Home Historical Novel Raja Muthirai Part 1 Ch8 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch8 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

60
0
Raja Muthirai Part 1 Ch8 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch8 |Raja Muthirai Part 1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch8 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 8 திட்டத்தில் ஓர் ஊனம்

Raja Muthirai Part 1 Ch8 |Raja Muthirai Part 1|TamilNovel.in

ஆயுதமேதும் தரிக்காமலும், விஷமப் பார்வை, புன் முறுவல், இவற்றுடன் தன் பின்னால் நின்ற வீரரவி உதய மார்த்தாண்டவர்மனைக் கண்டதும், ஓரளவு அச்சத்துக்கும் அதிக அளவு வியப்புக்கும் உள்ளான இளநங்கை சேர மன்னனைக் கூர்ந்து கவனித்தாள். அவனை அவள் அதற்கு முன்பு இரண்டொரு முறைகளே கொற்கை முத்து விழாவில் பார்த்திருந்தாலும், அவன் தோற்றமும் தோரணையும் மறக்க முடியாதிருந்த காரணத்தால், பார்த்ததும் அவனை அடையாளம் கண்டு கொள்வது பெருங்கஷ்டமாயில்லை அவளுக்கு, தமிழகத்திலுள்ள மிகுந்த அழகிய புருஷர்களில் ஒருவனென்றும், யாரையும் ஆழம் பார்க்கும் சிறந்த தந்திர சாலியென்றும் பெயர் பெற்றிருந்த சேர மன்னன் கலந்து கொள்ளாத விழா எதுவுமில்லையாகையால், அவளைச் சாதாரண மக்களே அடையாளம் கண்டுபிடிப்பதில் அதிகப் பிரயாசையில்லாதிருக்க, இரண்டு விழாக்களில் கோட்டைக் காவலன் மகள் என்ற முறையில் சிறிது நெருக்கத்திலேயே கவனிக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த இளநங்கைக்கு அதில் என்ன கஷ்டமிருக்கப் போகிறது? ஆகவே அவனைப் பார்த்ததும் யாரென்று புரிந்து கொண்ட இளநங்கை சில விநாடிகள் பிரமை பிடித்து அவனைப் பார்த்தது பார்த்தபடியே நின்றாள்.

அன்று முழுமதி தேயத் தொடங்கிய முதல் நாளானாலும் முதல் ஜாமம் தாண்டி இரண்டாம் ஜாமம் ஓடிக்கொண்டிருந்ததால் முதல் நாளைப் போலவே வெள்ளை வெளேரென்று காய்ந்துகொண்டிருந்தது. அந்த முழு நிலவில் நடுத்தர உயரத்துடனும் சேர நாட்டு யானைத் தந்தம் போலவே சிவப்புக் கலந்த வெண்மையான நிறத்துடனும் நின்ற வீரரவி, மிகுந்த அழகுடன் விளங்கினான். அவனது வட்ட முகத்தைத் தொட்டு நின்ற தலையின் கரேலென்ற மயிரிழைகள் அந்த முகத்தின் வெளுப்புக்கு ஒரு மாற்றத்தைச் சுட்டிக் காட்டியதன்றி, அந்த அழகைப் பல மடங்கு அதிகமாக எடுத்துக்காட்டவும் செய்தன. தோன்றுவது சிரிப்பா விஷமமா என்பதை நிர்ணயிக்க முடியாத அவன் அழகிய கருங்கண்களிலிருந்து ஒன்றை மட்டும் நிர்ணயிக்க முடிந்தது. அவன் அசாத்திய காமுகன் என்பதைக் கண்ணொளி சந்தேகமறப் புரிய வைத்தது. பார்ப்பதற்கு அவன் அதிகக் கச்சலுமில்லை, பருமனுமில்லை. இரண்டுக்குமிடையில் தேவையான பருமனேயிருந்த அவன் சரீரம் பெரிய வீரனுடைய சரீரமாகத் தெரியாவிட்டாலும், போரில் பல சமயங்களில் அவன் நேரிடையாகக் கலந்ததற்கு அவன் கைகளின் முனை யிலிருந்த காய வடுக்கள் அத்தாட்சி கூறின. அழகும் வீரமும் கலந்த அவன் தோற்றத்திற்கெல்லாம் அடிப்படையாக, அவன் பெரிய அபாயமான மனிதனென்பதை அவன் முகம் சந்தேகமற எடுத்துக்காட்டியது. அவன் குரலில் இருந்த குழைவு, உதட்டில் தெரிந்த புன்முறுவல், அவன் நின்ற தோரணை, எல்லாவற்றிலுமே உறைந்து கிடந்தது அபாயக் குறி.

இப்படித் தன்னைக் கூர்ந்து அச்சத்துடனும் வியப்புடனும் கவனித்த இளநங்கையை நோக்கி மிகவும் பரிவுடன் கூறினான் வீரரவி: “நிலவு நன்றாகத்தானிருக்கிறது. இருப்பினும் இங்கேயே உங்களை நிற்கவைத்துப் பேசுவது முறையல்ல. உள்ளே சென்று பேசுவோம்” என்று.

இளநங்கை அவனையும் நோக்கி, சுற்றுப்புறங்களையும் நோக்கினாள். வெளேரென்ற நிலவில் அதிக வெளேரென்று தெரிந்த அந்தப் பெருமாளிகை பார்ப்பதற்கு மிக அழகாகயிருந்தது. அதைச் சுற்றியிருந்த மதிற்சுவரும், மதிற்சுவரில் அவளை நோக்கியிருந்த பெருவாயிலும், உள்ளேயிருந்த மாளிகையின் சுற்றுச்சுவர்களும் சாதாரணச் சுவர்களாயிராமல் மிகவும் கனமாயிருந்ததையும் மதிற்சுவ அளவுக்கு மீறிக் கனமாயிருந்ததையும் கவனித்த அவ தேவையானால் அந்த மாளிகையைச் சின்னஞ்சி கோட்டையாக இரண்டொரு நாட்களுக்கு மாற்றி கொள்ள முடியுமென்று புரிந்து கொண்டான். எதிரேயிருத் கனத்த மதிற் கதவும், உள்ளே தெரிந்த மாளிகை முன் கதவும் அவள் ஊகத்தை ஊர்ஜிதம் செய்தன. மாளிகையில் ஒரே தள உப்பரிகை அமைப்புக்கூட, அது உப்பரிகை யாகவோ அல்லது வீரர் அம்பெறியும் தளமாகவே உபயோகப்படும் வண்ணமிருந்ததையும் கவனித் இளநங்கை, சேரமன்னன் காரணமாகவே அந்த மாளிகையில் தங்கி இருக்கிறான் என்பதையும், அந்மாளிகைக்குள் தான் சென்றுவிட்டால் வெளிக்கிளம்புவது சுலபமில்லை யென்பதையும் புரிந்து கொண்டாள்.

அவன் தன்னையும் பார்த்து, மாளிகையையும் பார்த்ததைக் கண்ட வீரரவி, “உங்கள் நினைப்பு சரிதான் இந்த மாளிகையைத் தாக்குவதோ கைப்பற்றுவதோ கடினம். இது எங்கள் மூதாதைகள் கட்டியது” என்று கூறியதன்றி, “வாருங்கள்! வந்தவர்களை வாயிலில் நிற்க வைத்துப் பேசுவது சேர மரபினர் பண்புக்கு முரணானது, என்று சொல்லி, அவளைத் தன்னைப் பின்பற்றி வருமாறு சைகை காட்டி முன் நடந்தான். அவனைத் தொடர்ந்து ஆயுதம் தாங்கிய வீரர்களும் நடந்தனர். மாளிகையின் ஆரம்பவாயிலான மதில்வாயிலை அவர்கள் தெருங்கியதும் அதன் கதவுகளிரண்டும் மந்திரத்தால் திறப்பதுபோல் திறந்து வழிவிட்டன. அதை உட்புறத்திலிருந்து திறந்த வீரர் இருவரும், வீரரவி சென்றதும், தலை தாழ்த்தி வணங்கி விட்டு, இளநங்கையும் மற்ற வீரர்களும் வந்ததும் கதவைப் பழையபடி மூடித் தாழிட்டனர், மதிலுக்கும் மாளிகையின் படிகளுக்குமிருந்த இடைவெளி வீரர் ஒருவர்கூட இல்லாமல், நிசப்தமாயிருந்தது. மாளிகையில் விளக்குகளும் ஏதுமில்லையாகையால், நிலவு வெளிச்சத்தைத் துணை கொண்டு சென்ற வீரரவியை மாளிகை முன் கதவுக்கு அருகிலிருந்த தாழ்வாரத் தூண் நிழற்பாளங்கள் மறைத்தன. பிறகு அந்த முகப்புக் கதவுகளிரண்டும் மெல்லத் திறக்கவே உள்ளே விளக்குகள் இரண்டு பளிச்சிட்டன. மாளிகையின் முன் மண்டபம் இளநங்கையின் கண்களுக்கு எதிரே விரிந்தது.

பெரும் வளைவுக் கறையுடனும் பிரும்மாண்டமான தூண்களுடனும் விளங்கிய அந்த முன் மண்டபத்துக்கு வீரரவியைத் தொடர்ந்து சென்ற இளநங்கை அந்தக் கூடத்தின் சிறப்பைக் கண்டு பெரிதும் பிரமித்தாள்; அதன் சுவர்களிலெல்லாம் சேரமன்னர்களின் வீரப் பிரதாபங்கள், போர்கள், முதலியன ஓவியங்களாகத் திகழ்ந்தன. பெரும் தூண்களிலிருந்த சிற்பங்களும் சேரநாட்டுக் கலாசாரத்தை வலியுறுத்தின. அபாயத்துக்குள் தலையிட்டு அந்தக் கூடத்துக்குள் நுழைந்த அந்த நேரத்திலும், அந்தக் கூடத்தின் அழகைக் கண்டு அவள் வியந்தாள். மாளிகையின் வெளிப்புறம்தான் பழுது பட்டுப் பழையதாகத் தெரிந்ததே யொழிய, உட்புறம் அவ்வப்பொழுது பழுதுபார்க்கப் பட்டிருப்பதை உணர்ந்த இளநங்கை முன் மண்டபத்தை. நாற்புறமும் சுற்றிப் பார்த்தாள். அவள் அப்படி ஆச்சரியத்தில் வசப்பட்டு நின்ற சில விநாடிகளில் மாளிகையின் முகப்புக் கதவு மூடப்பட்டது. அவனைத் தொடர்ந்த வீரர்களும் விலகி எட்டச் சென்றுவிட்டனர். அக்கூடத்தின் நட்ட நடுவிலிருந்த அரியணை ஒன்றில் அமர்ந்து கொண்ட வீரரவி எதிரேயிருந்த ஒரு மஞ்சத்தைக் காட்டி, “அமருங்கள்,” என்றாள்.

இளநங்கை சற்று தயங்கினாள். அதைக் கவனித்த வீரரவி குரலில் தேனொழுகக் கூறினான். “தயங்க வேண்டாம், அமருங்கள்.” என்று.

இளதங்கை மெள்ள உட்கார்ந்தாள் அந்த மஞ்சத்தின் முகப்பில். அவள் இதயத்தில் அதுவரையிருந்த அச்சம் அடியோடு மறைந்துவிட்டது. தலைக்குமேல் ஓடிய வெள்ளம் சாணோடினாலும், முழம் ஓடினாலும் விளைவு ஒன்று தானென்பதைப் புரிந்து கொண்ட அவள் சேரமன்னனைத் தைரியத்துடனேயே ஏறெடுத்து நோக்க “என்னை என்ன செய்வதாக உத்தேசம்?” என் வினவினாள்.

“இத்தனை நாட்களாக என்ன செய்து கொண்டிருந் தேனோ அதைச் செய்வதாகத்தான் உத்தேசம்” என்றான் சேர மன்னன் புன்சிரிப்புடன்.

இளநங்கைக்கு அவன் சொற்களின் பொருள் புரிய வில்லை. இத்தனை நாட்களாக என்ன செய்துகொண்டிருந் தீர்கள்?” என்று வினவினான் பதிலுக்கு,

“பெரு மீனைப் பிடிக்க விரும்புபவர்கள் என்ன செய்கிறார்கள்?” என்று வினவினான் வீரரவி.

“உங்கள் கேள்வியின் பொருள் விளங்கவில்லை எனக்கு” என்றாள் இளநங்கை,
“பெருமீனைப் பிடிக்க விரும்புபவர்கள் தூண்டிலில் சிறு புழுவைக் கட்டுகிறார்கள். அதை வீசியதும் அதை நோக்கிப் பெருமீன் வருகிறது. அது சிக்கிக் கொள்கிறது” என்று சூசகமாகக் கூறினான் வீரரவி,

இளநங்கை புரிந்து கொண்டாள். “அவரைப் பிடிக்க” என்று தொடங்கியவள் வார்த்தைகளை முடிக்கவில்லை.

“ஆம், பாண்டிய இளவரசனைப் பிடிக்க உன்னைத் தூண்டிற் புழுவாக உபயோகித்தேன்,” என்ற வீரரவி நகைத்தான்.

“அவர் பத்து நாட்களாக இங்கிருப்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டாள் இளநங்கை,

இவள் கேள்வியில் தொனித்தது வியப்பா. அச்சமா என்பது திட்டமாகப் புரியவில்லை சேரமன்னனுக்கு. அதைப் பற்றி, லட்சியம் செய்யாமல், அவன் இங்கு வந்து இருபது நாட்களாகின்றன. அவன் வந்ததை அறிந்துதான் நானும் எனது தலைநகர் விட்டு இங்கு வந்தேன். அவள் வந்ததை என் ஒற்றர்கள் அறிவித்த நான்கு தினங்களுக்குள் இங்கு வந்து சேர்ந்தேன். முதலில் இளவரசன் வந்தால் கோட்டையில் தங்குவானென்று நினைத்தேன். அவன் கோட்டையில் தங்கவில்லை. கோட்டையில் தங்கவில்லையே தவிர கோட்டைப்புறம் பலமுறை அவன் வந்ததை என் ஒற்றர்கள் பார்த்தார்கள். ஆனால், அவன் கோட்டையைச் சுற்றித் திரிந்தானேயொழிய அதில் நுழையவில்லை. அவன் இருப்பிடத்தையும் அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே கோட்டையைக் கவனிக்கச் செய்தேன். இடையில் நாலைந்து நாட்கள் அவன் கொற்கை யிலிருந்தே மறைத்து விட்டான். பிறகு திடீரெனப் பொருதைப் படித்துறை மண்டபத்தில் அவன் காணப் பட்டதாக ஒற்றர்கள் கூறினார்கள். அதன் பின்னர் அவன் தினந்தோறும் அந்தப் படித்துறைக்கு வந்தான், எங்கள் கண் காணிப்பு சுலபமாயிற்று. படித்துறைக்கு வந்தானே தவிர, தோப்புக்குள் உன்னைத் தொடர்ந்து ஒரு நாள் கூட வரவில்லை…” என்று சொல்லிக் கொண்டுபோன வீர ரவியை இடைமறித்த இனநங்கை, “ஆம், ஆம், தொடரவே யில்லை ,” என்றாள்.

வீரரவி புன்முறுவல் கொண்டு சொன்னான். “தொடர்ந்திருந்தால் நடந்திருக்கக் கூடிய கதை வேறு. தோப்பு அடர்த்தியானது. பகல் வேளைகளில் வீரர்கள் மறைந்திருந்தாலே தெரியாது. ஆகவே, அவன் உங்களை ஒரு நாள் தொடர்ந்திருந்தாலும் எங்கள் வேலை சுலபமாயிருக்கும். ஆனால் அவன் ஒவ்வொரு நாளும் அந்த மண்டபத்திலேயே நின்றுவிட்டான். ஆகவே… இந்த இடத்தில் சற்றுச் சொற்களை நிறுத்தி இளநங்கையை உற்று நோக்கினான் வீரரவி,

“கொலை செய்ய முடியவில்லை” என்று வாசகத்தைப் பூர்த்தி செய்த இளநங்கை, வீரரவியை வெறுப்புடனும், இகழ்ச்சியுடனும் நோக்கினாள்.

அதே வெறுப்பையும் இகழ்ச்சியையும் நோக்கிய வீரரவி மேற்கொண்டு புன்முறுவலே செய்து, “என்னைக் கொலைகாரனென்று நினைக்கிறீர்களா? அல்லவே அல்ல. அவன் வீரனாக தேருக்கு நேர் வந்தால் போராடி இருப்பேன், அல்லது வீரர்களை விட்டுச் சிறைசெய்து சேரநாடு கொண்டு சென்றிருப்பேன். அதற்கும் முயன்றேன் நழுவி அவன் பலமுறை என் வீரர்கள் கையிலிருந்து நா விட்டான். இருப்பிடம் தெரியாமல் மறைத்து கின்றான். அவன் வந்திருக்கும் பணியும் வீரர்களுக்க பணியல்ல. ஒற்றன் செய்யவேண்டிய வேலை இளவரசன் செய்கிறான். ஆகையால் ஒற்றனைப் பிடி வேண்டிய முறை, அழிக்க வேண்டிய முறை இவற்றை அவன் விஷயத்திலும் கையாளுகிறேன். ஒற்றனைப் யிருந்தாலும் அவன் பலமாயிருந்தவரையில் என்ன அவனை அண்ட முடியவில்லை. பத்து நாட்களுக்கு முன்பு அவனுக்கு ஒரு பலவீனம் ஏற்பட்டது. அந்தப் பலவீன என் சக்தியாயிற்து” என்று கூறினான்,

எந்தப் பலவீனத்தை அவன் குறிப்பிடுகிறானென்பதை இளநங்கை உணர்ந்தே இருந்தாள்.

மேற்கொண்டு வீரரவியே விளக்கினான். “அவ கொற்கையின் சிறந்த அழகியைச் சுற்றத் தொடங்கிய எனக்கு அனுகலமாயிற்று, உன்னைச் சுதந்திரமாக உலவ அனுமதித்து அவனைப் பிடிக்க அல்லது ஒழிக்க தீர்மானித்தேன். அதற்கு நேற்றிரவு நல்ல வாய்ப்பு அளித்தது. ஆனால், என் வீரர்கள் தவறிவிட்டார்க வீரர்களில் ஐவரை இழக்கவும் இழந்தேன். இருப்பினு எனக்குத் தெரியும் எப்படியும் அவன் அடுத்த முயற்சியில் இறங்குவானென்பது. அதற்காக எனது கழுத்து பதக்கத்தை தானே அறுத்து இந்த மாளிகைக்கு எதிரி தோப்பின் விளிம்பில் போட்டு வைத்தேன். அடுத்த என்ன நடக்குமென்று எனக்குத் தெரியும். பதக்கத்தி துணைகொண்டு இங்கு வேவு பார்க்க யாராவது வருவார் ளென்பதை அறிந்து இருந்தேன். ஆனால் இத்தனை அழக ஒற்றரை நான் எதிர்பார்க்கவில்லை” என்ற வீரரலி “இன் நான் பெரும் பாக்கியம் செய்திருக்கிறேன். இன் என்னிடம் சிக்கப்போவது பாண்டிய நாட்டு இளவரசர்

மட்டுமல்ல, கொற்கைக் கோட்டையும் என் கைவசமாகும்” என்று அறிவித்தான் சர்வசாதாரணமாக.

இளநங்கை ஆசனத்திலிருந்து துள்ளி எழுந்தாள் கொற்கைக் கோட்டையா!” என்றாள் பிரமிப்புடன்.

“ஆம், இளநங்கை! கொற்கையின் கோட்டைதான். பாண்டிய மன்னனுடன் பகைமை கொண்டிருக்கும் சேர மன்னன், தன்னந்தனியாகப் பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரத்தை வேடிக்கை பார்க்க வந்திருக்கிறான் என்று நினைக்கிறாயா? இல்லை, இல்லை! சுமார் ஆயிரம் சேர வீரர்கள் இந்தக் கொற்கையில் மாற்று உடையில் திரிந்து கொண்டிருக்கிறார்கள். முத்தங்காடியிலேயே சுமார் ஐந்நூறு வீரர்கள் தினம் உலாவுகிறார்கள், முத்தங்காடியை இன்றுகூட நான் சூறையாடிவிட முடியும். கோட்டை தான் பெரும் பிரச்சினையாக இருந்தது. உன் வரவு அதையும் தீர்த்துவிட்டது. இப்பொழுது உன் காதலனும் வருவான். தந்தையும் வருவார். காதலன் தானாக வருவான். தந்தை என் அழைப்பை ஏற்று வருவார்!” என்று கூறி நகைத்தான் வீரரவி,

அவன் சொற்களைக் கேட்ட இளநங்கையின் விழிகளில் கோபம் துளிர்த்தது. “அவர்கள் இருவரும் வரும் வரை என்னை என்ன செய்ய உத்தேசம்?” என்து சீறினாள், நின்ற வண்ணம் சேர மன்னனை நோக்கி,

“என் விருந்தாளியாக இருக்கவேண்டும்.”

“நாள் இஷ்டப்படாவிட்டால்?”

“உன் இஷ்டத்தை மட்டும் கவனிக்கும் நிலையில் நான் இல்லை. என் இஷ்டத்தையும் கவனிக்க வேண்டி விருக்கிறது,” என்று கூறிய சேரமன்னன், அரியணையில் சாய்ந்து கொண்டான்.

“உங்கள் இஷ்டத்தைப் பற்றி எனக்கு அக்கறைவில்லை.

“மன்னர்கள் இஸ்டத்தை எதிர்ப்பது விவேகமல்ல” என்ற சொற்கள் திடீரென அந்த மண்டபத்தை ஊடுருவின.

Previous articleRaja Muthirai Part 1 Ch7 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch9 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here