Home Historical Novel Raja Perigai Part 3 Ch19 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch19 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

43
0
Raja Perigai Part 3 Ch19 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free, Raja Perigai,Raja Perigai story in tamil,Raja Perigai story,Raja Perigai novel in tamil,Raja Perigai novel,Raja Perigai book,Raja Perigai book review,ராஜ பேரிகை,ராஜ பேரிகை கதை,Raja Perigai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai full story,Raja Perigai novel full story,Raja Perigai audiobook,Raja Perigai audio book,Raja Perigai full audiobook,Raja Perigai full audio book,
Raja Perigai Part 3 Ch19 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch19 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

மூன்றாம் பாகம் அத்தியாயம் – 19 .வரதராஜ விவாதம்

Raja Perigai Part 3 Ch19 | Raja Perigai | TamilNovel.in

எந்த வேளையிலும், எந்த நிகழ்ச்சியிலும் புருவத்தைக் கூட அசைக்காமல் உணர்ச்சியற்ற பொம்மையாக உட்கார்ந் திருக்கும் தன்மை வாய்ந்த கவர்னர் தாமஸ் ஸாண்டர்ஸ்கூட அன்று தமது உற்சாகத்தை வெளிப்படையாகவே காட்டினார். வாயிலிருந்து கீழே நீளமாக இறங்கிய புகைக் குழாயைக்கூட இருமுறை வெளியில் இழுத்து, ”தட் கிளைவ் இஸ் எ ஸ்கௌண்ட்ரல்” என்று இரைந்து கூறி மேஜையையும் ஒருமுறை அநாவசியமாகக் கையினால் குத்தினார். அன்று மார்ச் பதினொன்றாம் தேதி. ஆண்டு 1752.

அது இரவு நேரம். மணி ஏழுக்குமேல் ஓடி விட்டாலும், இருமுறை பட்லர் தலையை நீட்டி உணவு தயாராயிருப்பதை அறிவித்தும் ‘இருக்கட்டும்’ என்று கையசைப்பாலேயே தெரிவித்தார் தாமஸ் ஸாண்டர்ஸ். எதிரே தமது ஆர்ப்பாட்டத் திற்கு எந்தவிதப் பதிலையும் சொல்லாமல் இடித்த புளிமாதிரி உட்கார்ந்திருந்த நடுத்தர வயதுடைய மனிதரை நோக்கி, ”யூ ஆர் ஷ்யூர், யூ ஆர் ஸ்பீகிங் த ட்ரூத்? (நீங்கள் சொல்வது நிச்சயமாக உண்மைதானா?)” என்று வினவவும் செய்தார்.

வாயைத் திறந்தால் முத்து உதிர்ந்துவிடுமோ என்று பயந்த அந்த நடுத்தர வயது மனிதரான ராபர்ட் ஆர்ம் தமது மீசையற்ற உதடுகளை ஒருமுறை தடவி விட்டுக் கொண்டார். அந்த இரண்டு இடங்களிலும் நான் இருந்திருக்கிறேன்…. தமிழில் சொன்னார் ஆங்கிலத்தை வெறுப்பவர் போல.

”போத் த ப்ளேஸஸ்? இரண்டு இடங்களிலும்?” என்று கவர்னர் தமக்கும் தமிழ் தெரியும் என்பதைத் காட்டினார்.

”எஸ் இன் போத்தப்ளேஸஸ். அங்கு இருந்திருக்கிறேன். பார்த்தும் இருக்கிறேன்” என்றார் ராபர்ட் ஆர்ம்.

”அப்படியானால் பிரெஞ்சுப் படாலியன் கிளைவின் மிரட்டலுக்குப் பயந்து இரண்டு பிரிட்டிஷ் வீரர்களையும் விடுதலை செய்து விட்டார்கள்?” என்று தாமஸ் வினவினார் வியப்புடன்.

”எஸ்.’ ராபர்ட் ஆர்ம் ஒற்றைச் சொல்லோடு நிறுத்திக் கொண்டார்.

”தே கேவ் த ஜுவல் மாக்ரா காண்டி?” என்று கேட்டார் கவர்னர்.

”எஸ்” என்றார் ஒற்றைச் சொல் ஆர்ம். ஆனால் இம்முறை சிறிது விரிவாகவும் பேச முற்பட்டு, ‘யுவர் எக்ஸலென்ஸி! ஹாஸ் நாட் லேர்ண்ட் டமில் ப்ராபர்லி” (யுவர் எக்ஸலென்ஸி! தாங்கள் தமிழைச் சரியாகக் கற்கவில்லை)” என்று குற்றம் சாட்டினார்.

கவர்னர் கையிலிருந்த புகைக் குழாயை இருமுறை மேஜை மீது தட்டினார். ‘நான் தமிளை இங்கிலாந்திலேயே வணிகர்களிடம் படித்தேன்-ஐ மீன் ப்ரம் அவர் மர்ச்சண்டஸ்” என்றார்.
”இருந்தாலும் உங்கள் தமிழ் சரியல்ல. இட் இஸ் டிஃப்க்டிவ்” என்ற ஆர்ம் நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து கொண்டார்.

கிளைவின் நெருங்கிய நண்பரும் பிரிட்டிஷ் ராணுவ நடவடிக்கைகளைப்பற்றிப் பல குறிப்புக்களை அப்போதே எழுதிவைத்திருந்தவரும், பிற்காலத்தில் அவற்றைப்பற்றிப் பெரும் ராணுவ நூலை எழுதியவரும், தமது கௌன்ஸில் மெம்பருமான ராபர்ட் ஆர்மைக் கூர்ந்து நோக்கினார் கவர்னர் சில விநாடிகள். பிறகு மேஜைக்குக் குறுக்கே படுத்து, “மிஸ்டர் ஆர்ம்! வாட் இஸ் ராங் வித் மை டமில்?” என்று ரகசியமாக வினவினார்.

ஆர்ம் சாய்ந்த நிலையிலிருந்து நெட்டுக் குத்தாக உட்கார்ந் தார். ”இட் இஸ் நாட் மாக்ரா காண்டி, பட் மகர கண்டி” என்று திருத்தினார் கவர்னரை.

கவர்னர் புதிதாக ராபர்ட் ஆர்மிடம் பாடம் சொல்லிக் கொண்ட தைப் போல் ”மகரகண்டி, ம…க…….க…ண்….” என்று இருமுறை சொற்களைக் கூட்டியும் பிரித்தும் சொன்னார்.

‘தட்ஸ் ரைட்” என்று ஆமோதித்தார் ராபர்ட் ஆர்ம்.

”த பிரெஞ்ச் ரிடர்ண்ட் த ஜுவல் டு கிளைவ்?” என்று கேட்டார் கவர்னர்.

”ஆம்.”

”கிளைவுக்கு அந்த ஜுவலில் என்ன அவ்வளவு ஆசை? தட் மச்காஸ்ட்லி ? (விலை அதிகமா?)”

”ஆம்.”

‘’கிளைவ் அதைத் தானே வைத்துக் கொள்ளப் போகிறான்?”

”நோ.”

“தென்.”

”வரதராஜா வில் ஹாவிட்.”

“ஹூ இஸ் திஸ் வார்தாராஜா?”

”அகைன் யுவர் டமில் இஸ் டிபக்டிவ். இட் இஸ் நாட் வார்தாராஜா, பட் வரத ராஜா.’’

கவர்னர் பொறுமை இழந்து, ”ஹூ இஸ் ஹி? எ நேடிவ்?” என்ற வினவினார்.

”நேடிவ் காட்… ஹி கேவ் விக்டரி டு கிளைவ் (சுதேசி தெய்வம். கிளைவுக்கு வெற்றியை அதுதான் சம்பாதித்துக் கொடுத்தது)” என்ற ராபர்ட் ஆர்ம், கிளைவ் எதுவும் செய்யாதது போல் புன்முறுவல் காட்டினார்.

கவர்னர் ஸாண்டர்ஸ் நம்பிக்கையில்லா வதனத்தைக் காட்டினார். ”திஸ் காட் கேவ் கிளைவ் விக்டரி அட் ஆற்காட் அண்ட் ஆர்ணி?” என்று வினவவும் செய்தார்.

“எஸ்.”

”அட்காவேரிபாக்?”

”தேர்டு.”

”வென் ராஜாசாகிப் வெண்ட்டு ரீடேக் ஆற்காட்? (ராஜா சாகிப் இரண்டாம் முறை ஆற்காட்டைப் பிடிக்கச் சென்று முறியடிக்கப்பட்ட போது கூடவா?)”

”எஸ்” என்று ராபர்ட் ஆர்ம் ‘எஸ்’ தமக்குத்தான் உரிமை போலப் பேசினார்.

கவர்னர் ஆசனைத்தை விட்டு எழுந்திருந்தார். ”ஆற்காட், ஆரணி, காவிரிபாக் எல்லாம் பெரும் வெற்றிகள். நம்பத் தகாதவை. எல்லாவற்றையும் இந்தச் சிறுவன் ராபர்ட் கிளைவ் சாதித்திருக்கிறான். இரண்டாம் முறை ராஜர்சாகிப் ஆற்காட்டைப் பிடிக்கப் பெரும் பிரெஞ்சுப் படையுடன் சென்ற போது அந்தப் படையை நிர்மூலப்படுத்தியிருக்கிறான். அவனுடன் சேர்ந்த சிறுவர்கள் லெப்டினண்ட் கீன், என்ஸைன் ஸிமண்ட்ஸ் இவர்களையும் பெரு வீரர்களாக அடித்திருக்கிறான். இத்தனைக்கும் காரணம்….” என்று கவர்னர் வார்த்தையை முடிக்குமுன்பு ராபர்ட் ஆர்ம் இடைபுகுந்து, ‘காட்… வரதராஜா” என்றார்.
கவர்னர் ஸாண்டர்ஸ் எரிச்சலை காட்டினார். ‘’வாட் டூ யூ மீன்பை வரதராஜா?” என்று வினவினார்.

”மீன்ஸ் பூன் கிவர் (வரம் கொடுப்பவன் என்று பொருள்)” என்ற விளக்கினார் ராபர்ட் ஆர்ம்.
கவர்னர் மீண்டும் சென்று ஆசனத்தில் அமர்ந்தார். ”கிளைவ் பிலீவ்ஸ் இட்?” என்று வினவினார்.

“எஸ்.”

‘தட்த ஹிண்டு காட் கேவ் ஹிம் ஆல் த விக்டரி?”

“எஸ்.”

கவர்னர் நாற்காலியில் சாய்ந்து கொண்டார். ”தென் ஹி இஸ் எ ஹீதன். ஐ வில் டெல் த பிஷப் ஹியர் (அப்படியானால் கிளைவ் பொய் மதவாதி. இங்குள்ள பாதிரியாரிடம் சொல் கிறேன்)” என்றார்.

ராபர்ட் ஆர்ம் மெல்ல நகைத்தார். ”யுவர் எக்ஸலென்ஸி! கிளைவ் யாருக்கும் பயப்படாதவன்” என்றார்.

“அவன் சர்க்சுக்குள் வராமல் அடிப்பேன்” என்றார் கவர்னர்.

“நீங்கள் சர்ச்சுக்கு ஒழுங்காகப் போவதில்லையே” என்று சுட்டிக் காட்டினார் ஆர்ம்.
கவர்னர் பதிலுக்கு, ‘ஹூம்… ஹும்” என்று கனைத்துக் கொண்டார். பிறகு சங்கடத்துடன் நாற்காலியில் அசைந்து, ‘ஐ ஹாவ் வெரி லிட்டில் டைம் அட் மை டிஸ்போஸ் (எனக்கு அவகாசம் எங்கே இருக்கிறது?)” என்றார் கவர்னர்.

“இத்தனை போராட்டங்களை நடத்திய கிளைவுக்கு அவகாசம் நிரம்ப இருக்கிறதா?” என்று கேட்டார் ராபர்ட் ஆர்ம்.

கவர்னர் சிறிது சிந்தித்தார். பிறகு எதையோ புதிதாகக் கண்டுபிடித்து விட்டவர் போல், ”பட் ஐ டோண்ட் ஒர்ஷிப் எ ஃபால்ஸ் காட் (ஆனால் நான் பொய்யான கடவுளைத் துதிப்பதில்லை )” என்றார்.

ஆர்ம் மெல்ல நகைத்தார். ‘ஹௌ மெனி காட்ஸ் ஆர் தேர்? (எத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள்?)” என்று வினவினார்.

”வாட் டூயூ மீன்?”

”யூ டாக்ட் ஆப் எ ஃபால்ஸ் காட் தென் தேர் மஸ்ட் பீ எ ட்ரூ காட், பட் கிரிஸ்டியானிவிடி ஸேஸ் தேர் இஸ் ஒன்லி ஒன் காட். (நீங்கள் பொய்க் கடவுளைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். அப்படியானால் நிஜக் கடவுள் ஒருவர் இருக்கவேண்டும். ஆனால் கிறிஸ்தவ மதம் ஒரே கடவுள் இருப்பதாகத்தானே சொல்கிறது?)”

கவர்னர் ஸாண்டர்ஸ் விழித்தார். அந்தச் சமயத்தில் வாயிற்படியிலிருந்து ஒரு குரல் வந்தது. ”வாட் ஈஸ் திஸ் டிஸ்கஷன் அடௌட் காட்ஸ்? (இங்கே கடவுள்களைப் பற்றி விவாதம் நடக்கிறதே அது என்ன?)” என்று.

வாயிற்படியில் கிளைவ் பூரண ராணுவ உடையில் நின்றிருந்தான். “யூ ராஸ்கல்! யூ கம் ஹியர்!” என்று அழைத்தார் கவர்னர்.

கவர்னர் அப்படிப் பேசியதை அதுவரை காணாத கிளைவ் பிரமித்தான். ஆனால் அதைவிடப் பிரமிக்கும்படியான வேலையைக் கவர்னர் செய்தார் அடுத்த விநாடி. தமது ஆசனத்தை விட்டுச் செரேலென எழுந்திருந்து மேஜையைச் சற்றி வேகமாக வந்து கிளைவைக் கட்டியணைத்தார். பிறகு காதில் கிசுகிசுவென்று, ”ஐ டூ லைக் வர்தராஜா. கிவ் ஹிம் மக்ரா காண்டி (எனக்கும் வரதராஜனைப் பிடித்திருக்கிறது, மகர கண்டியை அவனுக்கே கொடுத்துவிடு)” என்றார்.

‘இதை நான் ஆட்சேபிக்கிறேன்” என்ற கூறிக் கொண்டு ராபர்ட் ஆர்ம் நாற்காலியிலிருந்து எழுந்திருந்தார்.

”எதற்கு ஆட்சேபிக்கிறீர்?”

”கௌன்ஸில் மெம்பர் நான் இருக்கம் போது யாரிடமும் கவர்னர் ரகசியம் பேசக்கூடாது. திஸ் இஸ் இன்ஸல்ட் டு மி” என்ற ஆர்ம் கவர்னரைக் கிளைவிடமிருந்து விலக்கி, தானும் கிளைவின் காதில் சொன்னார் மிக ரகசியமாக, “ஐ லைக் வரதராஜா, கிவ் மகர கண்டி” என்று.

கிளைவ் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். அப்போதுதான் கவர்னர், ‘’ஆர்டர்லி! ஆர்டர்லி” என்று அறையே அதிரும்படியாகக் கூவினார்.

Previous articleRaja Perigai Part 3 Ch18 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 3 Ch20 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here