Home Historical Novel Raja Perigai Part 3 Ch20 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch20 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

39
0
Raja Perigai Part 3 Ch20 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free, Raja Perigai,Raja Perigai story in tamil,Raja Perigai story,Raja Perigai novel in tamil,Raja Perigai novel,Raja Perigai book,Raja Perigai book review,ராஜ பேரிகை,ராஜ பேரிகை கதை,Raja Perigai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai full story,Raja Perigai novel full story,Raja Perigai audiobook,Raja Perigai audio book,Raja Perigai full audiobook,Raja Perigai full audio book,
Raja Perigai Part 3 Ch20 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch20 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

மூன்றாம் பாகம் அத்தியாயம் – 20 .கவர்னர் இட்ட கட்டளை

Raja Perigai Part 3 Ch20 | Raja Perigai | TamilNovel.in

கவர்னர் தாமஸ் ஸாண்டர்ஸின் கூச்சலைக் கேட்டதும் ஓடோடி வந்து உள்ளே தலையை நீட்டிய ஆர்டர்லியைப் பார்த்ததும் கிளைவை நோக்கித் திரும்பிய ஸாண்டர்ஸ், ”காப்டன் கிளைவ்! வாட் வில் யூ ஹாவ்? விஸ்கி ஆர் பிராண்டி?” என்று வினவினார் பரம உற்சாகத்துடன்.

இதற்குக் கிளைவ் பதில் சொல்லு முன்பாகவே ராபர்ட் ஆர்ம் இடைபுகுந்து, ”அஃப்கோர்ஸ் ஹீ வில் ஹாவ் விஸ்கி, எ டபிள்ஷாட் ஆப் இட்” என்று சிபாரிசு செய்தார்.

”ஆல் ரைட் தென் கெட் விஸ்கி” என்று ஆர்டர்லிக்கு உத்தரவிட்ட கவர்னர், மீண்டும் நாற்காலியில் அமர்ந்து… ”ஹும்” என்று ஹூங்காரம் செய்தார்.

ராபர்ட் ஆர்மும் உட்கார்ந்து கொண்டு, ”ஹீரோ! ஸிட் டௌன்” என்று கிளைவை நோக்கிக் கூறினார்.

கிளைவின் புத்தி என்றுமில்லாதபடி பெரும் குழப்பத்தில் இருந்தது. ”வாட் இஸ் ஆல் திஸ்?” என்று வினவினான் எதுவும் புரியாமல்.

”ஆர் இண்ட் யூ எஹீரோ?” என்று ஆர்ம் கேட்டார்.

”டிட் யூ நாட் காங்கர் ஆற்காட், ஆர்ணி அண்ட் காவேரி பாக்” என்று கவர்னர் கேட்டார்.
கிளைவ் அப்பொழுதுதான் ஆடு திருடிய கள்ளன்போல் விழித்தான். அவன் செய்த ஒரு பெருங்குற்றம் அவ்விருவருக்கும் தெரியாதென்ற காரணத்தால். அவன் ஏதோ பேச முற்படு வதற்குள் விஸ்கி வந்து பட்லர் அதை மூன்று கிளாஸ்களில் ஊற்றிவிடவே, கவர்னரும் ஆர்மும் ஆளுக்கொருடம்ளரைக் கையில் எடுத்துக்கொண்டனர். ”ஹீரோ! யூ டேக் யுவர் க்ளாஸ்… வீ ஆர் கோயிங் டு ஸெலிபரேட் யுவர் விக்டரீஸ். (கதாநாயகனே! உன் க்ளாஸைக் கையிலெடுத்துக் கொள். உன் வெற்றிகளை இப்போது கொண்டாடப் போகிறோம்)” என்றார்கவர்னர்.

கிளைவ்க்ளாஸைத் தொடவில்லை. “இந்த வெற்றிகளின் ஊடே நான் ஒரு குற்றமும் செய்திருக்கிறேன்” என்றான் கிளைவ் மெதுவாக.

அவன் முகத்திலிருந்த வருத்தத்தைவிட அவன் நல்ல தமிழைப் பேசியதைக் கேட்ட கவர்னர், ”ஸீ! ஹி இஸ் ஸபீகிங் இன்டமில்” என்றார் ஆர்மை நோக்கி.

”ஹீலவ்ஸ் டமில் அண்ட் தடமில்ஸ் (அவனுக்குத் தமிழ் பிடிக்கும், தமிழரும் பிடித்தவர்கள்)” என்றார் ஆர்ம்.

”தட் இஸ் ஹொய் தே ஃபாலோ ஹிம் இன் வார் (அதனால் தான் போரில் தமிழர்கள் இவனைப் பின்பற்று கிறார்கள்)” என்று கவர்னர் குறிப்பிட்டார்.

கிளைவ் அவர்கள் சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளவுமில்லை, மேஜை மீதிருந்த விஸ்கி டம்ளரைக் கையில் எடுத்துக் கொள்ளவுமில்லை. ”யுவர் எக்ஸலென்ஸி மஸ்ட் ஹியர் மி (யுவர் எக்ஸலென்ஸி! நான் சொல்வதைக் கேளுங்கள்)” என்றான் கிளைவ் சற்று உறுதியான குரலில்.

”வாட் இஸ் இட்?” என்று கேட்டார் கவர்னர் பொறுமை யைச் சிறிது கைவிட்டு.

“நான் இங்கு வரும்போது, தட் இஸ் ஆன் மை வே ஹியர்…” என்றான் கிளைவ்.

”எஸ்!” என்றார் கவர்னர்.

“நாஸிர் ஜங் கொல்லப்பட்ட இடத்தில் டூப்ளே தனது வெற்றியைக் குறிக்க * டூப்ளே பாதேபாத் என்று ஒரு ஊரை அமைத்திருந்தார்” என்று கூறினான் கிளைவ் தயக்கத்துடன்.

”நாஸிர் ஜங், அவர் அலை, வாஸ் மர்டர்ட் (நமது நண்பர் நாஸிர் ஜங் கொல்லப்பட்டார்)’ என்ற சுட்டிக் காட்டினார் ஆர்ம், அது சரியான வெற்றி அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட.

கிளைவ் இருவரையும் சில விநாடிகள் உற்றுப் பார்த் தான். ”வரும் வழியில் அந்த ஊரை, டூப்ளேயின் நினைவுச் சின்னத்தை அடியோடு அழித்துவிட்டேன்” என்று தயங்கித் தயங்கிச் சொன்னான்.

ஆர்மும் கவர்னரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர் சில விநாடிகள். ‘உம்! அது குற்றம்தான். ஊரை அழிப்பது தவறு” என்ற கவர்னர், ‘காப்டன் கிளைவ், டேக் யுவர் க்ளாஸ் ” என்று உத்தரவிட்டார் கடுமையுடன்.
கிளைவ் க்ளாஸைக் கையிலெடுத்துக் கொண்டான். மூவரும் க்ளாஸை முட்டினார்கள். பிறகு செங்குத்தாக நின்றார்கள். மேலிருந்த பவர்லைட்டின் வெளிச்சம் விஸ்கியைப் பளபளக்க அடித்திருந்தது. கவர்னர் விஸ்கி டம்ளரை உயர்த் தூக்கி, ”பார்தி விக்டரி ஆப் பிரிட்டன் (பிரிட்டன் வெற்றிக்காக)” என்று கூறினார். அதிகாரமும் அமைதியும் கலந்த குரலில் மற்ற இருவரும் அதைத் திருப்பிச் சொன்னதும் மூவரும் விஸ்கியைப் பருகினர். இரண்டாம் முறையும் ஆர்டர்லி விஸ்கியை ஊற்றினார். மூவரும் விஸ்கி டம்ளரைக் காலி செய்தனர். “நௌ ஸிட் டௌன் போத் ஆப் யூ” என்ற கவர்னர் தாமும் ஆசனைத்தில் அமர்ந்தார். சிறிது நேரம் அந்த அறையில் மௌனம் நிலவியது. ‘காப்டன்! டூ யு நோ தட் யூ ஹாவ் கமிட்டட் எ க்ரைம் அகைன்ஸ்ட் ஸிவிலியன்ஸ் பை பினிஷ்ஷிங் ஆப் த டௌன்ஷிப் (அந்த ஊரை அழித்ததால் ராணுவத்தில் சம்பந்தப்படாத சாதாரண பிரஜைகளுக்கு நீ குற்றமிழைத்திருக்கிறாய், புரிகிறதா?)” என்று கேட்டார், கவர்னர் உத்தியோக பாணியில்.

இதற்குக் கிளைவ் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. சில விநாடிகளுக்குப் பிறகு சொன்னான். ”பிரஜைகளுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்கவில்லை. அவர்களை வெளியேற்றிய பிறகு வீடுகளைத்தான் இடித்தேன்” என்று.

”ஹும்… நாட் பாட் நாட் பாட்’ என்ற கவர்னர், ”ஸ்டில் இட் ஈஸ் எக்ரைம் (இருப்பினும் அது குற்றம்)” என்றார்.

அதுவரை சும்மா இருந்த ராபர்ட் ஆர்ம் தலையிட்டு, ”இட் இஸ் நாட் எக்ரைம் டு டிமாலிஷ் எனிமி பில்டிங்ஸ் (எதிரி கட்டிய வீடுகளை அழிப்பது குற்றமல்ல)” என்றார்.
கவர்னர் ஸாண்டர்ஸ் ராபர்ட் ஆர்மைக் கொலைப் பார்வையாகப் பார்த்தார். ”ஹூ இஸ் கவர்னர் ஹியர்? யூ ஆர்மி? (இங்கு யார் கவர்னர்? நீயா நானா?)” என்று வினவினார்.

”யூ ஆர் கவர்னர், ஆல் ரைட், பட் ஐ ஆம் யுவர் கௌன் ஸிலர். ஐ கிவ் அட்வைஸ் (நீங்கள் கவர்னர்தான். ஆனால் நான் கவுன்ஸில் மெம்பர். நான்தான் யோசனை சொல்ல வேண்டியவன்)” என்றார் ராபர்ட் ஆர்ம்.

கவர்னரின் பார்வையில் முரட்டுத்தனம் அதிகமாகியது. ”ஐ டோண்ட் வாண்ட் யுவர் அட்வைஸ். து ஹாவ் டிசைடட் (உங்கள் யோசனை தேவையில்லை. நான் முடிவு செய்து விட்டேன்)” என்ற கவர்னரின் பேச்சிலும் முரட்டுத்தனம் இருந்தது.

அடுத்துப் பேச முற்பட்ட ஆர்மைக் கையை உயர்த்தி அடக்கிய கவர்னர், ”காப்டன்! ஸ்டாண்ட் அப்” என்று உத்தர விட்டார்.

கிளைவ் காரணம் புரியாமல் எழுந்து நின்றான். கவர்னர் அவனை நீண்ட நேரம் நோக்கினார். பிறகு ஆர்டர்லியை நோக்கி மீதியிருக்கிற விஸ்கியை டம்ளர்களில் ஊற்றச் சொல்லி, அவனை வெளியே போகும்படி உத்தரவிட்டார். பிறகு விஸ்கியை அருந்தச் சொல்லி மற்ற இருவருக்கும் கையைக் காட்டினார். விஸ்கி காலியானதும் டம்ளரை மேஜைமீது டொக்கென்று வைத்த கவர்னர், ”காப்டன் கிளைவ்! யூ ஸ்டாண்ட் பிஃபோர் திஸ் கவுன்ஸில்…” என்று ஆரம்பித்ததும் ஆர்ம் இடைமறித்து, ”தேர் இஸ் நோகவுன்ஸல் ஹியர் (இங்கு கவுன்ஸல் எதுவும் இல்லை)” என்று சுட்டிக் காட்டினார்.

”யூ ஆர் எ மெம்பர் ஆப் த கவர்னர்ஸ் கவுன்ஸில். ஐ ஆம் கவர்னர். ஸோ தி கௌன்ஸில் இஸ் இன் ஸெஷன். (நீங்கள் கவுன்ஸிலர், நான் கவர்னர். ஆகவே கௌன்ஸில் சட்டபூர்வமாக நடைபெறுகிறது)” என்று திட்டமாக அறிவித்த கவர்னர், ”காப்டன் கிளைவ், யூ ஸ்டாண்ட் பிஃபோர் தி கௌன்ஸில் ஃபார் தி மிலிடரி க்ரைம் ஆப் டிமாலிஷிங் ஸிவிலியன் பிராபர்ட்டி (காப்டன் கிளைவ்! சாதாரண பிரஜைகளின் சொத்தை அழித்த குற்றத்திற்காக இந்தச் சபை முன்பு நிற்கிறாய்)” என்று கூறினார் கவர்னர், நீதிபதி போல.

”ஐ அப்ஜெக்ட் (நான் இதை எதிர்க்கிறேன்)” என்றார் ராபர்ட் ஆர்ம்.

‘’அப்ஜக்ஷன் ஓவர் ரூல்ட் (எதிர்ப்பு தள்ளுபடி செய்யப் பட்டது)” என்ற கவர்னர் மேலும், ”அதுமட்டுமல்ல, நீ கிறிஸ்தவனாகப் பிறந்திருந்தும் ஹிண்டு கடவுளைப் பிரார்த்தனை செய்தாய்” என்று சொல்லி முடிப்பதற்குள் ஆர்ம் தலையிட்டு, ”திஸ் கன்ஸர்ன்ஸ் தி சர்ச். நாட் யூ (இது சர்ச் விவகாரம். உங்களுக்கு இதில் குற்றம் சாட்ட உரிமையில்லை)” என்றார்.

ஆர்மைக் கூர்ந்து நோக்கினார் கவர்னர். “உங்கள் அபிப் பிராயத்தை நான் கேட்கவில்லை, கீப் கொயட்” என்று உறுமினார். பிறகு கிளைவை நோக்கிக் கேட்டார். ”காப்டன், வாட் ஹாவ் யூ டு ஸே? (காப்டன், உங்கள் சமாதானம் என்ன?)” என்று .

கிளைவ் கவர்னரை நோக்கினான் சலனமற்ற பார்வையுடன். “ஐ ஆம் நாட் கில்டி (நான் குற்றவாளியல்ல)”

”வில் யூ எக்ஸ்ப ளெய்ன்? (விளக்க முடியுமா?)” என்று வினவினார் கவர்னர்.

கிளைவ் தனது கூரிய விழிகளைக் கவர்னர் இரும்புப் பார்வையுடன் கலக்க விட்டான். ”எஸ்” என்று சொல்லி விட்டு, ”பிரிட்டன் கர்நாடகத்தில் பிரான்ஸை முறியடித்த பிறகு நான் ஒரு பிரிட்டிஷ் பிரஜை என்ற முறையில் எதிரியின் வெற்றிச் சின்னத்தைப் பார்த்ததும் பொறுக்க முடியவில்லை. ஆகையால் அழித்தேன். ஆனால் சாதாரணப் பிரஜைகளுக்குத் தீங்கு விளைவிக்கவில்லை. இரண்டாவதாக ஐ லைக் வரதராஜா. பிகாஸ் ஹி கேவ் விக்டரி டு பிரிட்டன்” என்றான் திட்டமாக.

கவர்னர் எழுந்திருந்தார் ஆசனத்தை விட்டு. ”காப்டன் கிளைவ்! ஐ டோண்ட் அக்ஸெப்ட் யுவர் எக்ஸ்ப்ள னேஷன். ஐ பைண்ட் யூ கில்டி (காப்டன் கிளைவ். உன் சமாதானத்தை நான் ஒப்பவில்லை. உன்னைக் குற்றவாளியெனத் தீர்மானித்து விட்டேன்)” என்றார்.

அந்தச் சமயத்தில் ராபர்ட் ஆர்மும் எழுந்திருந்தார். கவர்னர் அவரைக் கவனிக்காமல் கிளைவை நோக்கி, ‘கிளைவ் யூ ஆர் கில்டி, ஸோ ஐ டோண்ட் கிவ் யூ எனி ரெஸ்ட். யூ வொர்ஷிப் ஹிண்டு காட்ஸ். ஸோ ஐ ஆர்டர் யூ டு வொர்ஷிப் மோர் ஹிண்டு காட்ஸ். இன் அபௌட் எ வீக் யூ வில் ஹெட் ஆன் ஆர்மி டு ட்ரிச்சி அண்ட் அட்டாக் சந்தாசாகிப் அண்ட் த பிரெஞ்ச். நியர் ட்ரிச்சி யூ ஹாவ் எ கிரேட் ஹிண்டு காட் ராங்காநாட் பை நேம். யூ கான் வொர்ஷிப் ஹிம் (கிளைவ்! நீ குற்றவாளியென முடிவு செய்துவிட்டேன். ஆகையால் உனக்கு ஓய்வு கொடுப்பதற்கில்லை. ஹிந்து கடவுள்களை வணங்கு. இன்னும் ஒரு வாரத்தில் பெரும்படையுடன் திருச்சி மீது படை யெடுத்துச் சென்று சந்தாசாகிபையும் பிரெஞ்சு சைன்னியத்தையும் தாக்கு. திருச்சிக்கு அருகில் ஒரு பெரிய இந்துக் கடவுள் ராங்கநாடா இருக்கிறார். அவரையும் வணங்கலாம்)” என்றார் கவர்னர்.

இந்தத் தண்டனையைக் கேட்ட கிளைவ், ஆர்ம் இருவருமே பிரமித்தனர். பெரும் சந்தர்ப்பம் தனக்கு அளிக்கப் படுவதைக் கிளைவ் உணர்ந்தான். ஆர்ம் வியப்பின் வசப்பட்டு நின்றார் சில விநாடிகள். பிறகு சொன்னார், ”யுவர் எக்ஸலன்ஸி! யுவர் டமில் இஸ் டிபெக்டிவ். இட் இஸ் நாட் ராங்க நாடா. இட் இஸ் ரங்கநாதா” என்று கூறிப் புன்முறுவல் செய்தார்.

கவர்னர் மேஜையைச் சுற்றிவந்து, “டாம் மை டமில்” என்று கூறிக் கிளைவின் கழுத்தில் ஒரு கையையும் ஆர்மின் கழுத்தில் ஒரு கையையும் போட்டு இருவரையும் கட்டி இழுத்துக் கொண்டு, ”காட் ஸேவ் அவர் கிங்” என்று பாடிக் கொண்டு படிகளில் இறங்கிச் சென்றார். கீழே அணிவகுப்பு நடக்கும் கிரவுண்டுக்கு வந்ததும் அங்கே கூடியிருந்த சோல்ஜர்களையும் சிப்பாய்களையும் நோக்கி, ”நௌ டேக் யுவர் ஹீரோ” என்று அவர்களிடம் கிளைவைப் பிடித்துத் தள்ளினார்.

சோல்ஜர்களும் சிப்பாய்களும் கிளைவ் மீது பாய்ந்து அவனைத் தலைக்குமேல் தூக்கிக்கொண்டு கூத்தாடினார்கள். பெரும் கூச்சல் அந்தச் சமவெளியைக் கவர்ந்து கொண்டது. கிளைவ் திமிறினான். முடியவில்லை. அவனைக் கிரௌண்டைச் சுற்றிச் சுற்றித் தூக்கிச் சென்றனர் சோல்ஜர்கள். பெரும் மகிழ்ச்சியான சமயம் அது. பெரிய கடமை தனக்குக் கிடைத்த வேளை அது. சோல்ஜர்களும் சிப்பாய்களும் அவனைத் தலைவனாக ஏற்றுக்கொண்ட நேரம் அது. இருப்பினும் கிளைவின் மனத்தில் அதிக சந்துஷ்டியில்லை. உள்ளூற ஒரு சிறு சந்தேகம் உறுத்திக் கொண்டிருந்தது அவனை.

Previous articleRaja Perigai Part 3 Ch19 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 3 Ch21 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here