Home Historical Novel Raja Muthirai Part 1 Ch7 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch7 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

63
0
Raja Muthirai Part 1 Ch7 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch7 |Raja Muthirai Part 1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch7 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 7 வீரரவி உதயமார்த்தாண்ட வர்மன்

Raja Muthirai Part 1 Ch7 |Raja Muthirai Part 1|TamilNovel.in

இளவரசன் சின்னஞ்சிறு அறுத்த சங்கிலியில் ஆடிய அந்தப் பெரும் பதக்கத்தைத் தம்முன் நீட்டிய உடனேயே கோட்டைக் காவலரான வாணாதித்தர் அப்பதக்கம் யாருடைய தென்பதைத் தீர்மானித்துக் கொண்டார். அதைக் கையில் வாங்கி இருபுறமும் திருப்பிப் பார்த்தவுடன் தமது தீர்மானத்தில் பிசகு எள்ளளவும் இல்லையென்பதையும் நிர்ணயித்துக் கொண்டார்.

பதக்கத்தில் இருந்த விலை மதிப்பற்ற வைரக்கற்களை யும் அதன் நட்ட நடுவில் வில்லும் அம்புமாகத் தெரியும்படி பதிக்கப் பெற்றிருந்த நெருப்புப்போல் சிவந்து துலங்கிய மாணிக்கக் கற்களையும் கண்ட வாணாதித்தர், சில விநாடிகள் திறந்த வாயுடன் அப்படியே நின்றார். அரச இலச்சினைகளைப் பார்த்துப் பிரமிப்பதற்கென்றே அன்று விடியற்காலையில் தாம் கண் விழித்திருக்க வேண்டுமென்றும் தமக்குள் சொல்லிக்கொண்டார்.

பாண்டிய நாட்டு இரண்டாவது ராஜமுத்திரையைப் பார்த்துத் தாம் திகைக்க, சில ஜாமங்களுக்குள் மீண்டும் சேர தாட்டு இராஜ இலச்சினையைக் கண்டு திகைக்கும் நிலை தமக்கு ஏற்பட்டு விட்டதை நினைத்து, இந்த இரண்டு ராஜ இலச்சினைகளும் என்ன விபரீதங்களை விளைவிக்கப் போகின்றனவோ?’ என்று உள்ளூரத் தம்மையொரு கேள்வியும் கேட்டுக் கொண்டார்.

வில்லும் அம்பும் இணைந்த சேர மன்னனின் இராஜ இலச்சினை பொறித்த அந்தப் பெரும் பதக்கத்தின் சிவப்பு மாணிக்கக் கற்கள் அவர் கண்களை எரித்து விடுவன போல் பார்த்தன. அந்தப் பதக்கம் சேர மன்னனான வீரரவி உதய மார்த்தாண்டவர்மனுடையது என்பதில் எள்ளளவும் அவருக்குச் சந்தேகமில்லையாயினும், ‘எப்படி ஒரு தாட்டு மன்னன் இன்னொரு நாட்டுக்குள் முன்னறிவிப்பில்லாமல் வரமுடியும்?’ என்றொரு கேள்வியை எழுப்பிக்கொண்டு இளவரசனையும் ஏறிட்டு நோக்கினார் சந்தேகச் கண்களுடன்.

போர் மூளுவது நிச்சயம்’ என்று அறிவித்த பின்பும், பாண்டிய இளவலான வீரபாண்டியன் பார்வையில், எந்த விதமான மாறுதலும் இல்லாதிருந்ததையும், அவன் போரைப் பற்றிக் கூட சர்வசகஜமாகவே பேசியதையும் கண்ட வாணாதித்தர், தனது சந்தேகத்தைப் பகிரங்கமாகவே வெளியிட்டு, “இது சேர மன்னர் கழுத்திலணியும் பதக்கம் தான், சேரநாடு சென்றபோது பலமுறை நானே இது அவர் மார்பில் துலங்கியதைக் கண்டிருக்கிறேன். ஆனால், முன்னறிவிப்பின்றி அவர் கொற்கைக்கு வர முடியுமா? வருவதுதான் விவேகமா?” என்று கேட்டார்.

வீரபாண்டியன் நிதானமாகவே பதில் சொன்னான். “முன்னறிவிப்புடன் அவர் வருவதில் சில கஷ்டங்கள் இருக்கின்றன. ஆசை அதிகமாகும்போது எந்த மனிதனின் விவேகமும் குறையும். பார்த்தாண்ட வர்மலும் மனிதன் தான்” என்று,

“முன்னறிவிப்புடன் வருவதில் சேர மன்னருக்கு என்ன கஷ்டம்! இங்கு தக்க வசதிகளை நாங்கள் அவருக்குச் செய்து தரமாட்டோமா?” என்று வினவினார் கோட்டைக் காவலர்,

“அவருக்கு வேண்டிய வசதிகளை உங்களால் செய்து தரமுடியாது. அவருக்கு வேண்டியது பாண்டிய நாட்டு முத்துக்குவியல்? அதை இங்கு பகிரங்கமாக வந்து பெற முடியாது” என்றான் இளவரசன்.

“அப்படியானால், சென்ற மூன்று மாதமாகப் பெரு முத்துக்கள் களவு போவதற்கு…?” மேற்கொண்டு வாக்கியத்தை முடிக்காமல் சங்கடப்பட்டார் வாணாதித்தர்.

“மன்னர்கள் எடுக்கும் போது அதற்குக் களவு என்ற ஈனச் சொல் உபயோகப்படுத்தப்படுவதில்லை. கொற்கையைக் கைப்பற்ற வீரரவி நினைக்கிறார். பாண்டிய நாடு படை திரட்டும் நிலையில் இருக்கும் வரையில் அது நடவாது, படை திரட்ட மூலதனம், கொற்கையின் பெரு முத்துக்கள் தரும் வெளிநாட்டுத் தங்கம், ஆகவே, படை திரட்டும் அஸ்திவாரத்தை நீக்கிவிட முயல்கிறார் சேர மன்னர். இன்னும் கொஞ்ச தான் பாண்டிய நாடு தொடர்ந்து தூங்கியிருந்தால், அவர் எண்ணமும் நிறைவேறியிருக்கலாம். பாண்டிய நாட்டு அரியணையில் இப்பொழுது ஏறியிருப்பது உறங்கும் புலியல்ல; விழித்திருக்கும் பெரும் சுறா மீன். புலி, வில், அம்பு அனைத்தையுமே விழுங்க வல்லது” என்று கூறும் போது, அவன் நிதானக் கண்கள் மட்டும் பயங்கரமாக மாறியதைக் கண்டார் வாணாதித்தர்.

அவர் மட்டுமல்ல அத்த மாற்றத்தைக் கண்டது. இளநங்கையும் கண்டாள், நிதானமும் சிரிப்பும் காட்டும் அந்தக் கண்கள் அத்தனைப் பயங்கரமாக மாறும் என்பதை அவள் அதுவரை ஊகிக்க்ககூட முடியவில்லை. வீரரவி உதய மார்த்தாண்டவர்மன் மட்டும் அந்தப் பார்வையைக் கவனித்திருந்தால், அந்த இடத்திலேயே பிராணனை விட்டிருப்பானென்றுகூடத் தோன்றியது அவளுக்கு. ஆனால் கண்களில் அந்தப் பயங்கரம், நெருப்பு வீசும் அந்த விபரீதப் பார்வை ஒரு வினாடி தான் இருந்தது. அடுத்த வினாடி அந்தக் கண்கள் அவளை நோக்கி நகைத்தன. பிறகு கோட்டைக் காவலரையும் சர்வநிதானத்துடன் நோக்கி, தங்கள் செல்விக்கு இடைக்காயம் இருக்கிறது. அவரையும் நிற்க வைத்துக்கொண்டு நாம் இதை ஆராய்வானேன்? அவர் இளைப்பாறலாமே?” என்றும் கூறினான்.

இளநங்கையின் விழிகளில் கோபம் துளிர்த்தது. “நானிருப்பது உங்களுக்கு இடைஞ்சலாயிருந்தால் போய் விடுகிறேன்” என்றாள் இளவரசனை நோக்கி

இளவரசனின் விழிகள் சிரிப்பை உதிர்த்தன. நிங்களிருப்பதில் எந்த இடைஞ்சலுமில்லை எங்களுக்கு உங்களுக்குக் காயம் வலிக்குமே என்பதற்காகச் சொன்னேன்” என்ற வீரபாண்டியன், மீண்டும் கோடைக் காவலரை நோக்கி, “சேர மன்னர் கொற்கையிலிருப்பதும் நிச்சயம் வாணாதித்தரே! அதில் எனக்குச் சந்தேகத்தும் இல்லை. அந்த இலச்சினையை அவரைத் தவிரவேறு யாரும் அணிய முடியாது” என்றான் திட்டவட்டமாக.

“அப்படியானால், அவரும் தேற்றிரவு தோப்பில் மறைத்திருத்தாரா கொலைகாரர்களுடன்?” என வினவினார் கோட்டைக் காவலர்.

“இல்லை ” என்றான் இளவரசன் திடமாக,

“அப்படியானால் இந்தப் பதக்கம் எங்கு கிடைத்த உங்களுக்கு?”

பதிலை உடனடியாகச் சொல்லவில்லை இளவரச “தோப்பின் மேற்குப் பகுதி கோட்டையைப் பார்த்திகிறது. கிழக்குப் பகுதி எதைப் பார்த்திருக்கிறது.” என்று வினவினான் கோட்டைக் காவலரை நோக்கி.

வாணாதித்தர் வியப்புடன் நோக்கின இளவரசனை. “கிழக்குப் பகுதி ஓரளவுதான் கிழக்கு நோக்கிச் செல்கிறது. பிறகு தெற்கே திரும்பி இந்த கோட்டையின் தென்புறத்தில் முடிகிறது தோப்பு என்றவர் பேச்சைச் சட்டென்று நிறுத்தினார்.

“அந்த விளிம்பிலிருந்து ஒரு பெரும் மாளிகை” என் முடித்தான் இளவரசன்.

“அதில் நீண்ட நாட்களாக யாருமில்லையே?”

“நீண்ட நாளாகப் பூட்டிக் கிடக்கும் பெரு மாளிகை களுக்கு ஒரு பாதுகாப்பு உண்டு” என்று இளவரசன் சுட்டக் காட்டினான்.

“என்ன பாதுகாப்பு?”

“அதை யாரும் கண்காணிக்க மாட்டார்கள்.”

“ஆம்”
“தவிர, வட்டமாகச் சுழன்று திற்கும் தோப்பின் விளிம்பில், இருப்பதாலும், கிட்டத்தட்ட இந்தக் கோட்டை பின் பார்வையிலிருப்பதாலும், இந்தக் கோட்டையையும் எதிரிகள் அங்கிருந்து ஒரு கண் வைத்துக் கொள்ள முடியும்.”

“அது சாத்தியம்தான்.”

இளவரசன் சற்று நேரம் சிந்தனையில் இறங்கினான். பிறகு சொன்னான், கோட்டைத் தலைவரை நோக்கி, “நேற்றிரவு இக் கோட்டையில் வெளிச்சுவர் முன்பாகப் பந்தங்களும் விளக்குகளும் உலாவியதைப் பார்த்தேன்.”

இந்தச் சமயத்தில் இளதங்கையும் கலந்து கொண்டு “ஆம், ஆம், நானும் பார்த்தேன்” என்று கூறினாள்.

கோட்டைத் தலைவர் சற்றுத் தயக்கத்துடன் பதில் சொன்னார்: “நேற்றிரவு கோட்டை மதிலோரமாகப் பத்துப் பதினைந்து பேர் மறைந்து பதுங்கிச் சென்றதாக மதில் மேலிருந்த காவலனொருவன் பார்த்து எச்சரித்தான். மற்ற வீரர்கள் பந்தங்களையும் விளக்குகளையும் கொண்டு அவர்களைத் தேடினார்கள்.” என்ற அவர் “அவர்கள் தான் தோப்புக்குள் சென்று மறைந்து நின்றார்களா?” என்றும் கேட்டார்.

“இருக்காது. தோப்புக்குள் இருந்தவர்கள் அங்கு முன்பே இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உறுதுணையாக வேறு சிலர் உங்கள் கவனத்தைக் கோட்டையிலேயே நிலை நிறுத்த முயன்றிருக்க வேண்டும்” என்று கூறிய இளவரசன் மேலும் சொன்னான். “வாணாதித்தரே! இந்தப் பதக்கம் எனக்குத் தோப்பில் கிடைக்கவில்லை. தோப்பில் மறைந்திருந்தவர்களின் புரவியடிகள் எங்கும் பதிந்து கிடந்தன. அது மட்டுமல்ல. நான் சென்ற பின்பு நீண்ட நேரங் கழித்து, அந்தப் பிணங்களை அகற்ற மற்ற பலர் தோப்புக்குள் வந்ததால் உண்டான காலடிகளும் பதிந்து கிடந்தன. எந்தக் காலடியும் குளம்படியும் நேராகக் கிழக்கு நோக்கிக் காயல் பட்டணத்தின் திசையில் செல்லவில்லை. எல்லாம் தோப்பின் விளிம்புக்கு, அதாவது மூடிக் கிடக்கும் அந்தப் பெருமாளிகைப் பக்கமே சென்றன, அந்த மாளிகைக்கு முன்னால் தோப்பு முடியும் இடத்தில்த அறுந்த சங்கிலியுடன் இந்தப் பதக்கம் கிடைத்தது. அது – அறுந்தது? அறுந்து விழும்படியான என்ன காரியத்தில் மன்னர் ஈடுபட்டார்? என்பது விளங்கவில்லை எனக் ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். வீரரவி கொற்கை தான் இருக்கிறார். அதுவும் முத்தங்காடி கூடும் இந்த மாதங்களில் அவர் இங்கு வந்து மறைந்துறைவது பெரு சந்தேகத்தை யளிக்கிறது எனக்கு. ஆகையால் முதலில் அவ் இருப்பிடத்தை அறிய வேண்டும். கோட்டைப் பகுதியிலும் தோப்புப் பகுதியிலும் நடமாடியவர்கள் சேர வீரர்களாக தானிருக்க வேண்டும். அப்படியானால் அவர் எத்தனை வீரர்களுடன் வந்திருக்கிறார் என்பதும் கவனிக்கத் தக்க அவர் வீரர்கள் அதிகமென்றால் கொற்கையில் கோட்டைக்குக் கூட அபாயம்தான்” என்று பேசி கொண்டு போன இளவரசன், சற்றுத் தன் பேச்சை நிறுத்தி கோட்டைக் காவலரைக் கூர்ந்து நோக்கினான்.

கோட்டைக் காவலர் பிரமை பிடித்து நின்றார் இத்தனை பெரிய அபாயம் கொற்கையிலிருப்பது தமக்கு அடியோடு தெரியவில்லை என்பதை நினைக்க தினைக்க, அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆகவே பதிலேதும் சொல்லாமல் நின்றார்.
“கொற்கைக் கோட்டை வட்டாரத்தின் படை வீரர் எத்தனை பேர் இருக்கிறார்கள்?” என்று இளவரசனே வினவினான்.

“அதிகமில்லை. ஆயிரம் பேர் இருக்கலாம். பாதிப் படை மதுரைக்குச் சென்றுவிட்டது!” என்றார் கோட்டைக் காவலர்,

அது தெரியும்’ என்பதற்கு அறிகுறியாகத் தலைமை அசைத்த வீரபாண்டியன் மீண்டும் சிந்தனையில் இறங்கினான். பிறகு அவன் இதழ்களில் பழைய இளநகை திரும்பியது. “உங்களுக்கு மிகவும் நம்பிக்கையுள்ள நான்கு வீரர்களைப் புரவிகளுடன் இன்றிரவு இரண்டாம் ஜாமத்தில் அந்தப் பெரு மாளிகைக்கு அனுப்பி வையுங்கள்.

அவர்கள் மாளிகைக்கு முன்புறமுள்ள தோப்பில் மறைந்திருக்கட்டும்” என்று கூறியவன், அத்துடன் அந்தப் பேச்சை முடித்துக் கொண்டு. “தங்கள் செல்வியாரின் காயத்தை மீண்டும் கட்டி விடுகிறேன். அவருக்கும் இன்றிரவு சிறிது வேலை இருக்கும்” என்று கூறினான்.

“இளநங்கைக்கா!” என்று வியப்புடனும், சிறிது அச்சத்துடனும் வினவினார் கோட்டைக் காவலர்,

“ஆம்” என்றான் இளவரசன் சர்வ நிதானமாக,

“என்ன வேலை?” என்று மீண்டும் கேட்டார் கோட்டைக் காவலர்.

“அரசாங்க வேலை” என்ற இளவரசன் புன்னகை புரிந்து, “அஞ்சவேண்டாம் கோட்டைத் தலைவரே! வீர பாண்டியனிருக்கும் வரையில் உமது செல்விக்குத் தீங்கு எதுவும் ஏற்படாது” என்று உறுதி கூறினான்.

அதற்குமேல் கோட்டைக் காவலரைப் பேசவிடாத வீரபாண்டியன், பணிமகளைக் கூப்பிட்டுச் சிறிது மெல்லிய துணியையும் சுடுநீரையும் கொண்டு வரச் சொல்லி அந்த அறையில் கோட்டைத் தலைவன் மஞ்சத்திலேயே இள நங்கையைப் படுக்க வைத்து, கட்டவிழ்த்துக் காயத்தைப் பரிசோதித்தான். பிறகு, தன் கச்சையிலிருந்து இரண்டு பச்சிலைகளை எடுத்துக் கசக்கி, அவற்றைக் காயத்தில் பொருத்தி மீண்டும் இழுத்துத் துணியால் கட்டி முடித்தான். “இனி இந்த பச்சிலை, காயம் ஆறிய பின்புதான் கீழே விழும். நீங்கள் நிம்மதியாக நடமாடலாம். பொருநையில் நீராடவும் செய்யலாம்” என்று கூறிவிட்டு, “மீண்டும் இரவு வருகிறேன், நீங்கள் புறப்படத் தயாராயிருங்கள்.” என்றும் அவளை நோக்கிக் கூறினான்.

“எங்கு புறப்பட?” என்று வினவினாள் இளநங்கை,

“அந்தப் பெருமாளிகைக்கு” என்றான் இளவரசன்.

“அபாயமாயிற்றே,”

“ஆம்”

“தானெப்படி அங்கு போகமுடியும்?”

“சிலர் அபாயத்துக்கே பிறந்தவர்கள். அவர்கள் நீங்களும் ஒருவர். உங்களை அபாயம் பத்து நாட்களாக தொடர்ந்திருக்கிறது. இன்று அது முற்றி முடிவுக்கு வரு நாள். ஆகவே அதை எதிர்தோக்கி நீங்கள் செல் வேண்டும்” என்று இளவரசன், அபாயமான விஷயத்தை சர்வ சகஜமாகச் சொல்லிவிட்டுப் போனான்,

இளவரசன் அன்றிரவு இரண்டாம் ஜாமத்தில் வந்தான். அவன் சொற்படி புறப்பட இளநங்கை தயாராயிருந்தாள். கோட்டைக் காவலர் முகத்தில் ஈயாட வில்லை. கோட்டை வாயிலுக்கு வந்ததும் அவர் திகில் பன் மடங்கு அதிகமாகியது. புரவிவீரர் நால்வரைத் தோப்பு விளிம்பில் நிற்கும்படி உத்தரவிட்ட இளவரசன், இள நங்கையை மட்டும் தனித்து அந்த மாளிகைக்கு செல்லும்படி உத்தரவிட்டான், “அதோ தெரிகிறது மாளிகையின் பின்புறம். பின்புறச் சுவரைச் சுற்றிக் சென்றால் அப்புறமிருக்கிறது முன்புறம். முன்புற வாசலில் தைரியமாக நுழையுங்கள். யாராவது, தடை செய்தால் வீர ரவியின் பதக்கத்தைக் காட்டுங்கள்” என்று கூறினான் இளவரசன்.

“குழந்தையைத் தனியாக அனுப்புகிறீர்களே?” என்று திகிலுடன் கேட்டார் கோட்டைக் காவலர்.

“பாண்டிய நாட்டுப் பிரஜையின் ஒவ்வோர் உயிர், மானம் இரண்டிலும் இளவரசனுக்கு அக்கறை உண்டு” என்று கூறிய வீரபாண்டியன், அவளைச் செல்ல உத்தர விட்டான். இளநங்கை தன் புரவியை மெல்ல நடத்திச் சென்றாள். கோட்டைக் காவலர் கோட்டை வாயிலில் நின்று அவள் போவதைப் பார்த்துக்கொண்டு நின்றார்.

வாணாதித்தர் தன் மகள் சென்ற திக்கை நோக்கிக் கொண்டு படபடக்கும் நெஞ்சுடன் நீண்ட நேரம் தின்றார்.

அவர் மனம் சுக்குநூறாக வெடித்துக்கொண்டிருந்தது. இளதங்கை மீண்டும் உயிருடன் வருவாளோ மாட்டாளோ, மானத்துடன் வருவாளோ மாட்டாளோ என்ற கேள்விகளும் அவற்றின் விளைவாக முனைத்த திகிலும் அவர் பார்வையைக்கூட மறைத்தது.

புரவியில் சென்ற இளதங்கையின் இதயமும் கிட்டத் தட்ட அவருடைய நிலையில்தானிருந்தது, இளநங்கை எத்தனையோ துணிவுள்ளவள்தான். ஆனால் இத்தகைய பயங்கர அலுவலில் இதுவரை அவள் சிக்கியதில்லை , ஆனால், அரசாங்கப் பணியை யாரும் மறக்கமுடியா தென்பதை உணர்ந்திருந்த காரணத்தால், வேறு வழியின்றி அந்த மாளிகையை நோக்கிப் புரவியை நடத்தினாள். அந்தப் பயங்கர மாளிகையும் மெல்ல மெல்ல நெருங்கியது. இளவரசன் சொற்படி அந்த மாளிகையின் முன் வாயிலை அடைந்த இளதங்கை, புரவியைவிட்டுக் கீழே மெதுவாக இறங்கினாள். பிறகு தன் இடுப்பிலிருந்த வீரரவியின் பதக்கத்தைக் கையில் எடுத்துக்கொண்டாள்.

அதை அவள் எடுத்து நிலவொளியில் பார்த்ததும், பின்னால் யாரோ நகைத்தார்கள். ”அது தேவையில்லை. உங்களை எதிர்பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்” என்ற சொற்களும் அந்த நகைப்பையொட்டி உதிர்ந்தன,

இளநங்கை சரேலெனத் திரும்பினாள் பின்புறம். பூர்ண ஆயுதந்தரித்த நான்கு வீரர்கள் பின்புறத்தில் நின்றிருந்தார்கள். ஆயுதந்தரிக்காத ஒருவரும் நின்றிருந்தார். அவரைப் பார்த்ததும் பெரும் திகைப்பை அடைந்தாள் இளநங்கை. சேர மன்னான் வீரரவி உதயமார்த்தாண்ட வர்மன் தனது அழகிய உதடுகளில் புன்னகை தவழ நின்றிருந்தான்.

Previous articleRaja Muthirai Part 1 Ch6 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch8 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here