Home Historical Novel Raja Muthirai Part 2 Ch45 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch45 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

60
0
Raja Muthirai Part 2 Ch45 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch45 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch45 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 45 அதிகார பீடத்தில் பரதபட்டன்

Raja Muthirai Part 2 Ch45 | Raja Muthirai | TamilNovel.in

நீண்ட நேரம் சித்தனை வசப்பட்டு மௌனம் சாதித்த பிறகு தனது போர்த் திட்டத்தை விவரிக்க முற்பட்ட. குருநாதனின் சின்னஞ்சிறிய தீட்சண்யமான கண்கள் மந்திராலோசனை சபையில் கூடியிருந்த யாரையுமே பார்க்கவில்லை. வெறித்து எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்த கண்கள் அடுத்து வரவிருந்த யுத்த பூமியையே பார்ப்பது போலிருந்தன. உதடுகள் சொப்பனத்திலிருப்பவன் உதடுகளைப் போல அசைந்து சொற்களை உதிர்த்தன. அப்படி, உதிர்க்கப்பட்ட சொற்களில் உறுதியும், ஓர் அழுத்தமும், எடுத்ததைச் சாதிக்க வல்லவனின் திட்டமும்கூடக் காணப்பட்டன. சிந்தனையால் வெறித்த கண்கள், உணர்ச்சியால் சிவந்த முகம், உறுதியால் திறந்த உதடுகள். இவற்றிலிருந்து பிறந்த திட்டத்தை விளங்கிய சொற்கள் மெள்ள மெள்ள ஆரம் பத்தில் உதிர்ந்தாலும் நிமிடங்கள் ஓட ஓட அதிவேகத்தைப் பெற்றன.

பரதப்பட்டன் சொன்னான்; “இந்தச் சபையில் நானிருக்கத் தகுதியற்றவன் என்பதை உணருகிறேன். இங்கு இருக்க வேண்டியவர்கள் மந்திரிகள், பிரதானிகள், படைத் தலைவர்கள் ஆகிய போர் நுணுக்கம் தெரிந்தவர்கள். போர் அனுபவமுள்ளவர்களுக்கே ஏற்பட்டது போர். மந்திரா லோசனைசபை. ஆனால் எத்தகைய அறிவும் தர்மத்துக்கு உட்பட்டது. அந்தத் தர்மம் நம்மிடம் இல்லை. பாண்டியன் குமரியைக் கொணர்ந்ததற்கும், முத்தை அள்ளி வந்ததற்கும் மன்னன் கூறும் காரணங்களை நான் ஒப்பவில்லை. க்ஷத்திரியர்களுக்கு கந்தர்வ ராக்ஷஸ விவாகங்களைச்
சாத்திரம் அனுமதிப்பது உண்மை . ஆனால் எந்த நிலையில் அவை நடைபெறலாம் என்ற நிபந்தனைகளையும் சாத்திரம் கூறியிருக்கிறது. இஷ்டமில்லாத பெண்ணைத் தூக்கிவர நிர்ப்பந்திக்க, சாத்திரம் இடங்கொடுக்கவில்லை பாண்டியன் மீது படையெடுத்து நாடு பிடித்துச் சூறையாடி முத்துக்குவியலைக் கைப்பற்றலாம் ஆனால் அதல்ல நாம் செய்தது, மன்னனைக் குறை கூற நான் இவற்றைச் சொல்ல வில்லை . நாடு நலம் பெறவும், மன்னன் நீண்ட, சிறப்பான ஆட்சி பெறவும் அறத்தின் அஸ்திவாரம் தேவை; போர் வெற்றிக்கும் அது அவசியம். அந்த அறத்தை முதலில் நாம் ஸ்தாபிக்க வேண்டும். பாண்டின் மகள் சிறைவாசியல்ல என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த உறுதியும் உறுதியால் முத்துக்குமரியின் வாழ்வில் ஏற்படக் கூடிய சுதந்திரமும் நமக்கு அறத்தின் அஸ்திவாரத்தைத் தரும். அந்த அஸ்திவாரத்தில் நாம் போரை அமைப்போம். ஆகவே எனது முதல் ஏற்பாடு முத்துக்குமரியை என் ஆதரவில் வைத்துக் கொள்வது. இது தரும் பலம் அதிகம். முத்துக்குமரி இங்கு குருநாதனிடம் இருக்கிறாளென்றால் அது மக்களுக்குத் தெரியும். மக்களுக்குத் தெரிந்தால் பாண்டியன் ஒற்றர்களுக்குத் தெரியும்; ஒற்றர்களுக்கு தெரிந்தால் பாண்டியனுக்கே தெரியும். பாண்டியனுக்குப் பிறகு தூது அனுப்புவோம்…”

இங்கு இடைமறித்தான் சேனாதிபதி, “என்ன தூது?”என்று .

குருநாதன், அவனை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. வெறித்த பார்வை வெறித்தேயிருக்கக் கூறினான், “உன் மகளை நீ அழைத்துப் போகலாம். போரை நிறுத்தினால் கைவசமிருக்கும் முத்தும் உன்னிடம் ஒப்படைக்கப்படும்,” என்று .

“அவன் போரை நிறுத்த இஷ்டப்படாவிட்டால்? சேர மன்னன் சரணாகதியை எதிர்பார்த்தால்?” என்று எழுந்தது முதலமைச்சர் கேள்வி.

அப்பொழுது கூறுவோம் கடைசி சேரவீரன் உயிருடனிருக்கும் வரை சோ நாடு போர் புரியும் என்று. அதுமட்டுமல்ல, பாண்டியன் பின்வாங்க அவசியம் வரும்போது அவன் படையில் கால்வாசி கூடப் பாக்கியிருக்காது என்றும் சொல்லுவோம். அதுமட்டுமல்ல, போரின் வித்து நீக்கப் பட்டபின்பும், அதாவது முத்துக்குமரியை நாம் ஒப்படைக்க ஒப்புக்கொண்ட பின்பும், அவன் போராட விரும்பினால் அவன் போர் வெறியன் என்பதைப் பரப்புவோம். பத்தினித் தெய்வத்தின் நாடான இச்சேரநாடு இன்று முத்துக் குமரியின் களவையும் சிறையிருத்தலையும் வெறுக்கிறது. அந்தச் சிறையிருப்பு இல்லையென்றால் முத்துக்குமரியை ஒப்படைக்க நாம் முற்பட்ட பின்பும் பாண்டியன் நாட்டை அழிக்க எண்ணுகிறானென்றால், இந்நாட்டு மக்கள் கொதித்து எழுவார்கள். அந்தப் பிரளய அக்னியிலிருந்து பாண்டியன் தப்ப முடியாது. மக்கள் ஆதரவுடனிருக்கும் மன்னன் சக்தி அளவிட முடியாதது. ஆகையால் பாண்டியன் போரை விரும்பினால், நாம் அவனுக்குப் போரை அளிப்போம். அவன் இதுவரை கண்டிராத போரைக் காணுவான். அவனை நாம் இந்தத் தலைநகரி லேயே சந்திப்போம்,” என்றான் பரதப்பட்டன்.

“ஏன் தலைநகரில்? வெளியே சென்று சந்தித்தா லென்ன?” என்று வினவினார் முதலமைச்சர்.

பரதபட்டன் பதில் சொன்னான்; “முதலமைச்சரே! பாண்டியனின் எரிபரந்தெடுத்தலுக்கு காரணம் அவன் பலவீனம். பெரிய படை அவனிடமில்லை . ஆகவே பயிர் பச்சைகளை எரித்து மக்களை இத்தலைநகருக்கு விரட்டி, இங்கு கும்பலை அதிகரித்து, நமது நடமாட்டத்தை நெருக்கி இங்கும் எரியம்புகளை வீசி ஊரைக் கொளுத்தப் பார்க் கிறான். அதை நாம் அனுமதிக்கப் போவதில்லை . முதலில் நமக்கு கிழக்கு மதிளுக்கு எதிரேயுள்ள காட்டுப் பகுதியின் முகப்பை அழித்துவிடப் போகிறோம்.”

இதைக் கேட்டதும் சபையினர் திக்பிரமை அடைந்தார்கள். சிலர் ஆட்சேபக் குரலும் கிளப்பினார்கள். “தவறு தவறு, பெருந்தவறு,” என்று கூவினார் ஒரு மந்திரி.

“நமது முக்கிய அரணை அழிப்பது எதிரிக்கு வரவேற் பளிப்பதாகும்” என்றார் இன்னொரு மந்திரி.

குருநாதன் தனது கண்களை அவர்கள் மீது திருப்பினான். ஆனால் பதில் சொல்லவில்லை. பதில் சொல்லத் துவங்கு முன்பு சேனாதிபதி முந்திக்கொண்டு, “காட்டை நாம் அழிக்காத காரணம்? குருநாதருக்குப் புரியவில்லை. அவர் போர்ப் பழக்கமில்லாதவரல்லவா?” என்றான்.

குருநாதர் இதழ்கள் இகழ்ச்சியால் மடிந்தன. “போர்ப் பழக்கமுள்ள உமது காரணத்தை நான் அறியலாமா?” என்று வினவினான்.

“அறியலாம். தமிழகத்தில் கோட்டைகளின் முகப்பில் காடுகளை வைத்திருப்பதற்குக் காரணம் எதிரியின் ஆயுத வண்டிகள் கோட்டையை அணுக முடியாதிருப்பதற்காக. நெருக்கமாக மரங்களிருக்கும் பகுதியில் ஆயுத வண்டிகள் நுழையவே முடியாது. ஆகவே கோட்டைகளைத் தாக்க முயலும் எதிரியின் புரவிப் படையும் காலாட்படையும் – மட்டுமே கோட்டையிடம் வரும், அவற்றைக் கோட்டை மீதுள்ள விற்கூடங்கள் சமாளிக்கும். இந்தப் பாதுகாப்பு இல்லையேல் பெரும் ஆயுதவண்டிகளைக் கொண்டுவந்து நிறுத்தி எதிரி தூரத்திலிருந்தே நம்மீது ஆயுதமழை பொழிவான்,” என்று கூறிய சேனாதிபதி மந்தகாசம் செய்தான்.

“அப்படியா!” என்ற குருநாதன் கேள்வியில் இகழ்ச்சி பெரிதும் ஒலித்தது.

“ஆம்,” என்றான் சேனாதிபதி மிடுக்குடன்.

“எதிரியிடம் ஆயுத வண்டிகள் அதிகமா?” என்று வினவினான் பட்டன்.
சேனாதிபதி சற்று நிதானித்து விட்டுச் சொன்னான்; “அதிகமில்லை . அவர்கள் படையே சிறியதுதானே?” என்று.

“அப்படி ஆயுத வண்டிகள் அதிகமில்லையென்றால் அவற்றைத் தடை செய்யக் காடுகள் எதற்கு?” என்று வினவினான் பரதபட்டன்.

. சேனாதிபதியின் பதில் பட்டென்று வந்தது. “இந்த ஒரு எதிரியை மட்டும் எதிர்பார்த்து அரண்கள் நிர்மாணிக்கப்படவில்லை,” என்றான் சேனாதிபதி.

“இப்பொழுது தலைநகரைத் தாக்க வரும் எதிரியைச் சமாளிப்போமா அல்லது இனிமேல் என்றாவது வரக்கூடிய எதிரிக்குத் திட்டம் தயாரிப்போமா?” என்று வினவினான் பரதப்பட்டன்.

இதற்குச் சேனாதிபதி உடனடியாகப் பதில் சொல் லாமல் தயங்கினான். பரதபட்டனே கூறினான்; “இன்று நகரை நோக்கி மிகத் தந்திரசாலியான எதிரி வருகிறான். அவனிடம் ஆயுத வண்டிகள் இல்லை . படையும் சிறியது தான். ஆனால் திறமையான படை. அவர்கள் போர்த் தந்திரத்தால் கோட்டாற்றுக்கரை என்ன ஆயிற்றென்று தெரியவில்லை. போர்க் கப்பல்கள் பத்து எரிந்துவிட்டன, அவன் படை தங்கு தடையின்றி நகரை நோக்கி வருகிறது. ஆகவே காட்டைக் கட்டிக் கொண்டு நாம் திண்டாடுவதில் பயனில்லை. தவிர காடு முழுமையும் அழிக்கும்படி நான் கூறவில்லை. முகப்புப் பகுதியை மட்டும் அழித்துவிட்டால் கோட்டைச் சுவருக்கும் காட்டுக்கும் இடையே திறந்த வெளி ஏற்படும். எதிரி மறைந்து நின்று எரியம்புகளை வீச முடியாத நிலையில் காடு இருக்கும். ஆகவே, எதிரிப்படை திறந்தவெளிக்கு வந்தே கோட்டை மீது எரியம்புகளையும் வேல்களையும் வீச முடியும். எதிரிப் படை திறந்த வெளிக் குள் நுழைந்தவுடனேயே நமது கோட்டைச் சுவர் யந்திரங் கள் இயங்கும். வேல்களும் அம்புகளும் எதிரிப் படையின் மீது புயலெனப் பாயும். புரவிகள் மாண்டு விழும். வீரர்கள் கோட்டையை நெருங்கு முன்பு மடிந்து விடுவார்கள். நமக்குக் கோட்டைச் சுவரின் மறைவு பாதுகாப்பு. எதிரிக்குக் காட்டு முகப்பின் மறைவு பாதுகாப்பு. அந்த மறைவை அழித்துவிட்டால் எதிரி மறைந்து நின்று போர் செய்ய முடியாது. பகிரங்கத்தில் போர் செய்ய அவனிடம் படைபலம் கிடையாது. நாம் மறைந்து நின்று போரிடலாம். நமது படை பலமும் மிக அதிகம்.”

இதைக் கேட்ட சபையினர் திக்பிரமை கொண்டனர். பரதப்பட்டனின் நுண்ணிய போர் அறிவு அவர்களைத் திகைக்க வைத்தது. மன்னன் விழிகள் மகிழ்ச்சியால் மலர்ந்தன. சேனாதிபதி வாயைப் பிளந்தான் வியப்பின் மிகுதியால்.

இவை எதையுமே கவனிக்காமல் பரதபட்டன் மேலும் சொன்னான்; “இப்படித் தலைநகரின் கிழக்குப் பகுதியில் எதிரியின் வசதியை நீக்கி விடுவோம். அவன் ஒரு வேளை கடற்புறத்தில் வர முயலலாம். அதையும் நாம் தடை செய்வோம்,” என்று.
இங்கு. இடைமறித்த கடற்படைத் தளபதி, “எதிரி யிடம் கடற்படை ஏது கடற்புறத்தில் வர?” என்று வினவினான்.

“எதிரி மலைப்புறமாக வந்திருப்பதால் அவர்கள் கடற்படை இங்கு வரவில்லையென்பதை இந்த நகரத்தில் குழந்தைகள் கூட அறியும். கடற்புறமென்று சொன்னது தலைநகரின் மேற்குப் புறத்தைச் சொன்னேன்,” என்றான் குருநாதன்.

“மேற்க்குப் புறத்தில் பாதையொன்று கடலோரம் இருக்கிறது. அந்த வழியில் வரக்கூடிய படை கோட்டாற்றுக் கரையிலுள்ள வீரபாண்டியன் படைதான். வீரபாண்டியன் படை. சரியாயிருந்தால் கொல்லம் துறைமுகத்தை அடைந்து அங்கிருந்து கடலோரமாகவே வரலாம். ஆனால் அப்படை சரணடைந்து விட்டது…” என்றான் கடற்படைத் தலைவன்.

“அது எப்படி அத்தனை திட்டமாகத் தெரியும்?” என்று வினவினான் குருநாதன்.

“சிங்கணன் ஓலை, வீரபாண்டியன் ஒப்பந்தம்…” என்று துவங்கிய கடற்படைத் தலைவனைக் கையசைத்து அடக்கி விட்ட குருநாதன், “அந்தக் கதையை நாம் கேட்டு விட்டோம். ஓலை கொண்டு வந்து ஓடிவிட்ட தூதர்கள் செய்கையும், அதை அடுத்து நமது போர்க் கப்பல்கள் எரிந்த நிகழ்ச்சியும் வீரபாண்டியன் சரணாகதியை நிரூபிக்க வில்லை. கோட்டாற்றுக்கரை பற்றி நமக்குச் சரியான தகவல் கிடைக்கும் வரை அது பிடிபடவில்லையென்று வைத்துக்கொண்டு திட்டம் வகுப்போம். பிடிபட்டிருந்தாலும் எதுவும் நஷ்டமில்லை . மேல் திசையில் நமது எச்சரிக்கை அனாவசியமாயிருக்கலாம். அனாவசிய அலட்சியத்தைவிட அனாவசிய எச்சரிக்கை, நல்லது” என்ற குருநாதன், ஆகவே நமது துறைமுகத்தை விட்டு கடற்படை நகர வேண்டாம். எல்லாப் போர்க் கப்பல்களும் வரிசையாக அரணமைத்து நிற்கட்டும். தவிர இனிமேல் பாண்டியன் எரிபரந்தெடுத்தலால் வெளியிலிருந்து வரும் கிராம மக்களையும் நகரத்தைவிட்டுத் தெற்குப்புறக் கிராமங்களுக்கு அனுப்ப வேண்டாம்” என்றும் கூறினான்.

சேனாதிபதியின் வியப்பு எல்லை கடந்தது, “என்ன, என்ன சொன்னீர்கள்?” என்று வினவினான் அவன்.

“மக்களைத் தெற்குக் கிராமங்களுக்கு அனுப்ப வேண்டாமென்று சொன்னேன்,” என்றான் பரதபட்டன் தெளிவாக.

“வேறெங்கே அனுப்புவது? நகரத்தில் கும்பலை அதிகரிப்பதா?” என்று சீறினான் சேனாதிபதி.

“நகரத்துக்குள் வந்ததும் மக்களைக் கடற்கரையோரம் அனுப்புங்கள். அப்படியே கடற்கரையோரமாக வடக்கு நோக்கிச் செல்லும் பாதைகளில் நிரப்புங்கள். சுந்தர பாண்டியன் எரிபரந்தெடுத்தலால் நகரத்தின் கிழக்கு வாசல் வழியாக மலைப்பாதை மூலம் வரும் மக்கள் கூட்டம் மேற்கு வாசலுக்குச் சென்று மறுபடியும் வடக்கு நோக்கிக் கடலோரப் பாதையில் நிரம்பும். அப்படி நிரம்பினால் கோட்டாற்றுக் கரையிலிருந்து கடற்கரை யோரம் வரக்கூடிய வீரபாண்டியன் படைக்கு மக்கள் கூட்டம் பெரும் இடைஞ்சலாயிருக்கும். படை வேகமாக வரமுடியாது. ஆகவே சுந்தர பாண்டியன் அனுப்பும் மக்கள் கூட்டத்தை அவன் தம்பிக்கு இடைஞ்சலாகத் திருப்புவது அனுகூலம்,” என்றான் குருநாதன்.

”நன்று நன்று” என்று கொண்டாடினார் முதலமைச்சர்.

மன்னனும் பாராட்டுதலுக்கறிகுறியாகத் தலையசைத் தான்.

பரதபட்டன் மேலும் சொன்னான்: “இப்படி இரு புறத்திலும் எதிரிக்கு மிகப் பாதகமான நிலையை பரதபட்டனை உபயோகப்படுத்திக் கொண்டு சமயத்தில் அவன் அதிகாரத்தைக் கத்தரித்துவிட முடிவும் கட்டினான் மன்னன். ஆனால் அந்த எண்ணத்தை யாரிடமும் வெளியிடவில்லை அவன்.

அன்று மாலை, சேனாதிபதி மன்னனைச் சயன அறையில் சந்தித்த போது மன்னன் முறுவலுடன் அவனை வரவேற்றான். சேனாதிபதியின் முகத்தில் முறுவலில்லை. முகத்திலும் சந்துஷ்டியில்லை. வேதனை நிரம்பிக் கிடந்த முகத்துடன் மன்னனுக்குத் தலைவணங்கிய சேனாதிபதி படபடப்புடன் பேசினான்: “இன்று பிற்பகலில் குருநாதர் தமது அறைக்கு என்னையும் கடற்படைத் தலைவரையும் அழைத்துப் பல உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார். முதலமைச்சருக்கும் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருக் கின்றன. சாதாரண காலத்தில் மன்னர் இடவேண்டிய % உத்தரவுகள் அவை” என்ற சேனாதிபதியை வியப்பைக் கக்கும் விழிகளுடன் பார்த்தான் வீரரவி.

ஆனால் சேனாதிபதி முகத்தில் வியப்பு ஏதுமில்லை. வெறுப்பு இருந்தது. “உத்தரவுகளும் விபரீதமாயிருக்கின்றன. கோட்டை மீது விற்பொறிகளை ஏற்றுவதோடு கடற்படை மீதும் விற்பொறிகளை ஏற்றும் பழக்கமில்லை என்று கடற் படைத் தலைவர் எதிர்த்தும் குருநாதர் கேட்கவில்லை . கடற் படையோரம் அனுப்பச் சொன்ன கிராம மக்களுக்கும் போர்க் கலங்களைக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். போர்ப் பயிற்சி இல்லாத சாதாரண மக்களிடம் ஆயுதங்கள் கொடுப்பதன் பொருள் எனக்குப் புரியவில்லை” என்று கூறிய சேனாதிபதி, “மன்னவா! இன்னொரு விஷயமும் இருக்கிறது. எல்லாவற்றையும் விட முதலமைச்சருக்கு இடப்பட்டிருக்கும் உத்தரவு மிக விபரீதம்” என்று சொல்லி, பெருமூச்சு விட்டான்.

அந்தச் சமயத்தில் உள்ளே நுழைந்த முதலமைச்சர் முகம் பார்க்கத்தகாததாயிருந்தது. முதலமைச்சர் கவிழ்ந்த தலையுடன் தனக்குக் கிடைத்த உத்தரவைத் தெரிவித்தார். “மக்கள் சாதாரணக் காலத்தில் நடமாடுவதுபோல் நடமாடவும் கலை களியாட்டங்களைத் தடையின்றி நடத்தவும் அனுமதிக்க உத்தரவிட்டிருக்கிறார் குருநாதர்” என்றார் முதலமைச்சர் ரத்தினச் சுருக்கமாக.

இப்படிச் சேனாதிபதிக்கும், முதலமைச்சருக்கும் அடுக்கிய விபரீத உத்தரவுகளைக் கேட்ட மன்னன் நீண்ட நேரம் சிந்தனையில் இறங்கினான். முடிவில், “குருநாதர் உத்தரவுகளை நிறைவேற்றுங்கள்” என்று எதிரே நின்ற இருவருக்கும் பணித்தான்.

குருநாதர் உத்தரவுகளை சேனாதிபதியும் முதலமைச் சரும் நிறைவேற்ற விரும்பவில்லையென்பதை உணர்ந்த மன்னன் மனம் ஆறுதலடைந்தது. வெகு சீக்கிரம் இந்த வெறுப்பு மக்களிடையேயும் பரவும் என்று அவன் உணர்ந்திருந்ததால் அந்த வெறுப்பைக் காரணமாகக் கொண்டு குருநாதனை அழித்து விடலாமென்று மன்னன் உள்ளூரத் தீர்மானித்துக் கொண்டான்.

அந்த இரண்டு நாட்களில் குருநாதன் யாரும் விரும்பாத உத்தரவுகளை ஒன்றன்பின் ஒன்றாகப் பிறப்பித்தான். அந்த உத்தரவுகளின் விளைவாக, பரலி மாநகர் மக்கள் பெரும் சுதந்திரத்துடன் உலாவ முற்பட்டார்கள். படைத்தலைவன் உத்தரவின் காரணமாக இரவில் முதல் ஜாமத்துடன் மூடப்பட்ட கடைவீதி பழையபடி இரவு முழுவதும் திறந்து கிடந்தது. கேளிக்கைக் கூடங்களில் சதங்கைகள் ஒலித்தன. பரலிமாநகர் போர்க் கோலமிழந்து விழாக்கோலம் கொண்டது. இதை முதலமைச்சர் பட்டனிடம் பிரஸ்தாபித்தபோது, “உண்மையில் இது விழாக் கோலந்தான். பரலி மாநகர் எதிரியிடம் ‘விழா’க் கோலம்” என்று சாதுர்யமாகப் பேசினான்.

குருநாதன் சாதுர்யத்தை முதலமைச்சர் ரசிக்க வில்லை. பெரும் குழப்பமும் அச்சமும் அவர் உள்ளத்தை ஆட்கொண்டிருந்தன. சேனாதிபதியும் குழம்பினான் நகர நிலை கண்டு. அவர்கள் மட்டுமல்ல குழம்பியது. உத்தரவுகள் பலனளிக்கத் தொடங்கிய மூன்றாவது நாளிரவில் கேளிக்கை மண்டபமொன்றில் தூணில் சாய்ந்து கொண்டிருந்த வேறொருவனும் குழம்பினான். “இது எனக்கு அடியோடு புரியவில்லை” என்ற சொற்களையும் உதிர்த்தான் பக்கத்திலிருந்த ஒரு பெண்ணிடம்.

Previous articleRaja Muthirai Part 2 Ch44 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch46 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here