Home Historical Novel Raja Muthirai Part 2 Ch42 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch42 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

65
0
Raja Muthirai Part 2 Ch42 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch42 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch42 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 42 இரகசிய உத்தரவுகள்

Raja Muthirai Part 2 Ch42 | Raja Muthirai | TamilNovel.in

பரலிமாநகரத்தின் கீழ்ப்புறத்தில் பெரிதாக எழுந்திருந்த பெருமலையுச்சியுடன் போட்டி போடுவது போலிருந்த அரண்மனை ஆஸ்தான மண்டபச் சிகரத்தின் நேர் பின்புறத்தில், அந்தப்புரப் பகுதியின் ஆரம்பத்திலிருந்த மன்னன் சயன அறை மிகப் பெரிதாக மந்திராலோசனைக் குரிய பல வசதிகளுடனுமிருந்ததன்றி, அங்கிருந்த சாளரங் களும் நகரின் பல பகுதிகளையும் பார்க்கும் வகையில் மிகப் பக்குவமாகப் பொருத்தப்பட்டிருந்தன. ஆஸ்தான மண்டபம் அந்த அறையை முன்புறத்தில் மறைத்தாலும், சாளரமொன்று ஈசானிய மூலையில் அமைக்கப்பட்டிருந்த தால் அதன் மூலம் மலைச்சிகரம் ஆஸ்தான மண்டபத்தின் உச்சி இரண்டையுமே பார்க்க முடிந்தது. அந்த அறையை அடுத்த மேற்புறத் தாழ்வரைக்கும் முன்பாகவே சுவரில் பெரும் சாளரங்களிருந்ததாலும், சயன அறை இருந்த பகுதி அந்தப்புரத்தின் மற்ற பகுதிகளைவிடச் சற்று உயரமா யிருந்ததாலும், சாளரங்கள் மூலம் மேலைக் கடல் வெகு நன்றாகத் தெரிந்தது. மன்னன் பஞ்சணை ஈசானிய மூலைச் சாளரங்களும் கடற்புறச் சாளரங்களும் தெரியும்படி சற்று வசதியுடன் அமைக்கப்பட்டிருந்ததால் பஞ்சணையில் சாய்ந்தபடியே மன்னன் பரலியின் இருபகுதிகளிலும் கண்ணைச் செலுத்த முடிந்தது. அது மன்னன் தனி சயன அறையாதலால் மன்னன் பஞ்சணையைத் தவிர வேறு இரண்டு மூன்று மஞ்சங்களும் பெரிய தீபங்கள் இரண்டுமே அவ்வறையில் காணப்பட்டன. தவிர சயன அறையில் சாதாரணமாகக் காணப்படாத வாட்களும் வேல்களும், இரும்புக் கவசங்களும் சுவர்களில் அமர்ந்திருந்தன. மன்னன் ராணிகளின் மாளிகைகளுக்குச் செல்லாத நாட்களில் அந்த அறையில் தான் சயனிப்பது வழக்கமென்பதையும், திடீரென இரவில் ஆயுதமும் மாறு வேஷமும் தரித்து வெளியில் செல்வது வழக்க மென்பதையும் அறிந்திருந்த முதலமைச்சரும் பரத பட்டனும் அறையின் அமைப்பைப் பற்றிச் சிறிதளவும் வியப்பைக் காட்டாமல் மன்னனின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்துக்கொண்டு நின்றனர்.

மன்னன் கண்கள் அன்று கடற்புறத்தையே நோக்கிக் கொண்டிருந்தன. மேலைக் கடல் அன்று பார்ப்பதற்கு மிக லாவண்யமாயிருந்தது. அதில் விளையாடிய கதிரவன் கதிர் களும், விளையாடுவதுபோல் அலைகளில் எழுந்து எழுந்து தாழ்ந்து கொண்டிருந்த நாவாய்கள் இரண்டும், கண்ணைக் கவரும்படியாகவே இருந்தன. தூரப் பார்வைக்கு அந்த மரக் கலங்கள் மிகச் சிறிய படகுகளைப் போல் தென்பட்ட தாலேயே அழகு மிகுந்து நின்ற போதிலும், சாதாரணமாக அழகை ரசிக்கும் ஆற்றலுடைய சேரமன்னன் கண்கள் அன்று அந்த ஆற்றலை இழந்து நின்றன. சிந்தையின் கவலை கண்களின் பார்வையை அர்த்தமற்றதாகச் செய்திருந்தன.
மன்னன் மனோநிலையை உணர்ந்த முதலமைச்சர் மௌனம் சாதித்தாலும் பரதப்பட்டன் மட்டும் மன்னனைத் தேற்றும் வகையில், “மன்னா ஆபத்து அணுகும் போது அறி வாளிகள் கவலையை உதறி விடுகிறார்கள். ஆகவேண்டிய தைக் கவனிக்கிறார்கள்” என்றான்.

முதலமைச்சர் ஏதும் பேசவில்லையென்றாலும், குரு நாதன் சொன்னதை ஆமோதிப்பதுபோல் தலையை மட்டும் அசைத்தார். மன்னன் இருவர் மீதும் கண்களைச் சிறிது நேரம் ஓட்டினான். பிறகு சாய்ந்த நிலையிலிருந்து பஞ்சணையில் நன்றாக எழுந்து உட்கார்ந்து கொண்டான். பிறகு குருநாதனை நோக்கி, “மீதிக் கடற்படை இன்று எப்படியும் வந்துவிடும்” என்று கூறினான்.

குருநாதன் ஆசனத்தில் அமர்ந்தபடியே சொன்னான்; “இத்தனை நேரம் வந்திருக்கும்,” என்று.

மன்னன் மீண்டும் கடல் பகுதியில் கண்களை ஓட்டினான். “வந்ததற்கு அறிகுறிகளைக் காணோம்,” என்றான். “அறிகுறிகள் தெரியக் காரணம் இல்லை ,” என்ற பரதபட்டன் குரல் உணர்ச்சியற்றுக் கிடந்தது.

முதலமைச்சர் புரிந்துகொண்டதற்கு அறிகுறியாகத் – தலையை அசைத்தார். அதைக் கண்ட மன்னன், “என்ன புரிந்துவிட்டது உமக்கு?” என்று சீறினான்.

“குருநாதர் சொன்னது உண்மையென்று,” என்றார் முதலமைச்சர் வணக்கத்துடன்.
“குருநாதர் சொன்னதில் என்ன பொருளைக் கண்டு விட்டீர்?” மன்னன் குரலில் ஆத்திரம் ஒலித்தது.

“இங்கிருந்து கடல் தெரியும்! ஆனால் கடலோர மாளிகைச் சிகரங்கள் மறைக்காத கடற்பகுதி மட்டுமே தெரியும். அவற்றால் மறைக்கப்படும் துறைமுகம் தெரியாது,” என்றார் முதலமைச்சர்.

“உம்” உறுமினான் சேரமன்னன்.

“அதனால் கடற்படை துறைமுகத்துக்குள் வந்திருந் தால் இங்கிருந்து மன்னர் பார்க்கவும் முடியாது, கேட்கவும் முடியாது.”

“கேட்கவும் முடியாதா?”

“ஆம். வெற்றியுடன் திரும்பும் கடற்படை துறைமுகத் திற்குள் புகும்போது சீர்வாணங்களைக் கொளுத்தும். எரியம்புகளை ஆகாயத்தில் வீசும். அவற்றைக் காணும் மக்கள் ஆரவாரிப்பார்கள். கூச்சல் ஒரு காதத்துக்குக் காதைப் பிளக்கும். பத்துக் கப்பல்களைப் பறிகொடுத்து வரும் கடற்படை சந்தடியின்றித்தான் நுழையும். அது நுழைந்த மாதிரியிலிருந்தே கடலோரக் குடிமக்கள் விஷயத்தை ஊகித்து விடுவார்களாதலால்….” முதலமைச்சர் அத்துடன் நிறுத்திக் கொண்டார். அவர் உரையை முடிக்க அவசியமில்லாது போயிற்று.

மன்னன் பெருமூச்செறிந்தான். அந்தச் சங்கட நிலையிலிருந்து குருநாதனே மன்னனை விடுவித்தான்.

“இப்பொழுதும் குடிமுழுகிப் போய் விடவில்லை. அரசு நமது கையில் தானிருக்கிறது. கடற்படையில் பெரும் பகுதியும் தலைநகரப் படை முழுவதும் நமது கையில் தானிருக்கின்றன. எதிரியைக் கண்டு நடுங்க அப்படி அவசியம் ஏதுமில்லை ” என்றான் குருநாதன்.

அரசன் முகத்தில் கவலை வேகமாக வீசியது. சற்று நிமிர்ந்து குருநாதனை நோக்கி, “குருநாதரே! இத்தனை இக்கட்டான நிலையில் சேரநாடு என்றும் சிக்கியதில்லை.” என்றான்.

“இக்கட்டைக் கண்டு அஞ்சவில்லை உன் முன்னோர்கள். இமயவரம்பன் குலத்திலுதித்தவன் இந்த இடைஞ்சலைக் கண்டு அஞ்சுவதில் அர்த்தமில்லை” என்று – பதில் கூறினான் குருநாதன்.

மன்னன் பஞ்சணையில் நகர்ந்து முகப்புக்கு வந்து காலைத் தொங்கவிட்டுக் கொண்டான். “எதிரி மிகத் தந்திரசாலியாயிருக்கிறான்,” என்று சுட்டிக் காட்டினான் வீரரவி.

“தந்திரம் அவனுக்கும் மட்டும் சொந்தமில்லை,” என்ற குருநாதர் விஷமச் சிரிப்புச் சிரித்தான்.

“அந்த விஷயத்தில் குருநாதரைத் தோற்கடிக்க ஆயிரம் பாண்டியர்களாலும் முடியாது,” என்று முதலமைச்சர் பாராட்டினார்.
பரதபட்டன் அந்தப் பாராட்டுதலை லட்சியம் செய்யாமல் மன்னனை நோக்கிக் கேட்டான், “இப்பொழுது என்ன செய்வதாக உத்தேசம்?” என்று.

“தலைநகரை நோக்கி எதிரி வருவதாக நீங்களே சொன்னீர்களே?” என்றான் வீரரவி.

“ஆம்.”

“ஆகவே நகரத்தைக் காக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.”

“செய்ய வேண்டிய ஏற்பாடுகளையும் ஏற்கெனவே சொன்னேனே.”

“ஆம், ஆம். சொன்னீர்கள்.”

இந்தச் சமயத்தில் முதலமைச்சர் சற்று வியப்பைக் காட்டினார். “என்ன சொன்னீர்கள் குருநாதரே?” என்று வினவவும் செய்தார்.

  குருநாதன் பதில் சொல்லு முன்பு மன்னனே பதில் சொன்னான். "கடற்படை எதுவும் துறைமுகத்தை விட்டு அசையக்கூடாது என்று சொன்னார். நகரத்தில் படையைப் போருக்குச் சித்தமாக வைக்கச் சொன்னார். மேற்குப்புறக் கோட்டை வாசலில் விற்கூடங்களை ஏற்றி வைக்கும்படியும் கூறினார்” என்று.

முதலமைச்சர் முகத்தில் வியப்பு மேலும் விரிந்தது. “நீங்கள் அப்படி ஏதும் உத்தரவிடவில்லையே?” என்றும் வினவினான்.

மன்னன் சிறிது நேரம் பதில் கூறவில்லை . பிறகு முதலமைச்சரை நோக்கி, “குருநாதர் ஒத்துழைப்பு நமக்குப் பூரணமாயிருந்தாலொழிய நாம் அந்த உத்தரவுகளைப் பிறப்பிப்பதில் பயனில்லை” என்றான்.

முதலமைச்சர் அதற்குப் பதில் கேள்வியொன்றை வீசினார், “குருநாதரைவிட சேர நாட்டை நேசிப்பவர் யார்? அவர் ஒத்துழைப்பு ஏனிருக்காது நமக்கு?” என்று.

“கடந்த நிகழ்ச்சிகள் ஒத்துழைப்புக்கு அத்தாட்சிகளா யில்லை” என்றான் மன்னன்.

முதலமைச்சர் சற்று தைரியத்துடன், “நீங்கள் காரணமின்றிச் சிறையிலடைப்பவர்களெல்லாம் உங்களுடன் ஒத்துழைக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா?” என்று வினவினார்.

முதலமைச்சரைச் சுட்டுவிடுவது போல் பார்த்தான் வீரரவி. “செண்டு வெளியில் சேரவீரனை மாய்த்தது. எதிரியைக் காத்தது, என்மீது ஜனங்களுக்கு வெறுப்புண்டாக்க புரட்சி ஓலை வீசியது. இவை எல்லாவற்றையும் எந்த மன்னனாவது பொறுப்பானா?” என்று வினவினான் உதய மார்த்தாண்டவர்மன்.

முதலமைச்சர் பதில் சொல்ல வாயெடுத்தார். அவரைப் பேசவொட்டாமல் தடுத்த பரதப்பட்டன், “அரச விரோதத்தை அரசன் சகிக்க முடியாதது போல் அதர்மத்தை பட்டர் குலத்தில் பிறந்த எவனும் சகிக்க மாட்டான். செண்டு வெளியில் எதிரியைத் தனிக்குத் தனி போராடிக் கொன்றிருந்தால் நான் இடைபுகுந்திருக்க மாட்டேன். உப்பரிகைக் கூரையின் மறைவில் வீரனொருவனை நிற்க வைத்து ஈட்டி எறிந்து திருட்டுத்தனமாகக் கொல்ல முயன்றது வீரன் செய்யத் தகாத வேலை. வீரரவி என்று பெயர் வைத்திருக்கும் நீ, பெருஞ்சோற்றுதியன் சேரலாதன், பல்யானை செல்குழுகுட்டுவன் ஆகிய வீராதி வீரர்கள் குலத்தில் உதித்த நீ, தர்மத்தை ஆதரித்த மகான்கள் குலத்தில் உதித்த நீ, அத்தகைய கேவலச் செய்கையில் ஈடுபடத் துணிந்ததை இந்தப் பரதபட்டன் எப்படிப் பொறுக்க முடியும்? பட்டத்தை உடன்பிறந்தானுக்குத் தரக் காவியேற்ற கர்ம வீரன் இளங்கோ பிறந்த வம்சத்தில் பிறந்தவன் காமப் பித்தால் எதிரியின் மகளைக் கள்ளத்தனமாகக் கவர்ந்துவந்ததைக் கண்ணியமுள்ள எவன் சகிக்க முடியும்?” என்று கேள்வியின் மேல் கேள்வியாக அடுக்கினான்.

இதற்கு மன்னன் பதில் கூறவில்லை . சற்றுத் தயங்கிக் கேட்டான், “உங்கள் ஒத்துழைப்பு சேரநாட்டுக்கு உண்டா இல்லையா?” என்று.

“உண்டு. மூன்று நிபந்தனைகளை நீ ஒப்புக் கொண்டால்.”

“என்ன நிபந்தனைகள் அவை?”

“நான் ஏற்கனவே சொன்னபடி இந்நகரத்தில் கடற் படை, நிலப்படை இரண்டும் என் உத்தரவுப்படி நடக்க வேண்டும்…”
“இது முதல் நிபந்தனை.”

“ஆம். இரண்டாவதாக இந்திரபானு எங்கிருந்தாலும் அரண்மனைக்கு வந்து சரணடைய வேண்டியதாக முரசறைவிக்க வேண்டும்.”

“மூன்றாவதாக முத்துக்குமரியை என்னிடம் ஒப் படைத்து விடவேண்டும். அவள் என் அறையைவிட்டு எக்காரணத்தைக் கொண்டும் அகலக் கூடாது.”

“இதுதான் மூன்றாவதா”

“ஆம்.”

“முதல் இரண்டு நிபந்தனைகளுக்கும் போருக்கும் சம்பந்தமிருக்கிறது. இந்த மூன்றாவது நிபந்தனைக்கும் போருக்கும் என்ன சம்பந்தம்?” என வினவினான் மன்னன்.

“போரின் வித்தே அதுதானே மன்னவா?” என்றான் பரதபட்டன்.

மன்னன் தீர்க்காலோசனையில் இறங்கினான். மூன்று நிபந்தனைகளும் அவன் மூளைக்குப் பேரதிர்ச்சியைத் தந்திருந்தன. ‘மாந்திரீகமும், நடனக் கலையும் போதித்து வரும் குருநாதன் கடற்படையையும் நிலப்படையையும் எப்படி நிர்வகிக்க முடியும்?’ என்று தன்னைக் கேட்டுக் கொண்டான். தவிர முரசறைவித்ததும் தானாக வந்து எதிரியிடம் சிக்கிக் கொள்ள பாண்டியர் உபதலைவனான இந்திரபானு முட்டாளா என்றும் வினவிக் கொண்டான். அரண்மனையில் சகலமும் தன் கண் பார்வையிலிருக்க முத்துக்குமரியைக் குருநாதன் அறைக்கு அனுப்பிவிட்டால் என்ன பெரிய வித்தியாசம் ஏற்பட்டுவிடும் என்றும் சிந்தித் தான். வேறு ஒரு சிந்தனையும் அவன் சித்தத்தே எழுந்தது. படை நடத்திப் பழக்கமில்லாத குருநாதன் கண்டபடி உத்தரவுகளைப் பிறப்பித்துப் போரைக் குழப்பிவிட்டால் பரலிமா நகரின் கதி அதோகதியாகிவிடுமே என்ற கிலி அவனைப் பெரிதும் வாட்டியதால் பதிலேதும் சொல்லாமல் இருந்தான்.

அந்தச் சந்தேகத்தை ஊகித்த பரதபட்டன் சொன்னான். “உன் படைத்தலைவர்களை விடப் படையைத் திறம்பட நடத்த எனக்குத் தெரியும். இந்திர பானு சரணடையவேண்டியது என் இஷ்டமென்றால் அவன் சரணடையாதிருக்க முடியாது. அவன் பிற்கால ஜீவிதம் என் கையிலிருக்கிறது. முத்துக்குமரி என்னிடம் ஒப்படைக்கப்பட்டால் அது வெகு சீக்கிரம் மக்களிடையே பரவும். மக்களிடையே பரவினால் இந்நகரத்தில் பரவி நிற்கும் பாண்டிய ஒற்றர்களிடமும் பரவும். பாண்டியனுக்கு இது இரண்டு நாட்களில் தெரிந்துவிடும். அவன் சற்று நிதானிக்கவும் செய்வான்.” இதைச் சொன்ன பரதப்பட்டன் குரலில் உறுதியிருந்தது.

வீரரவி பஞ்சணையில் இருந்து குதித்துத் தரையில் நின்றான். “கடற்படையையும் நிலப்படையையும் நடத்த எங்கு பயின்றீர்?” என்று வினவினான்.
“இங்கு!” என்று தன் தலையை லேசாகத் தட்டிக் காட்டினான் குருநாதன்.

“மூளை போதுமா இதற்கு?” என்று இகழ்ச்சியுடன் கேட்டான் மன்னன்.

“மற்றது போதாது என்று நிரூபிக்கப்பட்டு விட்டதால் இது போதும் என்று நினைக்கிறேன்.” என்றான் குருநாதன் இகழ்ச்சியுடன். அத்துடன், “பெரும் படைப்பயிற்சி உள்ள வர்கள் கோட்டாற்றுக் கரையிலும் கடலிலும் சாதித்ததைப் பார்த்தேன்” என்று கூறி இகழ்ச்சிப் புன்முறுவலும் கோட்டினான்.

சேரநாட்டுக் காவலனுக்கும் குருநாதனுக்கும் நடந்த அந்தச் சொற்போரில் முதலமைச்சர் சம்பந்தப்படாமல் ஒதுங்கி நின்றார். நீண்ட நேரம் மன்னன் ஏதோ சிந்தித்தான். முடிவில் குருநாதனுக்கு மறுநாள் பதில் கூறுவதாகக் கூறி அவனை அனுப்பினான். குருநாதன் சென்ற பிறகு சேனாதிபதியை அனுப்புமாறு உத்தரவிட்டு முதலமைச் சரையும் அனுப்பினான். சற்று நேரத்திற்கெல்லாம் வந்த சேனாதிபதிக்கு சில ரகசிய உத்தரவுகளைப் பிறப்பித்தான் வீரரவி.

Previous articleRaja Muthirai Part 2 Ch41 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch43 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here