Home Historical Novel Raja Muthirai Part 1 Ch9 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch9 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

59
0
Raja Muthirai Part 1 Ch9 Raja Muthirai Part 1 Sandilyan, Raja Muthirai Part 1 Online Free, Raja Muthirai Part 1PDF, Download Raja Muthirai Part 1 novel, Raja Muthirai Part 1 book, Raja Muthirai Part 1free, Raja Muthirai,Raja Muthirai Part 1 Story in tamil,Raja Muthirai Part 1 Story,Raja Muthirai Part 1 novel in tamil,Raja Muthirai Part 1 novel,Raja Muthirai Part 1 book,Raja Muthirai Part 1 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 1tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1,Raja Muthirai Part 1full story,Raja Muthirai Part 1 novel full story,Raja Muthirai Part 1audiobook,Raja Muthirai Part 1audio book,Raja Muthirai Part 1full audiobook,Raja Muthirai Part 1full audio book,
Raja Muthirai Part 1 Ch9 |Raja Muthirai Part 1|TamilNovel.in

Raja Muthirai Part 1 Ch9 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 9 இரண்டே கேள்விகள்

Raja Muthirai Part 1 Ch9 |Raja Muthirai Part 1|TamilNovel.in

கவனித்துவிட்டதன்றி, தன்னை மறைமுகமாக எச்சரிப் பதையும் கேட்க, சேர மன்னனுக்கு அச்சத்துக்குப் – வியப்பே பன்மடங்கு அதிகமாகப் பெருகியதாகையா அவனும் வீரபரம்பரையில் பிறந்தவனாகையாலும், தனது வீரர்களைத் தூரத்திலேயே நிற்கும்படி சைகை செய்து விட்டு, “பாண்டிய இளவரசர் வீரத்தை மெச்சுகிறேன் உங்கள் துணிவு என் நெஞ்சத்தைத் தொடுகிறது” கூறினான்.

வீரரவி அரியணையிலிருந்து ஆரம்பத்தில் எழுந்தானானாலும் அவன் இரண்டே வினாடிகள் நிதானப்பட்டு விட்டதையும், சகஜமாகப் பேச ஆரம்பி விட்டதையும் கண்ட இளநங்கை, அந்தச் சில விநாடிகள் அவனைப்பற்றியும் நல்லெண்ணம் சிறிது கொண்ட இத்தனை வீரர்களாகவுள்ள தமிழக மூவேந்தர்கள் மட்ட பேராசையும் பரஸ்பர பகையுமில்லாதிருந்தால் தமிழ எத்தனைப் பெருமையுடனிருக்க முடியும் என்று உள் எண்ணிக் கொண்டாள். ஆனால், அந்த எண்ணம் கன பொழுதில் விலகவே, கூறிய அறிவும் சீரிய வீரன் கொண்ட அந்த இரு விரோதிகளும் அடுத்து என் செய்யப்போகிறார்களோ என்ற கவலையில் அவ்விரு மீதும் கண்களை ஓட்டினாள்.

வீரபாண்டியன் தன் சொந்த மாளிகையிலிருப்பது போலவே நடந்துகொண்டான் தூணில் சர்வ சாதாரமாகச் சாய்ந்து நின்றவண்ணமே சேர மன்னனுக்குப்பதி கூறினான்: பெரு வீரரென்று பிரசித்தி பெற்ற மன்னரால் பாராட்டப்படுவதற்கு தான் பெரும் பாக்கிய செய்திருக்கவேண்டும். என் செய்கையைத் துணிவு என் குறிப்பிடுவதை விடக் கடமை என்று குறிப்பிடும் பொருந்தும்” என்று.

வீரரவி தனது விரோதியை ஒருகணம் கூர்ந்து நோக்கினான். “கடமையா! என்று கடமை?” என் வினவினான்.

“கொற்கையையும், கோட்டைக் காவலர் மகளையும் பாதுகாக்கும் கடமை, பாண்டிய நாட்டு இளவரசுப் பொறுப்பை ஏற்றியிருப்பதால் கொற்கையைக் காப்பாற்றக் கடமை இருக்கிறது. இளநங்கையை இங்கு நானே அனுப்பியதால் அவர்களைப் பாதுகாக்கும் கடமையுமிருக்றது” என்று சுட்டிக் காட்டினான் வீரபாண்டியன்.

“இந்த இரண்டும் சாத்தியமில்லை வீரபாண்டியரே. நீர் கொற்கையையும் காக்க முடியாது, தற்சமயம் இந்த இளநங்கையையும் காக்க முடியாது. இரண்டையும் காப்பதோ அழிப்பதோ என் கையில் இருக்கிறது,” என்று வீரரவி மீண்டும் தனது மஞ்சத்தில் உட்கார்ந்து கொண்டான், “வேண்டுமானால் தாங்களும் அமரலாம்,” என்று சற்று அருகிலிருந்த மஞ்சத்தையும் எட்டிக் காட்டினான்.

“நிற்பதே சௌகரியமாயிருக்கிறது.” என்ற வீரபாண்டியன், “சேர மன்னரே! திரும்பத் திரும்ப ஒரே விதமான தவறைச் செய்கிறீர்கள், அந்தத் தவறுதான் உங்கள் பலவீனம், உங்கள் திட்டத்தின் வானமும் அதுதான். அதுதான் உங்களை அழிக்கப்போகிறது.” என்றும் கூறினான.

“என்ன தவறு ” என்று சற்று நிதானத்தைக் கைலிட்டுக் கேட்டான் வீரரவி.

“நீங்களாகவே விஷயங்களை முடிவு செய்து கொள் கிறீர்கள். அதுவும் விஷயங்களைச் சீர்தூக்கிப் பார்க்காமல் பல முடிவுகளைச் செய்துவிடுகிறீர்கள்,” என்றான் வீர பாண்டியன்.

“என்ன விஷயங்களை முடிவு செய்தேன்?” வீரரவி எரிச்சலுடன் வினவினான்.

“கொற்கையில் மறைந்து திரியும் உங்கள் ஆயிரம் வீரர்களைக் கொண்டு முத்தங்காடியைச் சூறையாடிக் கொற்கைக் கோட்டையையும் பிடித்துவிட முடிவு செய்து விட்டர்கள், அடுத்தபடி நான் கோட்டைக் காவலர் மகளின் காதலன் என்று கூறினீர்கள். இப்படிப் படிக்குப் படி தவறு செய்கிறீர்கள், மன்னரே! கொற்கையில் உங்கள் வீரர்கள் மட்டும்தான் மறைத்து திரிவதாக நினைக்கிறீர்கள். அது முதல் தவறு. இளநங்கையை நீராட்டத் துறைய தினம் தினம் பார்த்து வந்ததால், என்னைக் காமுகனென்றும், காதலனென்னும் முடிவு செய்து கொண்டீர்கள். அது இரண்டாவது தவறு. நீராட்டத் துறையில் பெண்களைப் பார்ப்பதும், பிறகு தொடருவதும் சேர நாட்டுப் பண்பாயிருக்கலாம். ஆனால் பாண்டிய நாட்டு பண்பு அதுவல்ல!” வீரபாண்டியன் இதை மிக தெளிவாகக் கூறினான்.

“பிறகு ஏன் இளநங்கையைத் தொடர்ந்தீர்கள், பிரதி தினமும்?” என்று வினவினான் வீரரவி.

“இதுவும் தவறு. நான் தொடராததைக் குறித்து நீங்களே சற்று முன்பு வருத்தப்பட்டீர்கள். கொற்கையையும் கோட்டையையும் என்னையும் பிடிக்கக் கோட்டைக் காவலர் மகளைத் தூண்டிற் புழுவாக உபயோகப்படுத்தியதாக நீங்களே அறிவித்தீர்கள் சற்று முன்பு. இதில் நீங்கள் செய்த தவறும் ஒன்று!”

“என்ன தவறு!”

இளதங்கையைக் கருவியாக நீங்கள்தான் உபயோகப் படுத்தியதாக நினைத்தது தவறு. அப்படியே ஏன் மாற்றாலும் உபயோகப்படுத்தியிருக்கக் கூடாதென்று சிந்திக்க வில்லை நீங்கள், என்னை இருமுறை உங்கள் வீரர்கள் கொல்ல முயன்றதிலிருந்தே உங்கள் எண்ணம் புரிந்தது எனக்கு. பிறகுதான் நான் கோட்டையைக் கண் காணிக்க முற்பட்டேன். அதை நீங்கள் தெரிந்து கொண்டதும் கோட்டைக் காவலர் மகளைப் பார்க்க வருவது போல் பொருதைப் படித்துறைக்கு வந்தேன். மீதி விஷயங்கள் உங்களுக்கே தெரியும்,” என்று விளக்கிய வீர பாண்டியன் சற்றே இளநகை கூட்டினான்.

“அப்படியானால், நேற்றிரவு மட்டும் இளநங்கையைத் தொடர்ந்து தோப்புக்குள் ஏன் நுழைந்தீர்கள்?” என்று வினவினான் வீரரவி சந்தேகத்துடன்.

“இரவில், அந்தத் தோப்பு வழியில் இவர்களைத் தனியாகப் போகவிட இஷ்டமில்லாததால் தொடர்ந்தேன், தொடர்ந்தது ஒரு விஷயத்தில் நல்லதாயிற்று,” என்ற வீர பாண்டியன் வீராவியைக் கூர்ந்து நோக்கினான்.

இரு எதிரிகளின் கண்களும் ஒரு விநாடி கலந்தன. வீரரவியின் கண்கள் நிதானத்தை இழந்துகிடந்ததை இள நங்கை கவனித்தாள். வீரபாண்டியன் மட்டும் சர்வ நிதானத் துடனிருந்தான். சில விநாடிகள் வீரபாண்டியனைப் பார்த்த பிறகு வீரரவி கேட்டான், “என்ன நல்லதாயிற்று?” என்று.

“சேர மன்னரைச் சந்திக்க முடிந்தது,” என்று கூறிய வீரபாண்டியன், “உங்களைச் சந்திக்கவே பலமுறை முயன்றேன். உங்களிருப்பிடம் தெரியவில்லை. எப்படியும்: உங்களை அணுகத் தீர்மானித்தேன். ஆகவே, உங்கள் பதக்கத்தைக் கண்டதும் ஒரு முடிவுக்கு வந்தேன். இன்று எப்படியும் சந்தித்துவிட முடிவுசெய்தேன். என் முடிவு நீங்கள் செய்யும் முடிவுகளைப் போன்றதல்ல சேரமன்னரே. அது தவறுவதில்லை , நடக்கிறது!” என்று வலியுறுத்தியும் பேசினான்.

வீரரவி மீண்டும் மௌனம் சாதித்தான். பிறகு ஒரு முடிவுக்கு வந்து, “சந்தித்தாகிவிட்டதல்லவா? அடுத்தபடி என்ன செய்ய உத்தேசம்?” என்று வினவினான்.

வீரபாண்டியன் சற்றுச் சிந்தனையில் இறங்கினான். சிந்தனைக்குப் பிறகு சேர மன்னனை நோக்கிய அவன் விழிகளில் அனுதாபமும் மண்டிக் கிடந்தது. அந்த அனுதாபம் அடுத்தபடி உதிர்ந்த அவன் சொற்களிலுமிருந்தது. “சேர மன்னருக்குப் பாண்டிய நாடு எந்தத் தீங்கையும் விளைவிக்க இஷ்டப்படவில்லை. ஆகவே இரண்டு நிபந்தனைகளின் பேரில் உங்களைச் சேர நாடு போக என்னால் அனுமதிக்க முடியும்,” என்றான் வீர பாண்டியன்.

இதைக் கேட்ட வீரரவியின் பிரமிப்பு எல்லை கடந்தது. பாண்டிய இளவரசனுக்குச் சித்தப் பிரமை ஏதுமில்லை என்பதை நிர்ணயித்துக்கொள்ள அவனைக் கூர்ந்து நோக்கினான். “இப்பொழுது அனுமதிக்கும் நிலையிலிருப்பது நீங்களா நானா?” என்றும் வினவினான் சேரமன்னன், பிரமிப்பைக் குரலிலும் காட்டி.

“நான் இந்த மாளிகைக்குள் வந்த பின்பு இத்தகைய சந்தேகம் உங்களுக்கு ஏற்படுவது இயற்கைதான். ஆகவே உங்கள் சந்தேகத்தை நானே திவர்த்திக்கிறேன். அந்த நிலையிலிருப்பது நான்தான். இன்று முதல் முத்தங்காடி பலமான பாதுகாப்பிலிருக்கிறது. எந்த விநாடியில் உங்கள் வீரர்கள் அங்கு சூறையாட முயன்றாலும், சுமார் இருநுற்று, ஐம்பது யவனர்களாலும், ஐந்நூறு பாண்டிய வீரர்களாலும் அழிக்கப்படுவார்கள். கோட்டைக் காவலரும் இத்தனை நேரம் கோட்டையைப் பலப்படுத்தியிருப்பார். அவரிடம் ஆயிரம் வீரர்கள் இருப்பதாகச் சற்று முன்பு அவரே சொன்னார். தவிர பாண்டிய ஒற்றர்கள் வேறு சேரநாட்டுக்கும், பாண்டிய நாட்டுக்கும் இடையில் உள்ள எல்லையில் காவல் செய்கிறார்கள்,” என்றான் வீர பாண்டியன்.

வீரரவியின் கண்களில் சீற்றம் தெரிந்தது. “இத்தனை யையும் நிறைவேற்ற இளவரசர் இந்த மாளிகையிவிருந்து வெளியேற வேண்டுமல்லவா?” என்று சீறி ஆசனத்திலிருந் எழுந்தான் வீரரவி.

“ஆம்!” வீரபாண்டியன் பதில் நிதானமாகவே இருந்தது.

“எப்படி வெளியேறுவதாக உத்தேசம்.?”

“அதைவிட வேறொரு கேள்வியைக் கேட்டிரு வேண்டும் நீங்கள்?”

“என்ன கேள்வி?”

“இந்த மாளிகைக்குள் எப்படி வந்தேன் என்பதை கேட்கவில்லையே!”

அப்பொழுதுதான் வீரரவிக்குப் பெரும் சந்தேக ஏற்பட்டது. தானறியாமல் வீரபாண்டியன் மாளிகைக்கு வரமுடியுமானால், மற்றும் பலரும் வரமுடியும் என் எண்ணம் ஏற்படவே, வீரபாண்டியன் நின்ற இடததையு அதற்குப் பின்னாலும் நோக்கலானான்.

அவன் பார்வை சென்ற இடங்களைக் கண்ட வீரபாண்டியன், “அதைரியப்பட வேண்டாம், மார்த் தாண்டவர்மரே! வேறு யாரும் என்னுடன் வரவில்லை. நான் தனியாகவே வந்திருக்கிறேன்,” என்று தைரியம் சொன்னதுடன் நில்லாமல், “ஏன் தெரியுமா?” என்றும் வினவினான்.

“ஏன்?” ஆத்திரத்துடன் இரைந்தான் வீரரவி.

“பாண்டிய நாடு, சேர நாட்டுடன் போரை விரும்பவில்லை. இந்த மாளிகையில் நீங்களிருப்பதை அறிந்த தல்லாமல், உங்கள் வீரர்களில் பெரும்பாலோர் முத்தங்காடியிலும் கொற்கை நகர்ப்புறத்திலும் திரித்ததையும் அறிந்த எனக்கு, இங்கு நூறு வீரர்களை அழைத்து வந்து உம்மைச் சிறை செய்வது பெரும் காரியமல்ல. ஆனால் உங்களைச் சிறை செய்வதோ, சேர நாட்டுடன் பகைமை கொள்வதோ பாண்டிய மன்னர் நோக்கமல்ல, ஆகவே, நீங்கள் நாடு செல்ல அனுமதிக்கிறேன். ஆனால் இரண்டு விஷயங்களை நீங்கள் எனக்கு விளக்கவேண்டும்,” என்றான் வீரபாண்டியன் அதிகாரம் பூர்ணமாகத் தொனித்த குரலில்.

“எந்த இரண்டு விஷயங்கள்!”-சிறினான் சேரன்.

இரண்டு விஷயங்கள் எவையென்பதை விளக்கினான் வீரபாண்டியன். அவன் கேட்ட கேள்விகள் இரண்டே தான். அவை கேள்விகளா, இதயத்தைப் பிளக்க வந்த கூர்வேல்களா என்பது புரியவில்லை வீரரவிக்கு, எல்லையற்ற சினத்தின் வசப்பட்ட வீரரவி, “இவனைப் பிடித்து வெட்டிப் போடுங்கள்.” என்று, தனது வீரர்களை நோக்கி மண்டபமே அதிரும்படி இரைந்தான். அதுவரை காத்திருந்த நாலைந்து வீரர்கள் மட்டுமின்றிக் கூடத்தின் தாழ்வாரத்தில் இருந்தும் பலவீரர்கள் வீரபாண்டியன்மீது உருவிய வாள்களுடன் பாய்ந்து வந்தார்கள். நாலைந்து குறுவாள்களும் மேலிருந்து அவன் முகத்தையும் மார்பையும் நோக்கிப் பறந்துவந்தன. இளவரசன், அழிந்துவிட்டா னென்ற நினைப்பில் இளநங்கை வீறிட்டு அவறினாள். அந்த அவறாலைப் பெருமண்டபத்தின் சுவர்களும் தூண்களும் வாங்கி எதிரொலி செய்ததால் தாண்களும் சுவர்களும் கூட அலறும் பயங்கர ஒலிகள் எங்கும் சூழ்ந்தன.

Previous articleRaja Muthirai Part 1 Ch8 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 1 Ch10 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here