்தும் துரிதப்படுத்தியும் கூட இளநங்கை அதிக துரிதத்தைக் காட்டாமல் நிதானமாகவே பஞ்சணையிலிருந்து எழுந்திருந்தாள். வந்துள்ள மனிதன் தன்னைப் பத்து நாட்களாகத் தொடர்ந்து வரும் வாலிபனென்பதில் அவளுக்குச் சிறிதும் சந்தேகமில்லை . தவிர அந்த வாலிபன் இளவரசனென்ன, மதுரையின் மன்னனாகவே இருந்த போதிலும் தான் துரிதப்பட வேண்டிய அவசியமில்லை யென்று நினைத்தாள் அவள். ஆகவே எழுந்து இடையிலிருந்த காயக்கட்டில் நீர் படாமல் எச்சரிக்கையுடன் நீராட்டம் முதலிய காலைக் கடன்களை மிக நிதானமாகவே முடித்துக் கொண்டு, பணிமகளைத் தலை சீவ அனுமதித்தாள். இளநங்கையின் நிதானம் பணிமகளின் மனத்தைத் திக்கு திக்கென்று அடித்துக்கொள்ள வைத்த தானாலும், வீண தாமதமானால் கோட்டைக் காவலர் ஏது சொல்வாரோ என்ற பயம் அவளைப் பிடித்ததானாலும், அவள் இளநங்கையைத் துரிதப்படுத்த எதும் செய்ய முடியாதவளானாள். இளநங்கை சொற்படி நிதானமாகவே அவள் நீண்ட கருங்குழலைச் சீவிப் பின்னலிட்டு முடித்து, அதற்குண்டான ஒற்றை முத்துச் சரத்தையும் அதன்பின் புறத்தில் வளைத்துச் சூட்டினாள். பிறகு தானே திலகமிட்டுச் சாதாரண பஞ்சாடை புனைந்த இள நங்கையைப் பார்த்து, “அம்மா! வேறு பட்டாடைகள் இருக்கின்றனவே! அவற்றில் ஒன்றைக் கட்டிக் கொள்ளக் கூடாதா?” என்று கெஞ்சினாள் அந்தப் பணிமகள்.

“ஏன் பஞ்சாடை கட்டினால் என்ன?” என்று கேட்டாள் இளநங்கை.

*தங்கள் தந்தை….” என்று இழுத்தாள் பணிமகள்.

“தந்தை பட்டாடைதான் கட்டிக்கொண்டு வரச் சொன்னாரா?” இளநங்கையின் கேள்வியில் கேலி இருந்தது.

“இல்லை. தங்கள் திலைக்குத் தகுந்தபடி உடுத்து வரச் சொன்னார்.”

“அப்படித்தான் உடுத்தியிருக்கிறேன்.”

“நீங்கள் கோட்டைக் காவலர் செல்வி அல்லவா?”

“ஆமாம்.”

“கோட்டைக் காவலர் பாண்டி நாட்டின் பெரும் படைத் தலைவர்கள் கோஷ்டியில் சேர்ந்தவர்?”

“ஆமாம்.”

“அவர் மகள்.”

“பட்டாடைதான் கட்ட வேண்டுமா?”

“இளவரசர் முன்பு போகிறீர்கள்.”

*பஞ்சாடை கட்டினால் அந்த மன்மதன் என்னைப் பார்க்கமாட்டாரோ? போயும் போயும் ஆடையால்தானா எனக்கு மதிப்பு? தவிர…”

“என்னம்மா?”

“தமிழகத்தின் ஆடைகளில் எதை ரோமாபுரியின் சிங்காரிகளும் யவன அழகிகளும் விரும்புகிறார்கள் தெரியுமா! பட்டாடையையல்ல. நமது தமிழகத்தின் இணையற்ற கண்ணாடி போன்ற மெல்லிய பஞ்சாடைனயை. அதைத் தான் அணிந்திருக்கிறேன் இன்று. இதன் உயர்வை அறிந்து கொள்ள அத்த இளவரசனுக்குப் புத்தியிருக்கிறதா பார்ப்போம்!” என்று கூறிவிட்டு, பணிமகளை அழைத்துக் கொண்டு தந்தையின் அறையை நோக்கிச் சென்றாள்.

தந்தையின் அறைக்குச் சென்ற வழிமட்டுமல்ல, அவர் அறை வாசலிருந்த விதமும் விசித்திரமாயிருந்தது இவள் தங்கைக்கு. ஓர் இளவரசன் வந்தால் செய்ய வேண்டிய கட்டுக்காவல் மரியாதை எதையும் காணோம் தந்தை அறைக்குச் செல்லும் படிகளில். அறை வாயிலில் மருந்துக்குக் கூடக் காவலர் யாரையும் காணோம். இதனால் வியப்புற்ற இளநங்கை உடன் வந்த பணிமகளை நோக்கி “செல்வி! இளவரசருக்கு வரவேற்பு பலமாயிருக்கிறதே! என்று ஏளனம் சொட்டிய குரலில் வினவினாள்.

“ஆமம்மா! எனக்கும் வியப்பாகவே இருக்கிறது சாதாரணமாக இருக்கும் காவலர் யாரையுமே காணோமே என்றாள் பாணிமகன்.

“ஒருவேளை வந்திருப்பவர் இளவரசரல்லவோ?” என்று வினவினாள் இளநங்கை.

“தந்தையே சொன்னாரே இளவரசரென்று?’ என்றாள் பணிமகள் செல்வி.

அதற்குமேல் கேள்வி ஏதும் கேட்காமல் செல்வியை முன்போக விட்டுப்பின் தொடர்ந்தான் இளநங்கை. முன் சென்ற செல்வி தன்வரவை அறிவிக்கவே, தந்தையின் அறைக்குள் நுழைந்த இளநங்கை தன் தந்தையுடன் அந்த வாலிபனும் சாளரத்தின் அருகில் நின்றிருந்ததைக் கவனித்தாள், அசாத்திய உயரத்தின் காரணமாக அவன் வாளைந்து நின்றே சாளரத்துக்கு வெளியே எட்டிப் பார்க்க வேண்டியிருந்ததைப் பார்த்து, ‘அப்பா! எத்தனை உயரம்!” என்று பிரமிக்கவும் செய்தாள். அத்தனை உயரமிருந்தும் பார்வைக்கு அந்த உயரம் விகாரத்தை அளிக்கவில்லை. நீண்ட கைகளும் கால்களும், மெல்லிய உடலும் அந்த உயரம் சரிதானென்பதை வலியுறுத்தின. அவள் உள்ளே நுழைந்ததும், சாளரத்திலிருந்து திரும்பிய அந்த வாலிபன், பத்து நாட்களாக அவள் பார்த்துப் பார்த்துப் பயந்திருக்கும் அந்த நிதானமான ஆராய்ச்சிப் பார்வையை அவள் மீது செலுத்தினான். அந்தக் கண்களை அவளும் பார்த்தாள். அவற்றிலிருந்தது உறுதியா, மென்மையா, கடினமா என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் மேலுதட்டில் சற்றே அரும்பு விட்டுக் கொண்டிருந்த மெல்லிய மீசை மட்டும் இல்லையானால், அவனைக் குழந்தையென்று மதிப்பிடத்தான் தோன்றுமென அவள் எண்ணினாள். ஆனால் அவன் இடையிலிருந்த அந்தத் தங்கக் கோடரியும், பெருவாளும், கண்களின் நிதானமும், அவன் குழந்தையல்லவென்பதைச் சந்தேகமற நிரூபித்தன. அவன் கண்களில் திடீரென எழுந்த ஓர் ஒளிவீச்சு, ஓர் ஆராய்ச்சிப் பார்வை, அவள் கண்களை நிலத்தில் நிலைக்க விட்டது.

அவளை ஒரு விநாடிதான் பார்த்தான். அந்த வாலிபன். அதற்குள் அவள் அழகிய கருவிழிகள், பின்னால் பின்னிக் கொண்டையிட்ட போதிலும், முன்னால் முரட்டுத்தனமாகச் சிதறி நின்ற இரண்டொரு கருங்குழலிழைகள், கழுத்திலிருந்த சிறு முத்தாரம், அலட்சியத்துடன் ஒருமுறை குவிந்து அகன்ற பவள உதடுகள், வெண்கழுத்து, கீழோடிய சிற்றாடை, மறைத்தும் மறையாதிருந்த கால்களின் செழுமை, இவையனைத்தும் எடை போட்ட அவன், பத்து நாட்களாகக் காணாத ஒன்றை அன்று கண்டான். அதுதான் அவள் அணிந்திருந்த வெண்ணிறப் பஞ்சாடை. அதைக் கண்டதும் அவன் இதழ்கள் இளநகை கூட்டின. கோட்டைக் காவலர் தனது மகளை அவனுக்கு அறிமுகப்படுத்திய போதும், அந்த இளநகை தொக்கிக் கொண்டிருந்தது அவன் உதடுகளில்.

அதைக் கவனியாத கோட்டைக் காவலர், “இவன் என் மகள் இளநங்கை! அம்மா! இவர் இந்நாட்டு இளவரசர் சடாவர்மன் வீரபாண்டியத்தேவர்; பாண்டியர்ப் பிரஜைகள் அனைவரின் வணக்கத்துக்கும் உரியவர், என்றார்.

இளநங்கை, இம்முறை சற்று பயத்துடனேயே இளவரசனை ஏறெடுத்து நோக்கினாள். அப்படியொரு இளவரசன் பாண்டிய நாட்டில் உண்டு எனக் கேட்டதே இல்லை அவள். மதுரையில் ஓராண்டுக்கு முன்னால் அரியணை ஏறிய ஜடாவர்மன் சுந்தரபாண்டித் தேவரைப் பற்றி மட்டுமே அவள் கேள்விப்பட்டிருந்தாள், அவனென்ன, மக்களுக்கும் மன்னர் ஒருவரைப் பற்றித்தான் தெரியும். பாண்டிய மன்னர் குடும்பத்தில் அப்பொழுது பல பிரிவுகள் இருந்தன; பல இளவரசர்களும் இருந்தார்கள். யார் எவர் என்பதை மக்கள் அறிய வசதியுமில்லை; மக்களுக்கு அத்தகைய உணர்வுமில்லை.

பாண்டி நாடு பெரிதும் சீரழிந்த காலம் அது. இப்பொழுது மைசூர் என வழங்கும் ஹொய்சாள நாட்டு மன்னன் சோமேச்வரனும், சோழநாட்டு மூன்றாம் இராஜேந்திரனும், பல்லவனான கோப்பெருஞ்சிங்கனு மாகச் சேர்த்து பாண்டி நாட்டை உருத் தெரியாமல் அடித்திருந்த காலம் அது. அந்தக் காலத்தில் பாண்டி நாட்டு மன்னர்களே இரண்டாம் பட்சமாகக் கருதப்பட்டார்கள். பாண்டி ராஜ பரம்பரையில் இளவல்களை யார் சட்டை செய்யப் போகிறார்கள் இத்தகைய நிலையில் பாண்டியதாடு இருந்த சமயத்தில், கி. பி. 125! ஆவது ஆண்டில், ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் மதுரையின் அரியணையில் ஏறினான். இளவயது முதல் அவன் எதிலும் காட்டிய அலட்சியத்தையும், எதிலும் முரட்டுத்தனமாக தடந்து கொள்ளும் சுபாவத்தையும் கவனித்த பாண்டிய நாட்டு மக்கள் அவன் காலத்தோடு பாண்டிய நாட்டு வரலாறு முடித்துவிடும் என்றே கருதினார்கள். ஆனால் வரலாறு கூறிய கதை வேது. அவன் வான் சென்ற இடங்கள் பல, அவன் முத்திரை பதிந்த இடங்கள் அனந்தம். அதற்குப் பூர்வாங்கமாகத்தான் ஜடாவர்மன் வீரபாண்டியன் கொற்கைக்கு வந்திருந்தான். இளவரசனை யாரும் எந்த விழாவிலும் பார்த்ததில்லை யாகையால், அவன் கொற்கையில் சுற்றிக் கொண்டி ருந்ததை யாரும் கவனிக்கவில்லை. அந்தப் பத்து நாட்களில் அவன் கைக் கங்கணத்திலிருந்த பெருமுத்தையும் அவன் இடையிலிருந்த சிறு பொன் கோடரியையும் தவிர அவனை இளவரசனாக நினைப்பதற்கு வேண்டிய படாடோப மெதுவும் அவனிடம் காணப்படவில்லை. சாதாரண வீரர் அணியும் உடையையே அவன் அணிந்திருந்தான். சாளரத்தருகில் அன்று காலை தின்ற போதும் அதே சாதாரண அங்கி, காலில் கருட்டிக் கட்டப்பட்ட இடை வஸ்திரம் இவற்றைத்தான் அணிந்திருந்தான். காதில் மட்டும் இரண்டு சாதாரண பொன் வளையங்கள் இருந்தன. கழுத்தின் புலிநகத்தின்மீது எழுப்பப்பட்ட ஒரு முத்து மீன் தங்கச் சங்கிலியில் ஆடிக்கொண்டிருந்தது. அத் தகைய வீரச் சங்கிலியை அந்தக் காலத்தில் பலர் அணிந் திருந்தபடியால், அதிலிருந்தும் இளவரசனை மாற்றிக் காட்டக் கூடியது ஏதுமில்லை .

இளவரசனை ஏறெடுத்து நோக்கியபோது இத்தனை எண்ணங்களும் இளநங்கையின் இதயத்தில் ஓடின. அவள் எண்ணங்களை விநாடி நேரத்தில் ஊகித்துக்கொண்ட வீர பாண்டியன், கோட்டைக் காவலனை நோக்கி, “காவலரே! பாண்டிய மன்னரையே பலருக்குத் தெரியாது. புதிதாக ஏற்பட்டிருக்கும் இளவரசனை யாருக்குத் தெரியும்? உமது மகள் வியப்பதில் விந்தை ஏதுமில்லை .” என்றான்,

இளநங்கை தனது தவறை உணர்ந்துகொண்டாள். ஒரு விநாடி தலை தாழ்த்தி வணங்கினாள். பிறகு சொன்னாள் வணக்கம் மிகுந்த குரலில், “அரசாங்க விஷயங்கள் எனக்கு அதிகம் தெரியாது. மன்னிக்கவேண்டும்.” என்று.

“இப்போது வந்திருப்பவர் யாரென்பதைத் தெரிந்து கொண்டாயல்லவா?” என்று கேட்டார் கோட்டைக் காவலர் சீற்றத்துடன்.

“இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன்” என்ற இளநங்கை, “இப்பொழுதுதான்’ என்பதைச் சற்று அழுத்திச் சொன்னாள்.
இளவரசன் இதழ்களில் இளநகை அரும்பியது. “இத்துடன் அதை மறந்துவிடுங்கள்” என்றான் அவன் லேசாக தகைத்து.

“ஏன்!” இக் கேள்வியுடன் இனநங்கையின் விழிகளும் அவனை ஏறெடுத்து நோக்கின.

“நான் இங்கு வந்திருப்பது யாருக்கும் தெரியாது! இனித் தெரியவும் கூடாது!” என்றான் வீரபாண்டியன்.

“என் பணிமகளுக்குத் தெரியும்?” என்றாள் இளநங்கை .

“உங்கள் தந்தை அவசரத்தில் சொல்லிவிட்டார். அவளிடமும் சொல்லி வையுங்கள். இதை யாரிடமும் வெளியிட வேண்டாமென்று” என்ற வீரபாண்டியன் குரலில் இனிமையுமிருந்தது; எச்சரிக்கையுமிருந்தது.

இளநங்கை எதும் புரியாமல் விழித்தாள். அவள் தந்தைகூடப் பிரமிப்பைக் காட்டினார். இளவரசன் சாளரத்திலிருந்து சற்று நகர்ந்து நின்று அவ் விருவரையும் ஒரு விநாடி நோக்கிவிட்டுச் சொன்னான்: “கவனமாய்க் கேளுங்கள் கோட்டைக் காவலரே! இளதங்கை! உங்களையுந்தான் சொல்கிறேன். மிகுந்த கவனத்துடன் கேளுங்கள், பாண்டிய நாட்டைப் பெரும் புயல் சூழ்ந்து வருகிறது. ஒன்று அதிலிருந்து பாண்டிய நாடு பிழைக்கும், அல்லது அழிந்து விடும். அந்தப் புயலை எதியெறிந்துவிடச் சபதம் செய்திருக்கிறார். மன்னர் ஜடா வர்மன் சுந்தரபாண்டியன். அந்தச் சரிதத்தின் முதல் முத்திரைதான் நான் நேற்று உங்களிடம் கொடுத்தனுப்பிய ராஜமுத்திரை, இந்த முத்திரையைப் பற்றிய செய்தி முக்கிய படைத் தலைவர்களுக்கெல்லாம் போயிருக்கிறது. இது பழங்காலத்தில் கொற்கையின் இளவரசர்களின் முத்திரையாயிருந்தது. பிறகு மறைந்தது. இப்பொழுது மீண்டும் அதற்குப் புத்துயிர் கொடுத்திருக்கிறார் பாண்டிய மன்னர். அந்த முத்திரை என்னுடையது. அதற்கு எத்தனை தூரம் வலுக்கொடுக்க முடியும் என்பதிலிருக்கிறது பாண்டி நாட்டின் பிற்காலம்.”

இதைச் சொன்ன இளவரசன் மற்ற இருவரையும் உற்று நோக்கினான். அவ் விருவர் முகத்திலும் குழப்பமே இருந்தது. அதைக் கவனித்த இளவரசன் மேலும் விளக்கினான். “பாண்டி நாட்டின் செல்வம் முத்துக்கள். பெரு முத்துக்கள் நாட்டைவிட்டுச் செல்லக்கூடாதென உத்தரவிருக்கிறது. ஆனால், சென்ற மூன்று மாதங்களில் கடலிலிருந்து எடுக்கப்பட்ட முத்துக்களில், இரண்டு ஸாகியோவுக்கு மேற்பட்ட எடையுள்ள முத்துக்களில் பாதி மன்னர் பொக்கிஷத்துக்கும் வரவில்லை: முத்தங்காடிக்கும் வரவில்லை. எல்லாம் களவு போய்விட்டன. யார் களவாடினார்கள், எப்பொழுது களவாடினார்கள் என்பது தெரிய வில்லை. அதைக் கண்டுபிடிக்கவே மன்னர் என்னை அனுப்பியிருக்கிறார்” என்றான் வீரபாண்டியன்.

“கௗவைக் கண்டுபிடிக்க இளவரசன் வர வேண்டுமா?” என்று வினவினார் கோட்டைக் காவலர்.

“இது சாதாரணக் களவல்ல!” என்றான் வீர பாண்டியன்.

“வேறென்ன?

“அரசியல் களவு, பாண்டி நாட்டில் கொற்கை முத்துத் தான் செல்வம். அதை விற்றால்தான் பொன் கிடைக்கும். பொன் கிடைத்தால்தான் பெரும் படை திரட்டலாம். நிர்வகிக்கலாம். அந்த அடிப்படையை நீக்கி விட்டால்?” இப்படிக் கேள்வி கேட்டான் இளவரசன்,

“அப்படியானால்…” இளநங்கை தடுமாற்றத்துடன் கேட்டாள்,

“எதிரி நாடு ஏதோ இந்தக் களவில் சம்பந்தப்பட்டிருக் கிறது. அது எந்த நாடு என்பது தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் நான் இளவரசன் என்பது யாருக்கும் தெரியக்கூடாது, ஆனால் சிலருக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்” என்றான் வீரபாண்டியன்,

“யாருக்கு?” என்று நடுக்கத்துடன் கேட்டாள் இளநங்கை

“நேற்று, காட்டில் என்னைச் சந்தித்தவர்களுக்கு!”

“ஆம், ஆம், தெரிந்திருக்கவேண்டும். உங்களைச் கொல்வதில் அத்தனை தீர்மானமாயிருந்தார்கள்!”

“பாண்டி நாட்டு எதிரிகள் கொற்கையில் உலாவுவதற்கு அதுவே அத்தாட்சி. கொல்லப்பட்டவர்களைப் பார்த்தால் அவர்கள் எந்த நாட்டவர்கள் என்பதை அறியளாம், எதற்கும் தோப்புப்புறம் போய் வருவோம்” என்ற வீர பாண்டியன் சொல்லுடன் செயல்படவும் தொடங்கி, கிளம்புவதற்கு ஆயத்தமானவன் இளநங்கையை நோக்கி, “நானும், உங்கள் தந்தையும் போய்வருகிறோம். நீங்கள் வரவேண்டாம். உங்கள் இடுப்புக்காயம் வீணாக நெகிழ்ந்து கொள்ளும். தவிர, அங்குள்ள காட்சி பெண்கள் காணக் கூடியதுமல்ல,” என்றான்.

“இடுப்பின் காயத்தில் வலி எதையும் காணோம். எதற்கும் நானும் வருகிறேன்” என்ற இளநங்கை, வெளியிலிருந்த பணிமகனை அழைத்து, வந்திருப்பவர் இளவரச ரென்பதைப்பற்றி யாரிடமும் மூச்சுவிடவேண்டாமென்று எச்சரித்துவிட்டு, தந்தையுடனும் இளவரசனுடனும் கிளம்பினாள். அம்மூவரும் கோட்டையை விட்டு, வெளியே வந்தபோது ஐந்து நாழிகைக்கு மேலாகிவிட்டதால் இளவெயில் பளிச்சென்றே அடித்துக்கொண்டிருந்தது. தோப்பின் மரங்கள் கிளைகளைக் காற்றில் ஆட்டி அவாகளுக்கு நல்வரவு கூறின. அந்தக் காலைநேர இயற்கை யின்பத்தையெல்லாம் இளதங்கை அனுபவித்தாள். அப்படி அனுபவித்து நடக்கையில் பக்கத்தில் தன் தந்தைக்குச் சற்று அப்பால் வந்து கொண்டிருந்த வாலிபனைக் கடைக் கண்ணால் பார்த்தாள். அப்பொழுதும் அவன் நடை நிதானமாக ஒரே சீராக இருந்தது. தோப்பிலுள்ள பிணங்களைப் பார்க்கப்போகிறவன் தடையாக இல்லை அது, அவன் மிக நெஞ்சுரம் படைத்தவனாக இருக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டாள் இளதங்கை. இப்படி அவனைப் பற்றியே நினைத்துக்கொண்டு தோப்பை அடைந்த இளநங்கை, “அதோ, அந்த இடத்தில்தான் அவர்கள் மறைந்து நின்றிருந்தார்கள்” என்று தந்தைக்குக் காட்டுவது போல் இளவரசனுக்கும் இடத்தைக் காட்டினாள். இளநங்கையைவிட அந்த இடத்தை நன்றாக உணர்ந்திருந்த இளவரசன், சற்றே இதழ்களில் முறுவல் கூட்டி, மற்ற இருவரும் பின்தொடர முன்னே நடந்தான். தோப்பின் விளிம்புக்குச் சற்றே உள் தள்ளியிருந்த அந்த இடத்திற்குச் சென்ற அம்மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அந்த இடத்தில் பெருவியப்பு காத்திருத்தது அவர்களுக்கு, அங்கு ரத்தக்கறைகள் மட்டுமிருந்தன, ஆனால் ஐந்து பிணங்களில் ஒன்று கூட இல்லை. மாயமாய் மறைந்துவிட்டன.

கோட்டைக் காவலரும் இளதங்கையும் வியப்புடன் இளவரசனை நோக்கினர். இளவரசன் முகத்தில் வியப்பு ஏதுமில்லை . அந்தப் பழைய நிதானம் மட்டுமே இருந்தது. சிறிது நேரம் சிந்தனையில் இறங்கிய இளவரசன். “நீங்கள் கோட்டைக்குச் செல்லுங்கள். இன்னும் இரண்டு நாழிகைக் குள் வருகிறேன்” எனது சொல்லிவிட்டுத் தோப்புக்குள் சென்றுவிட்டான்,

இளவரசன், சொற்படி இரண்டு நாழிகைக்குப் பிறகு கோட்டைக்குத் திரும்பிவந்தான்.

“பிணங்களைப்பற்றி ஏதாவது தெரிந்ததா?” என்று வினவினார் கோட்டைத் தலைவர், கவலையுடன்,

“பிணங்கள் மறைந்தவை மறைந்தவைதான். ஆனால் அவற்றின் சுவடு மறையவில்லை !” என்றான் இளவரசன்.

“பிணங்களுக்குச் சுவடா!” கோட்டைத் தலைவர் பிரமிப்புடன் கேட்டார்.

“ஆம், இதோ பாருங்கள்” என்று இளவரசன் கச்சை யிலிருந்த ஒரு பதக்கத்தை எடுத்துக் கொடுத்தான்.

அதைக் கண்ட கோட்டைக் காவலர் மலைத்தார். “அப்படியானால் வீரரலி.. ?” என்று பயத்துடன் வினவினார்.

“கொற்கையில் இருக்கிறார்!” என்று சொன்னான் இளவரசன்.

“அப்படியானால்…?” அச்சம் ஒலித்தது. கோட்டைக் காவலர் குரலில்,

“போர் மூளுவது நிச்சயம்!” என்றான் இளவரசன் மிகுந்த நிதானத்துடன்.

Previous articleRaja Muthirai Part 1 Ch5 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch7 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here