Home Historical Novel Raja Muthirai Part 2 Ch67 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch67 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

73
0
Raja Muthirai Part 2 Ch67 Raja Muthirai Part 2 Sandilyan, Raja Muthirai Part 2 Online Free, Raja Muthirai Part 2PDF, Download Raja Muthirai Part 2 novel, Raja Muthirai Part 2 book, Raja Muthirai Part 2free, Raja Muthirai,Raja Muthirai Part 2 Story in tamil,Raja Muthirai Part 2 Story,Raja Muthirai Part 2 novel in tamil,Raja Muthirai Part 2 novel,Raja Muthirai Part 2 book,Raja Muthirai Part 2 book review,ராஜ முத்திரை ,ராஜ முத்திரை கதை,Raja Muthirai Part 2tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2,Raja Muthirai Part 2full story,Raja Muthirai Part 2 novel full story,Raja Muthirai Part 2audiobook,Raja Muthirai Part 2audio book,Raja Muthirai Part 2full audiobook,Raja Muthirai Part 2full audio book,
Raja Muthirai Part 2 Ch67 | Raja Muthirai | TamilNovel.in

Raja Muthirai Part 2 Ch67 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

ராஜ முத்திரை இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 67 மண்ணில் கிடந்த மாவீரன்

Raja Muthirai Part 2 Ch67 | Raja Muthirai | TamilNovel.in

வீரபாண்டியன் ஆயிரம் வீரர்கொண்ட புரவிப் படையுடன், புரவிகள் மீது படுத்தவண்ணமே புரவிகளை வெகு வேகத்தில் ஓட்டிய ஆயிரம் பேருடன், மலைச்சரிவில் இறங்கியதைப் பார்த்த உடனேயே புரிந்து கொண்டான் பரதப்பட்டன். முற்றும் எதிர்பாராத, போர் முறையைப் பாண்டிய இளவல் கையாளுகிறானென்பதை. “புரவிகளின் முதுகில் வீரர் படுத்தால், அவர்கள் மார்புக்கு வேலையோ அம்பையே குறிவைக்க முடியாது. மாண்டால் குதிரைகள் தான் மாயும். வீரர்கள் மாளமாட்டார்கள்” என்றான் பரத பட்டன் குறிஞ்சியை நோக்கி. அசுரவேகத்தில் வீரபாண்டியன் தெற்குக் கோட்டை வாசலின்மீது இறங்கியதையும் அவனைத் தொடர்ந்து உருண்டு வந்த மரத்தண்டு வண்டி தென்புற வாயிற்கதவுகளை வேகமாக இடித்துத்தகர்த்ததையும் கண்ட பரதபட்டன் அடுத்து அவன் என்ன செய்யப் போகிறானென்பதை யோசிக்கும் முன்பு பிரமிக்கத்தக்க நிகழ்ச்சிகள் நடந்தன. வீரபாண்டியனும் அவன் ஆயிரம் வீரரும் கோட்டை வாயில், திறந்ததும் புரவிகளை விட்டுக் குதித்தனர். யவனரின் நீள இரும்புக் கேடயங்களை ஏந்தித் தலையிலிருந்து கால்வரை மறைத்துக்கொண்டு வாளேந்திப் போரிட்டுக்கொண்டே விற்பொறிகளையும் வேற்பொறி களையும் அணுகியதால், விற்பொறிக் கணைகள் அந்த இரும்புக் கேடயங்கள் முன்பு பயனற்றதாயின. இரும்புக் கேடயங்கள் மீது விழுந்த அம்புகளும் வேல்களும் இரும்பின் சம்பந்தத்தால் ‘கிளாங்’ ‘கிளாங் கென்று பேரொலிகளைக் கிளப்பினவேயொழிய பெருவினையேதும் விளைவிக்க வில்லை . இந்த நேர் எதிர்ப்பை , அதுவும் புரவிப் படை காலாட்படையாகும் விந்தையை, எதிர்பாராத சேர வீரர்கள் பொறிகளைக் கைவிட்டுப் பின்னால் சற்று எட்ட இருந்த யானைப்படைக்காகப் பின்னடைந்தார்கள். வீர பாண்டியன் அந்த யானைப்படைமீது சேரன் பொறிகளைத் திருப்புமாறு உபதளபதியை ஏவினான். அடுத்த விநாடி வில்லம்புகளாலும் வேல்களாலும் தாக்கப்பட்ட யானைப் படை பல வழிகளில் திரும்பி ஓடலாயிற்று. யானைகளின் பெரிய அலறல் வானைப் பிளந்தது. அத்துடன் அம்பாரியிலிருந்து மாண்டு விழுந்த உபதலைவர்களின் வீர மரண கோஷங்களும் பெரிதாகக் கேட்டன. பொறிகளை உபதலைவன் இயக்கி அதேசமயத்தில் வீரபாண்டியன் வாளைப் பெரிதாக உயர்த்தி ஆட்டியதும் சாம்பல் நிறப். புரவி அவனை நோக்கி ஓடிவந்தது. அதன் மீது தாவி ஏறிய வீரபாண்டியன் தனது முரசுகளில் ஒன்றை ஒலிக்கச் செய்யவே பொறிகளை இயக்கிய வீரர்கள் பொறிகளைக் கைவிட்டு பின்னடைந்து பழையபடி புரவிகளில் தாவினார்கள். தரைப்படை மீண்டும் புரவிப்படையாக மாறுவதைத் தடை செய்ய யானைப்படையால் இயலாது போயிற்று. யானைகள் சிதறியோடியது பெரும் நாசத்தை சேர வீரர்களுக்கும், சொற்ப நாசத்தை பாண்டிய வீரர்களுக்கும் அளித்ததால், பாண்டிய வீரர் மீண்டும் புரவியேறுவதும் அப்படிக் கஷ்டமான அலுவலாயில்லை. புரவிப் படை மீண்டும் துரிதத்தில் அணிவகுத்துக் கொண்டதைத் தடுக்க சேரன் காலாட்படை முயன்றபோது வீரபாண்டியன் போர் அரங்கத்தை விட்டுத் தனது படையை வெகுவேகத்தில் செலுத்தித் தென்புறக் கடலோரப் பாதையை அடுத்த காட்டுக்குள் நுழைந்து விட்டான்.

பாண்டியப்படை வந்த வேகத்தில் நகரத்தின் கடலோரக் காட்டுக்குள் மறைந்து விட்டதைக் கண்டதும் அந்தக் காட்டை நோக்கிச் சேரன் தெற்கு வாசல் படையில் ஒரு பகுதியும், கிழக்கு வாசல் புரவிப்படையின் ஒரு பிரிவும் நகர்ந்தன. இன்னோர் ஆயிரம் வீரர் கொண்ட புரவிப்படை வீரபாண்டியன் படையைப் போலவே சூறாவளியென

மலைச்சரிவில் இறங்கியது. அதைச் சேரன் புரவிப்படை எதிர் கொண்டது. வந்த அந்த ஆயிரவர்கள் மலைச்சரிவில் வந்ததால் அவர்கள் வேகம் அதிகமாயிருந்தது. அவர்கள் அளித்த போரும் உக்கிரமாயிருந்தது எதிர்த்த சேரன் புரவிப்படை மீது வெகு உக்கிரத்துடன் விழுந்த அந்தப் புரவிப்படை பெரும் சேதம் விளைவித்துக் கொண்டே கிழக்குவாயிலை நோக்கி நகர்ந்தது. உப்பரிகை மேலிருந்து இதைக் கண்ட குறிஞ்சி கேட்டாள்: “குருநாதரே! இதோ இன்னோர் ஆயிரம் வீரர்கள் கிழக்கு வாயிலை நோக்கி வருகிறார்கள். முதலில் வந்த வீரபாண்டியனின் ஆயிரம் வீரர்கள் கடலோரக் காட்டுக்குள் மறைந்து விட்டார்கள். இது என்ன போர் முறை?” என்று வினவினாள்.

குருநாதன் சொன்னான்: “குறிஞ்சி! வீரபாண்டியன் எனது ஏற்பாடுகளைக் குலைத்துவிட்டான். காட்டுக்குள் அவன் ஆயிரம் வீரர்கள் சென்று இந்த அரண்மனைப் பக்கம் வருவார்கள். முத்துக்குமரியையும், இந்திர பானுவையும் கொண்டு சென்ற பாதை அது. எதிரிகள் மலைக் காட்டிலிருப்பதையே நினைத்துக் கொண்டு படைப் பிரிவுகளைக் கோட்டை மதிளை அணைத்தே நிறுத்தியிருக் கிறான் வீரரவி. முரசுகள் ஒலித்தால் உள் வளையங்கள்.

பார் கிழக்கு நோக்கி நகரும் பாண்டியன் படை முரசுகளை அழிக்கிறது” என்று மேலும் கூறினான் குருநாதன் “நான் படைகளைப் பிரித்து நிறுத்தி பாண்டியப் படைகள் உள் நுழைந்ததும் இணைந்து பல வளையங்களை சிருஷ்டிக்க முரசுகளை அமைத்தேன். இப்பொழுது எதிரி முரசுகளை அழிக்கிறான். அது மட்டுமல்ல. கடலோரப் பாதை வழியாக வீரபாண்டியன் கிழக்கு வாயிலுக்கு வருவான். அதோ கிழக்கு வாயிலை நோக்கி நகரும் படைக்கும் வீரபாண்டியன் பின் வருவதால் அவன் படைக்கும் இடையில் வீரரவியின் பிரதானப் படை சிக்கிக் கொள்ளும்…”

இந்த வாசகத்தைக் குருநாதன் முடிக்கு முன்பே பெரும் கணையொன்று தென்புறத்தில் மலைச்சரிவில் வண்டியில் உருண்டு வந்தது. உருண்ட வேகத்தில் அதிலிருந்த பேரம்பு எரிமுகத்துடன் தெற்கு வாசலைத் தள்ளி அப்புறம் சீறிச் சென்றது. திடீரென இறங்கிய கல்லிடுகூடை கோட்டைச் சுவரைத் தாண்டி தீப்பந்தமாரி பொழிந்தது. தெற்கு வாயிலுக்கப்பால் பல இடங்களில் தீப்பிடித்தது. அதைக் கண்ட பரதப்பட்டன், “நன்று நன்று” என்றான்.

“என்ன நன்று?” என்றாள் குறிஞ்சி.

“மக்களில்லாத இடத்தில் கணைகளை எறிகிறான் பாண்டியன். கணை செல்லுமிடத்தில் காடுதான் இருக்கிறது. காடுதான் தீப்படித்துக்கொள்ளும்?” என்றான் பட்டன்.

“இது எதற்கு?” என்று கேட்டாள் குறிஞ்சி.

அடுத்த அரை நாழிகையில் அதற்கு விடை கிடைத்தது. தீயைக் கண்ட சேரன் படைவீரர் அத்தீயை நோக்கி ஓடினர். பெரும் குழப்பம் அந்தப் பகுதியில் நிலவியது. அந்தக் குழப்பம் கிழக்கு வாசலையும் பிடித்துக் கொண்டது. எங்கும் மக்கள் சிதறி ஓடினார்கள். அணிவகுத்த படைக்கு முரசு அறிவிப்பு இல்லாததால் அதுவும் கலைந்தது. அதே சமயத்தில் காட்டில் சுந்தரபாண்டியன் முரசுகள் ஒலித்தன. ஒலித்துக் கொண்டே வடபுறம் சென்றன.

கிழக்கு வாயிலில் நின்று கொண்டிருந்த வீரரவி வடக்கு வாயிலுக்குப் பாதிப் படையைத் திருப்பினான். அது வடக்கு வாயிலை அடைவதற்கும் சுந்தர பாண்டியன் முரசு கொட்டாமல் காட்டு வழியே திருப்பிக் கிழக்கு வாயிலை நோக்கி இறங்குவதற்கும் நேரம் சரியாயிருந்தது. சுந்தரபாண்டியன் பயங்கர வேகத்தில் கிழக்கு வாயிலின் மீது இறங்கினான். வீரபாண்டியன் கபட முறைகளை, தந்திர வழிகளை அவன் கையாளவில்லை. தன் படையின் முகப்பில் பெரும் இரும்புக் கவசம் தலையிலிருந்து கால்வரையில் பளபளக்கக் கையில் பெரு வேலைத் தாங்கிக் கொண்டு இறங்கினான். அவனைத் தொடர்ந்து ஆயிரம் புரவிவீரரும் மன்னனைப்போலவே இரும்புக் கவசமணிந்து இருந்தனர். அப்படி இறங்கிய இரும்புச் சுவரில் சில இடங்களைச் சேரன் கோட்டைவிற் பொறிகள் உடைத்தாலும், அந்தப் படை, உடைந்த இடங்களில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒன்று கூடிப் பெரும் சுவரென இறங்கியது கிழக்கு வாயில்மீது.

பெரும் மரத்தண்டுகள் மோதின. வாயில் மீது, திறந்த வாயிலில் இறக்கப்பட்டிருந்த பொறிகளை வீரரவி இயக்க முடியவில்லை . அந்தப் பொறிகள் முதலில் கதவை நோக்கி யிருந்தாலும், தெற்கிலிருந்து வந்த வீரபாண்டியன் படைப் பிரிவை நோக்கித் திருப்பப்பட்டதால் நேரிடைப் போரே சாத்தியமாயிற்று வீரரவிக்கு

கணக்காகத் திட்டமிடப்பட்ட அந்தப் போர் முறை பெரும் பிரமிப்பளித்தது பரதபட்டனுக்கு. வீரபாண்டியன் ஒரு படைப் பிரிவுடன் இறங்கி தெற்கு வாயிலில் புகுந்து கடலோரப் பாதைக்குச் சென்றுவிட்டது, பிறகு மற்றொரு படை தெற்கு வாயிலில் நுழைந்து போரிட்டுக் கிழக்கு வாயிலை அணுகியது, அதை எதிர்கொள்ள பொறிகளைத் திருப்பிய சமயத்தில் சுந்தரபாண்டியன் உள்ளே புகுந்து நேரிடைப் போரில் இறங்கியது – இவையனைத்தையும் தொகுத்துப் பார்த்த பரதபட்டன் பிரமித்தான். “இனி போர் இன்று விளக்கு வைக்கும் நேரத்தில் முடிந்துவிடும்” என்றான் குறிஞ்சியை நோக்கி. கிழக்கு வாயில் போர் உக்கிர மாக நடந்து கொண்டிருந்தது. விளக்கு வைப்பதற்குள் வீரபாண்டியன் கிழக்கு வாயிற்படையின் பின்புறத்தில் தோன்றினான். சுந்தரபாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் இடையில், வீரரவி தலைமையில் போரிட்ட கிழக்கு வாயிற்படை சிக்கிக் கொண்டது. தெற்கிலிருந்து வந்த பாண்டியப்படை வீரரவியை விலாவில் குத்தியது.

போர் பயங்கரமாக நடந்தது. வீரரவி கையில் வாளும் வேலும் மாறி மாறி ஏந்திப் போரிட்டான். அவன் வாளுக்கும் வேலுக்கும் பாண்டிய வீரர் பலர் பலியாயினர். இருப்பினும் பாண்டியர் மிக உக்கிரமாகத் தாக்கினர். தவிர பாண்டியர்களின் பயங்கரக் கணையொன்று தெற்கில் சென்றது போல கிழக்கு வாயிலிலிருந்து சிறிது தள்ளி வடக்கில் விழுந்து தீயைக் கிளப்பியது. இந்த இடமும் வெறும் காடு என்பதைப் புரிந்து கொண்ட வீரரவி அது அங்கு எய்யப்பட்டதன் காரணத்தைப் புரிந்து கொண்டான். அந்தத் தீ கிழக்கு வாயிற்படையிலிருந்து வடக்கு வாயிற்படையைக் கத்தரித்து விட்டதென்பதைப் புரிந்து கொண்ட வீரரவி சுந்தரபாண்டியனை நோக்கித் தன் புரவியைச் செலுத்தினான்.

எங்கும் வீரகோஷங்கள், விழுந்த வீரர்களின் மரணக் கூச்சல்கள், காயமடைந்து துடித்த புரவிகளின் கனைப்பு ஓலங்கள், ஆயுதங்கள் உராயும் ஒலிகள், இவற்றால் சிருஷ்டிக்கப்பட்ட பயங்கரச் சூழ்நிலையில் பாண்டியப் படைகளின் ஊடே சுந்தரபாண்டியனை நோக்கிப் புரவியைச் செலுத்தினான் வீரரவி. அவனைக் கண்ட சுந்தரபாண்டியனும் தனது வீரர்களை விலக்கிக்கொண்டு வீரரவியை நோக்கி வந்தான். அவ்விருவரும் மோது வதற்குள் பின்னாலிருந்து வந்த வீரபாண்டியன் கூவினான், “அண்ணா ! விலகுங்கள், இது என் போர்” என்று.

சுந்தரபாண்டியன் வீரரவி இருவருமே வீரபாண்டி யனை நோக்கினர். வீர பாண்டியனைச் சுமந்து வந்த அந்தச் சாம்பல் நிறப் புரவி பல வீரர்களைக் காலால் உதைத்துக் கொண்டு அம்பு போல் பாய்ந்து வந்தது. அடுத்த சில நிமிடங்களில் வீரரவியின் வாளும் வீரபாண்டியன் வாளும் மோதி விட்டன. வீரரவி மிக வீரத்துடன் போரிட்டான். அவன் வாள் பலவிதமாகச் சுழன்று. பலமுறைதாக்கியது. தாக்கிய ஒவ்வொரு முறையும் வீரபாண்டியன் கழுத்தை நோக்கி வந்தது. ஒரு முறை கழுத்தை லேசாகக் கீறவும் செய்தது. அந்தக் கீறல் பட்டவுடன் வீரபாண்டியன் கண்கள் கழுகுக் கண்களாயின. உடல் இரும்பாயிற்று. முகம் விகாரப்பட்டது. தனது வாளை அண்ணனை நோக்கி எறிய அண்ணன் அதைப் பிடித்துக் கொண்டான். அடுத்த விநாடி அவன் இடையிலிருந்த தங்கக் கோடரி கனவேகத்தில் கையில் தெரிந்தது. “சேரமன்னா! இந்தா, இது உனக்குத் தெரியும்” என்று கூறிக் கோடரியைக் கண்ணிமைக்கும் நேரத்தில் வீசிவிட்டான் வீரபாண்டியன். அந்தக் கோடரி சேரன் மார்புக் கவசத்தையும் பிளந்து உள்ளே பாய்ந்து விட வீரரவி புரவியில் தள்ளாடினான் ஒரு விநாடி. பிறகு புரவியில் சாய்ந்தான். சுந்தரபாண்டியன் வெற்றி முரசுகளை முழங்கத் தனது வாளை உயர்த்தி ஆட்டினான். வெற்றி முரசுகள் முழங்கின. அதை உப்பரிகையிலிருந்து கேட்ட பரதபட்டன், “வா குறிஞ்சி,” என்று அவளை அழைத்துக் கொண்டு உப்பரிகையிலிருந்து இறங்கி.

பல எரிந்ததன. அந்த ஜ்வாலை தென்புறக் காட்டுத் தீயுடனும் வடபுறக் காட்டுத் தீயுடனும் சேர்ந்து பரலியே எரிவது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. அதையெல்லாம் பார்த்துத் துன்பப் பெருமூச்செறிந்து ஓடினான் பரதப்பட்டன். கிழக்கு வாயிலில் மெல்லப் போர் அடங்கிக் இடையேயிருந்த வட்டத்துக்குள், எந்த மண்ணில் பிறந்தானோ, எந்த மண்ணை ஆண்டதால் பரலீசன் எனப் பெயர் பெற்றானோ, அதே மண்ணில் மார்பில் காயமுற்று விழுந்து கிடந்தான் வீரரவி உதயமார்த்தாண்டவர்மன்.

Previous articleRaja Muthirai Part 2 Ch66 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Muthirai Part 2 Ch68 | Raja Muthirai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here