Home Historical Novel Raja Muthirai Part 2 Ch26 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch26 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

58
0
Raja Muthirai Part 2 Ch26 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch26 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch26 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 26 மைத்துனி வந்தாள்

Raja Muthirai Part 2 Ch26 | Raja Muthirai | TamilNovel.in

அரபு உடை அணிந்த அந்த இருவரும் தன்னைத் தெருக் கூட்டத்திலிருந்து மிகச் சாமர்த்தியமாக விலக்கிக் காட்டுக்குள் அழைத்து வந்தது கூட அளிக்காத கிலியையும் வியப்பையும் அரண்மனைக் காவலனுக்கு அவர்கள் முகங்கள் அளித்ததென்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. தான் சற்றும் சொப்பனத்தில் கூட நினைக்காத இருவர் அராபிய உடைக்குள் புகுந்திருந்ததை அரண்மனைக் காவலன் எப்படித்தான் எதிர்பார்த்திருக்க முடியும்? திருவிதாங்கூர் இருந்த அமைப்பில் தன்னைக் காட்டுக்குள் கொண்டு வருவது பெரும் பிரமாதமில்லை என்பதை அரண்மனைக் காவலன் உணர்ந்து கொள்ளவே செய்தான். ஆனால் அந்த இருவர் அந்த நகரில் உலாவுவதே பெரும் பிரமிப்பாயிருந்தது அவனுக்கு.

திருவிதாங்கூரின் அமைப்பை இன்று பார்த்தால் கூட அதில் காட்டுக்குள் யாரைக் கொண்டு போவதும் மிக எளிதென்பது புலனாகும். பெருமலைச் சரிவில் பண்டை நாளில் பெரும் நகரமாக நிர்மாணிக்கப்பட்டு, இன்று திரு வனந்தபுரத்திலிருந்து தென்மேற்கில் முப்பத்தைந்து மைல் தூரத்தில் சிற்றூராகக் காட்சியளிக்கும் திருவிதாங்கூரைச் சுற்றி இப்பொழுதும் காடுகளே இருக்கின்றன.

திருவிதாங்கூரிலிருந்து மிகச் சரிவாக இறங்கும் மலைப் பகுதியில் வீதிகளின் மேற்புறத்தில் வீடுகளைத் தொட்டுக் கொண்டு கண் செல்லும் அளவுக்குக் காடுகளே இருக்கின்றன. திருவிதாங்கூரிலிருந்து மேற்கே சமுத்திரத்திலுள்ள கொளச்சலில்தான் தொடமுடியுமாதலால் அந்தத்தூரத்துக்கு நெடுகிலும் பெரும் காடுகளையும் தோட்டங்களையும் பார்க்கலாம், பெரும் தென்னைகளையும் பற்பல காட்டு மரங்களையும் கொண்ட அந்த மலைச்சரிவு கடலுக்கு ஓடுவதே கண்கொள்ளாத கவர்ச்சிக்காட்சி அதை விடப் பெரிதாக எழுந்து நின்று கீழ்ப்புறத்தே காட்சியளிக்கும் பெருமலை ஒரு பயங்கரம். இந்தக் கவர்ச்சிக்கும். பயங்கரத்துக்கும் இடையேயுள்ள திருவி தாங்கூரின் வீதிகளுக்கு அக்கம் பக்கமெங்கிலும் காடுகள் பரந்து நிற்பதால் யாரையும் அங்கு பதுக்குவதோ படுகொலை செய்வதோ பிரமாதமல்ல. இன்றைய திருவி தாங்கூரின் நிலையை வைத்து பரலிமா நகரை எண்ணிப் பார்த்தால், இன்றைய சிற்றூரைப் பழைய பெருநகரமாக விரித்துப் பார்த்தால், சற்றே பெரிய வீதிகள், அதிக வெளிநாட்டு வாணிபம் பெரும் மாளிகைகள் இவற்றுடன் கடல் வரை நகரம் தெரியும். அத்துடன் வீதிகளைச் சூழ்ந்த காடுகளும் மலைச்சரிவுகளும் தெரியும். இத்தகைய காடு களைக் கொண்ட பரலியில் அரண்மனைக் காவலனை அரபு உடையணிந்த இருவரும் அழைத்து வந்தது பெரும் வியப்பில்லையல்லவா?

ஆகவே அதைப்பற்றி வியப்படையாத அரண்மனைக் காவலன், முதல் அராபியன் தன் முக்காட்டை நீக்கியதும் வியப்பினாலும் கிலியாலும் வாயைப் பிளந்து நின்றான். பிறகு “நீயா!” என்று கிலி நிரம்பிய குரலில் கேட்கவும் செய்தான்.

அவன் முன் நின்றவன் செண்டு வெளியில் சாகசச் செயல் புரிந்து குழப்பத்தில் வெளியேறிவிட்ட அந்தத் துணி கர வாலிபன். அவன் விகாரமுகத்தைவிட அவன்யாரென்ற உணர்வு பெரும் அதிர்ச்சியை அளித்தது அரண்மனைக் காவலனுக்கு. அவன் கிலியைக் கண்டு சற்றுப் புன்முறுவல் கோட்டிய இந்திரபானு, “என்னைவிட அவர் உனக்குத் தெரிந்தவர்” என்று கூறி மற்றவனை முக்காட்டை நீக்கச் செய்ததும் அரண்மனைக் காவலனின் பிரமிப்பு எல்லை கடந்தது. “நீண்ட நேரம் வாயடைத்து நின்ற காவலன், “கூத்தா! நீயா?” என்றான் வியப்பு மிதமிஞ்சிக் குரலில் ஒலிக்க.

கூத்தனும் முறுவல் செய்தான். காவலனை நோக்கி, “ஆம். நான்தான்,” என்றும் கூறினான் சர்வசகஜமாக.

‘கூத்தா, நீ இங்கிருப்பது தெரிந்தால்” என்று இழுத்தான் அரண்மனைக் காவலன், விளைவைச் சொல்லப் பயந்து.

“வெட்டுப்பாறைக்கு அனுப்புவார்கள்,” என்று சர்வ அலட்சியமாகப் பதில் சொன்னான் கூத்தன்.

அடுத்தப் பேச்சு எதுவும் அரண்மனைக் காவலனிடமிருந்து வரவில்லை. நீண்ட நேரம் அவர்களை நோக்கி மிரள மிரள விழித்தான். பிறகு தட்டுத் தடுமாறி, “நீ… நீ…” என்று திணறினான்.
கூத்தன் அவனை முதுகில் தட்டிக் கொடுத்து, “தயங்காமல் சொல் தம்பி! ஒற்றன் என்றுதானே சொல் கிறாய்! நான் ஒற்றன்தான். இவரும் அந்த நிலைதான்,” என்று இந்திரபானுவையும் சுட்டிக் காட்டினான்.

அரண்மனைக் காவலன் முகத்தில் சற்றுத் துணிவு தெரிந்தது. “இவர் இந்த நாட்டுக்கு விரோதியாயிருப்பதில் நியாயமிருக்கிறது. ஆனால் நீ…கூத்தா… நீ இந்நாட்டவன்…” என்றான் காவலன் சற்று வெறுப்புடன்.

“நீ சொல்வது புரிகிறது தம்பி! ஆனால் ஒரு விஷயம் நீ மறந்துவிட்டாய்,” என்றான் கூத்தன்.

“எது கூத்தா?”

“நான் குருநாதரின் அடிமையென்பதை.”

“ஆம் ஆம்.”

“நமது மன்னர் பெண்ணைக் களவாடியதைக் குரு நாதர் ஒப்பவில்லை.”

“ஆம்.”

“ஆகவே இவருக்கு உதவும்படி எனக்குக் கட்டளை யிட்டார்,” என்று இந்திரபானுவைச் சுட்டிக் காட்டினான் கூத்தன்.

அரண்மனைக் காவலன் பதிலேதும் சொல்ல வில்லை. தலையை மட்டும் ஆட்டினான். கூத்தனே தொடர்ந்தான், “குருநாதர் இப்பொழுதும் மக்களுக்கு ஓலை விடுத்திருக்கிறார், மன்னனுக்கு எதிராக,” என்று.

“ஆம்” என்றான் அரண்மனைக் காவலன்.

“குருநாதர் சேரநாட்டுத் துரோகியா?” என்று வின வினான் கூத்தன் உஷ்ணத்துடன்.

அதற்குப் பதில் சொல்லவும் அஞ்சினான் அரண் மனைக் காவலன். முத்துக் களவையும், முத்துக்குமரியின் களவையும் குருநாதர் வெறுக்கிறார் என்பதை அரண்மனையில் எல்லோருமே அறிந்திருந்தார்கள்; தலைநகரும் அறிந்திருந்தது. “சேரனே! எதிரியைப் போரால் முறியடித்து அவன் செல்வத்தைக் கவர்ந்து வா. உன் பக்கம் நானிருக் கிறேன்; அவன் நாட்டுக்குள் துணிவுடன் புகுந்து மகளைச் சிறையெடுத்து வா. அதை ஆமோதிக்கிறேன். ஆனால் சிங்களத்துடன் சேர்ந்து முத்துக்களவு செய்ததையும், காட்டுக் கள்ளரையும், சிங்கணன் போன்ற ஒற்றனையும் கொண்டு வஞ்சகத்தால் பாண்டியன் வஞ்சியைக் கவர்ந்த தையும் நான் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?” என்று மன்னனை நோக்கிக் குருநாதர் சீறியதாக அரண்மனையில் கிசுகிசுவென்று பேசிக் கொண்டதும், அரண்மனைக் காவல னுக்குத் தெரிந்தது.

தவிர அரசனிடம் கொண்ட பக்தியைப் போல் பரத பட்டனிடம் பத்து மடங்கு அதிக பக்தியை மக்கள் கொண்டிருந்ததால் அவரைப்பற்றி எதிர்த்து நாலு வார்த்தை சொல்வதும் அச்சமாயிருந்தது அவனுக்கு. ஆகவே அதைப் பற்றிய சர்ச்சையில் இறங்காத அரண்மனைக் காவலன் கேட்டான் அவர்களிருவரையும் நோக்கி, “என்னை எதற்காக இப்படி அழைத்துக்கொண்டு வந்திருக்கிறீர்கள்?” என்று.

இதற்குக் கூத்தன் பதில் சொல்லவில்லை. இந்திர பானுவே பதில் சொன்னான்: “வீரனே! நீ சத்திரத்தில் பேசியதைக் கேட்டோம். நீ அளித்த விவரங்கள் ருசியா யிருந்தன,” என்று.

“எந்த விவரங்கள்? வெளியூர்களிலிருந்து வரும் மக்களை நகரத்தில் தேக்காமல் வெளியே அனுப்பும் திட்டமா?”

இந்திரபானு மெள்ளப் புன்முறுவல் கோட்டினான். “அது ரகசியமல்ல வீரனே! புரவி வீரர் வரும் மக்களை வரிசையாக நகரின் தெற்குப்புறமாகச் செலுத்தும்போது யாருமே அதைப் புரிந்து கொள்வார்கள். அதுவும் போர்களில் பழக்கமுள்ளவர்களுக்கு இது சுலபமாகப் புரியும். அதல்ல நான் குறிப்பிடுவது,” என்று கூறிக் கூத்தனையும் நோக்கினான்.

அரண்மனைக் காவலன் வாயைத் திறக்குமுன்பு கூத்தன் கூறினான், “அவர் குறிப்பிடுவது பாண்டிய இளவரசியைப் பற்றி” என்று.

“பாண்டிய இளவரசி இருக்குமிடம் நான் செல்ல முடியாதே?” என்றான் அரண்மனைக் காவலன்.

“அத்தனை பெரிய பணியை உனக்கு நாங்கள் அளிக்க மாட்டோம்” என்றான் இந்திரபானு.

“வேறென்ன நான் செய்ய முடியும்?” என்று வினவினான் அரண்மனைக் காவலன்.

“இந்திரபானு சற்று யோசித்தான். பிறகு கேட்டான், “உன் வீடு எங்கிருக்கிறது!” என்று.

“அரண்மனைக்குப் பின்புறத்தில்…” என்று சொன்ன அரண்மனைக் காவலன் சட்டென்று பேச்சை நிறுத்தினான். வாய் தவறி உண்மையைச் சொல்லிவிட்டதைப் புரிந்து கொண்டதால் அச்சமும் அடைந்தான்.

“அதாவது அரண்மனையின் மேற்கு வாசலில்?” என்று திடமாக எழுந்தது இந்திரபானுவின் அடுத்த கேள்வி.

“ஆம்.”

“அரண்மனை மேற்கு வாசலுக்கும் உன் வீட்டுக்கும் எத்தனை தூரமிருக்கும்?”

“தூரமே இல்லை. மேற்கு வாசலுக்கு எதிரில் மேற்குப் பெருவீதி. அதை அடுத்து, சிறு மலைச்சரிவில் மணமான காவலர் விடுதிகள். அதிலொன்றில்…”

“நல்லது! நல்லது!” என்ற இந்திரபானு கூத்தனையும் நோக்கினான்.

கூத்தனும், “மிக நல்லது,” என்றான்.

“எது நல்லது?” என்று பயத்துடன் கேட்டான் அரண் மனைக் காவலன்.

“உனக்கு மணமாகியிருப்பது,” என்றான் இந்திரபானு.

“அதில் நல்லது என்ன இருக்கிறது?” என்று கேட்டான் அரண்மனைக் காவலன்.

“திருமணத்தில் உபத்திரவம் அதிகம்தான். இருப்பினும் யார் தான் மணத்தை விரும்பவில்லை? நீ மணம் செய்திருப்பது இப்பொழுது எங்களுக்குப் பெரும் அனுகூலம்?” என்றான் இந்திரபானு.

“மிக மிக அனுகூலம்,” என்றான் கூத்தன்.

“எனக்கு மணமானால் உங்களுக்கு என்ன அனுகூலம்?” என்று வினவினான் காவலன் சினத்துடன்.

“உன் மைத்துனர்களாக உங்கள் வீட்டில் நாங்கள் தங்கலாம்,” என்று இந்திரபானு சுட்டிக் காட்டினான்.

“தங்கினால் உங்கள் தலையோடு என் தலையும் சீவப் படும்” என்று கூறினான் வீரன்.

“படைவீரனுக்கு மரணம் என்றும் நிச்சயம்” என்றான் கூத்தன்.

“இப்பொழுது அதற்கு அவசியமில்லை,” என்றான் அரண்மனைக் காவலன்.

“நமது இஷ்டத்தைப் பொறுத்ததல்ல அது” என்று கூறிய இந்திரபானு, “வீரனே, உன் வீட்டுக்கு எங்களை அழைத்துச் செல். அங்கிருந்து நாங்கள் அரண்மனை மீது ஒரு கண்ணை வைத்துக் கொள்கிறோம்,” என்று சொன்னான்.

“நான் மறுத்தால்?” அரண்மனைக் காவலன் கேள்வி கோபத்துடன் எழுந்தது.

“அரண்மனைக்கெதிரில் உன் வீடிருந்தும் பயனில்லை,” என்ற இந்திரபானுவின் குரல் ஏளனத்துடன் ஒலித்தது.

“ஏன்?” காவலன் கேட்டான் கடுமையுடன்.

“நீ வீட்டுக்குச் செல்லமாட்டாய்!” என்ற இந்திர பானுவின் கை அவன் இடைக் கச்சையிலிருந்து குறுவாளைத் தடவியது.

அரண்மனைக் காவலனுக்குத் தன் நிலைமை சந்தேகமறப் புரிந்தது. இவர்களை அழைத்துச் சென்று தன் வீட்டில் இடம் கொடுத்தால் பெரும் ஆபத்து. மன்னனுக்குத் தெரிந்தால் தன் தலை வெட்டுப்பாறையில் உருளும். அழைத்துச் செல்ல மறுத்தால் உடனடியாக மரணம். இரு தலைக் கொள்ளியாகத் திணறிய அரண்மனைக் காவலன் வேறு வழியின்றி அவர்களை அழைத்துச் செல்லச் சம்மதித் தான். அவன் சம்மதம் அளித்ததும், மற்ற இருவரும் முக்காடணிந்து அராபியர் உடையில் அவனைத் தொடர்ந்து அவனில்லம் சென்றனர்.

இல்லத்தில் வாயிற் கதவைத் தாழிட்ட அரண்மனைக் காவலன் தனது மனைவிக்கு அவர்களை தனது நண்பர்களென அறிமுகப்படுத்தினான். இப்படி மூன்று நாட்கள் அவன் வீட்டில் தங்கிய இந்திரபானுவும் கூத்தனும் அராபிய உடையில் இஷ்டப்படி வெளியே செல்வதும் வரு வதுமாக இருந்தனர். சில வேளைகளில் அதிக் அகாலத்திலும் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் போக்கு அரண்மனைக் காவலனுக்குப் பெரும் விசித்திரமாயிருந்தது. வேவு பார்ப்பதாகவும் தெரியவில்லை அவனுக்கு இருவரும் மிக உல்லாசமாகக் காலங் கழிப்பதையும், இரவில் ஊர் சுற்றுவதையுமே கண்டான் அவன். இராக் காலங்களில் சில சமயங்களில் அவனுடன் கூட. அவர்களும் தலைநகரச் சத்திரங்களுக்குச் சென்று மக்கள் பேசுவதைக் கேட்டு வந்தார்கள். பிறகு நான்காவது நாளிரவு அவர்கள் வந்த போது ஒரு பெண்ணையும் அழைத்து வந்தார்கள்.

வந்தவள் மிக அழகாயிருந்தாள். தேகக்கட்டு காவலனை அசரவைத்தது. அவள் கூந்தலில் காதுக்கருகில் காட்டு மலர் ஒன்றைச் செருகியிருந்தாள். “யார் இது?” என்று பயத்துடனும் வியப்புடனும் கேட்டான் அரண்மனைக் காவலன்.

இந்திரபானு புன்முறுவன் செய்து, “உன் மனைவியின் தங்கை, மைத்துனி!” என்று கூறினான்.
“என் மனைவிக்குத் தங்கை கிடையாது. அவள் தந்தைக்கு ஒரே மகள்,” என்றான் அரண்மனைக் காவலன்.

“அந்தக் குறையை இவள் பூர்த்தி செய்வாள்,” என்றான் இந்திரபானு.

“இவள் எதற்காக வந்திருக்கிறாள்?” என்று கேட்டான் அரண்மனைக் காவலன்.

இந்திரபானுவின் பதில் மெல்ல உறுதியுடன் வெளி வந்தது. சொற்கள் நிதானமாக உதிர்ந்தன. அவன் விழிகளில் சதா தாண்டவமாடும் விஷமம் மறைந்து அதன் இடத்தை உறுதி ஆக்கிரமித்துக் கொண்டது. “அரண்மனை யில் பணிபுரிய வந்திருக்கிறாள்,” என்றான் இந்திரபானு.

அரண்மனைக் காவலன் கூத்தனையும் நோக்கி இந்திரபானுவையும் நோக்கினான். இருவர் முகங்களிலும் பெருத்த அபாயமான திட்டத்தை வகுத்துவிட்ட குறி இருந்தது. திட்டத்தை மெள்ள அவிழ்க்கவும் முற்பட்டான் இந்திரபானு.

Previous articleRaja Muthirai Part 2 Ch25 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch27 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here