Home Historical Novel Raja Perigai Part 3 Ch23 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch23 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

39
0
Raja Perigai Part 3 Ch23 Raja Perigai Sandilyan, Raja Perigai Online Free, Raja Perigai PDF, Download Raja Perigai novel, Raja Perigai book, Raja Perigai free, Raja Perigai,Raja Perigai story in tamil,Raja Perigai story,Raja Perigai novel in tamil,Raja Perigai novel,Raja Perigai book,Raja Perigai book review,ராஜ பேரிகை,ராஜ பேரிகை கதை,Raja Perigai tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai ,Raja Perigai full story,Raja Perigai novel full story,Raja Perigai audiobook,Raja Perigai audio book,Raja Perigai full audiobook,Raja Perigai full audio book,
Raja Perigai Part 3 Ch23 | Raja Perigai | TamilNovel.in

Raja Perigai Part 3 Ch23 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

ராஜ பேரிகை – சாண்டில்யன்

மூன்றாம் பாகம் அத்தியாயம் – 23 .மேஜர் லாரன்ஸ்

Raja Perigai Part 3 Ch23 | Raja Perigai | TamilNovel.in

படகிலிருந்து தொப்பையும் தொந்தியுமாக, இடையில் கட்டிய வாளும் செருகிய கைத்துப்பாக்கியுமாகத் தரையில் குதித்த மனிதரைக் கண்டதும் கவர்னர் ஸாண்டர்ஸ் மிக்க குதூகலமடைந்து அவரை வரவேற்றாலும், ராபர்ட் ஆர்மோ, கிளைவோ அவர் வரவால் திக்பிரமையடைந்தே நின்றார்கள். ”தம்பி, உன் பழைய தோழனை உனக்கு அடையாளம் புரிய வில்லையா?” என்று அவர் கிளைவை நோக்கிக் கூறிய பிறகுகூட முதலில் ஏற்பட்ட வியப்பும் பிரமையும் நீங்காததால் கிளைவ் பதிலேதும் சொல்லாமல் வாய் பிளந்து நின்றான்.

ஆனால் தேவிக்கோட்டையை வெற்றி கண்டவரும் பல போர்களில் சேவை செய்து பக்குவப்பட்டிருந்தவருமான மேஜர் ஸ்டிரின்ஜர் லாரன்ஸ், கிளைவ் இருந்த இடத்தை இரண்டு எட்டில் கடந்து அவன் கையை இறுகப் பிடித்து எலும்புகள் நொறுங்கும்படியாகக் குலுக்கிய பிறகுதான், “மேஜர்! தங்கள் வரவைவிட எனக்குத் தற்சமயம் மகிழ்ச்சி தரக்கூடியது வேறொன்றும் இல்லை. ஆனால் கவர்னர் தங்கள் வரவை மிக ரகசியமாக வைத்திருந்தார்’ என்று தன் திகைப்புக்குக் காரணம் சொன்னான் கிளைவ்.

”உண்மை. கவர்னர் இப்பொழுது ரகசியப் பொக்கிஷமாகி விட்டார். நல்ல செய்தியை மறைக்கிறார்” என்றார் ராபர்ட் ஆர்மும்.

அவருடன் கை குலுக்கிய மேஜர் லாரன்ஸ், ”யுவர் எக்ஸெ லென்ஸி, இனி நாம் தங்கள் மாளிகைக்குப் போகலாம்” என அறிவிக்கவே, கவர்னரும் மற்ற மூவரும் மாளிகைக்குச் செல்லும் பாதையில் நடந்து சென்றார்கள்.

மாளிகையை அடையும் வரையில் ஏதும் பேசாமல் பழையபடி பேசாமடந்தையாகிவிட்ட கவர்னர், அவர்கள் மூவரையும் நேராகத் தமது ஆலோசனை அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு நால்வரும் அமர்ந்ததும் மேஜை ட்ராயரிலிருந்து கர்நாடகத் தேசப்படத்தை எடுத்து மேஜைமீது விரித்தார், மேலே தொங்கிக் கொண்டிருந்த பவர் லைட் அதன் மீது படும்படியாக அதைச் சிறிது நேரம் கூர்ந்து நோக்கிவிட்டு மேஜர் லாரன்ஸை நோக்கி அதை நகர்த்தினார்.

லாரன்ஸ் அதைப் பார்க்ககூட இஷ்டப்படாமல் கவர்னரைக் கூர்ந்து நோக்கி, “இதை என்னிடம் ஏன் காட்டுகிறீர்கள்?” என்று விசாரித்தார்.

கவர்னர் பதில் சொல்லாமல் தமது புகைக் குழாயில் புகை யிலையை அடைத்து, குழாயை வாயில் செருகிக்கொண்டு தீப்பெட்டி கிழித்து, புகையிலையை மிக நிதானமாகப் பற்ற வைத்து இருமுறை புகையை வெளியே விட்டார்.

மேஜர் ஸ்டிரின்ஜர் லாரன்ஸ் மீண்டும் வினவினார், “ஹொய் ஷூட் ஐ ஸீ திஸ்? (இதை நான் ஏன் பார்க்க வேண்டும்?)” என்று, எதிரே இருந்த தேசப் படத்தைச் சுட்டிக் காட்டி.

கவர்னர் ஸாண்டர்ஸ் பவர் லைட்டில் ஏதோ விசேஷம் இருப்பது போல் அதையே பார்த்தார். “பிகாஸ் யூ ஆர் த கமாண்டர் இன் சீஃப் ஆஃப் மை ட்ரூப்ஸ் (நீங்கள் என் படை களுக்குச் சேனாதிபதியாயிருக்கிற காரணத்தினால்)” என்று சொன்னார் கவர்னர், பவர்லைட்டைப் பார்த்த வண்ணம்:

இதைக் கேட்ட மேஜர் லாரன்ஸ் வியப்படைந்தாலும் ராபர்ட் ஆர்மும் காப்டன் கிளைவும் சிறிது சினத்தின் வசப்பட்டு, ”யுவர் எக்ஸலென்ஸி!” என்றார்கள் உள்ளிருந்த எரிச்சல் குரலிலும் ஒலிக்க.

கவர்னர் மிக்க கம்பீரமாகவும் நெட்டுக்குத்தாகவும் உட்கார்ந்து இரு கைகளையம் மேஜைமீது வைத்துக்கொண்டு, ”எஸ் ஜென்டில்மென்?” என்று வினா எழுப்பும் முறையில் அந்த இரண்டு சொற்களைச் சொன்னார்.

”உங்களுக்கு மேஜர் லாரன்ஸ் வரப்போவது முன்பே தெரியும்” என்று சுதேசி மொழியில் குற்றம் சாட்டும் பாணியில் இறங்கினார் ஆர்ம்.

”ஷ்யூர். ஹொய் நாட்? (நிச்சயமாகத் தெரியும். தெரியாம லென்ன?)” என்று வினவினார் கவர்னர்.

”எங்களிடம் மறைத்திருக்கிறீர்கள்” என்றான் கிளைவ்.

”ஆம்” என்றார் கவர்னர்.

”ஏன் எங்களுக்குச் சொல்லவில்லை?” என்ற கிளைவ் வினவினான்.

”நோ நீட், நோ நீட் (அவசியமில்லை, அவசியமில்லை)” என்றார் கவர்னர்.
அதற்கு மேல் ராபர்ட் ஆர்மோ, கிளைவோ பேசா விட்டாலும் மேஜர் லாரன்ஸ் சொன்னார். ”காப்டன் கிளைவ் ஈஸ் மை ப்ரண்ட்” என்று.

”தட்ஸ் ரைட்” என்றார் கவர்னர்.

”அப்படியானால் அவரிடமிருந்து மறைப்பானேன்?” என்று வினவினார் லாரன்ஸ்.

”இது மிக ரகசியம். பிரிட்டனிலிருந்து ரகசியமாக வந்த தகவல். கம்பெனியார் உங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விட்டார்கள் என்றும், சம்பளத்தை அதிகப்படுத்தி விட்டார்கள் என்றும் பல மாதங்களுக்கு முன்பு தகவல் வந்தது. விஷயத்தை ரகசியமாக வைக்கும்படி கம்பெனி டைரக்டர்களிடமிருந்து உத்தரவும் வந்தது. வென்த டைரக்டர்கள் இது ரகசியம் என்றால், அதை என் மனத்தில் வைத்துப் பூட்டி விடுகிறேன்” என்ற கவர்னர், ”அண்ட் தென்…..” என்று ஆரம்பித்தார்.

”எஸ் யுவர் எக்ஸலென்ஸி” என்று தூபம் போட்டார் லாரன்ஸ்.

”யுவர் கிளைவ், அவர் ஹீரோ….” என்று துவங்கினார் கவர்னர்.

மேஜர் லாரன்ஸின் கண்கள் பளிச்சிட்டின. ‘ஹீரோ?” என்று வினவினார் ஏதும் புரியாமல்.

”எஸ்’ என்ற கவர்னர். ”ஹி காப்சர்ட் ஆற்காட் ஜஸ்ட் லைக் கிட் (ஆற்காட்டை இப்படிப் பிடித்தார்)” என்று கையைச் சொடுக்கியும் காட்டினார்.

அதற்குப் பிறகு லாரன்ஸ் காப்டன் கிளைவை நோக்கித் திரும்பி அவன் தோளைப் பிடித்தார். ‘ஈஸ் தட் ட்ரூ?” என்று வினவினார்.

அதற்குப் ஆர்ம் பதில் சொன்னார், “எஸ் அண்ட் ஹி இஸ் எஹீரோ” என்று.

மேஜர் லாரன்ஸ் கிளைவின் தோளைப் பிடித்து நெறித்தார். ”மை பாய்! மை பாய்! ஐ ஆல்வேஸ் ந்யூ யூ ஆர் ஏ டெவில் (தம்பி! தம்பி! நீ பெரும் பிசாசு என்பது எனக்கு முன்பே தெரியும்)” என்றார் குலூகலத்துடன்.

கவர்னர் ஸாண்டர்ஸ் புகையை ஒருமுறை நன்றாக இழுத்து விட்டு, ”தட்ஸ் ரைட் தட்ஸ் ஹொய் தி எனிமி ரான் எவே ப்ரம் ஆற்காட் (அதுதான் உண்மை . அதனால்தான் எதிரி ஓடிவிட்டான் ஆற்காட்டை விட்டு)” என்று கூறினார்.

மேஜர் லாரன்ஸுக்கு ஏதும் புரியாததால் விழித்தார். ராபர்ட் ஆர்ம் மேஜருக்கு ஆற்காட்டுப் போர் விஷயங்களை எடுத்துச் சுருக்கமாகச் சொல்லவே, லாரன்ஸ் குதூகலத்தால் தமது பெரும் கையால் மேஜையைத் தட்டி, ”மைகாட்ட வாட் எ ஸ்டோரி! மை பாய் எ டெவில்! (அட கடவுளே! என்ன கதை! என் தம்பி ஒரு பிசாசு)” என்று கத்தி, இடிபோல் சிரித்துக் கிளைவின் முதுகைத் தட்டினார் பலமாக. பிறகு திடீரன்று சிரிப்பை நிறுத்தி, ”மை பாய்! யூ ஆர் நாட் அன் ஹாப்பி பிகாஸ் ஐ ஹாவ் கம்டு கமாண்ட் (தம்பி, நான் படைத் தலைமை ஏற்க வந்ததால் உனக்கு வருத்தமில்லையே)’ என்று வினவினார்.

”இல்லை, நீங்கள் வந்தது ஒரு பெரிய சங்கடத்திலிருந்து என்னைத் தப்ப வைத்தது” என்றான் கிளைவ்.

”என்ன அது?” என்று கேட்டார் லாரன்ஸ்.

”நீங்கள் வராவிட்டால் நான் காப்டன் ஜின்ஜின்ஸிடம் வேலை செய்யும்படியாக இருந்திருக்கும்” என்று கிளைவ் சொன்னான்.

“ஏன்?”

”அவன் சீனியர்.’

‘ “சீனியர்?”

”எஸ்…”

”யூ ஆர் டு ஸர்வ் அண்டர் த இடியட்? (அந்த மக்கின் கீழ் நீ சேவை செய்ய வேண்டுமா?)” என்று இரைந்தார் லாரன்ஸ் சமயா சமயம் தெரியாமல்.

”எஸ்’ என்ற ராபர்ட், ”ஹிஸ் எக்ஸ்லென்ஸி ரெஸ்பெக்ட்ஸ் சீனியாரிட்டி (ஆம், நமது கவர்னர் சீனியாரிட்டியை மதிக்கிறார்)” என்று இகழ்ச்சியாகக் கூறினார்.
ஸ்ட்ரின்ஜர் லாரன்ஸ் கவர்னரை வேடிக்கையாகப் பார்த்தார். “சீனியரிடம் சோல்ஜர்கள் செத்தால் நல்லதா?” என்று வினவினார் தமிழில்.

”எஸ், தட்ஸ் ஹொய் ஐ வெய்டட் டில் யூ கேம் (அதற்காகத்தான் நீங்கள் வரும்வரை காத்திருந்தேன், என்ற கவர்னர், ”நௌ தே கான் டை அண்டர் யுவர் கமாண்ட் (இனி அவர்கள் உங்கள் தலைமையில் சாகலாம்)” என்றும் கூறிக் கையை அகல விரித்தார்.

கிளைவை நோக்கி, ‘காப்டன் ஹௌ மெனி மென் ஹாவ் யூ காட்? (உன்னிடம் எத்தனை பேர் இருக்கிறார்கள்?)” என்று லாரன்ஸ் வினவினார்.

கிளைவ் சிறிதும் சிந்திக்காமலே சொன்னான், ”400 ஐரோப்பிய சோல்ஜர்கள், 1100 சிப்பாய்கள்” என்று ”அண்ட் ஐ ஹாவ் எய்ட் கன்ஸ். (எட்டு பீரங்கிகளும் இருக்கின்றன)” என்றும் தொடர்ந்து சொன்னான்.

”தட்ஸ் குட்” என்ற லாரன்ஸ், “வென் டூ வி ஸ்டார்ட் யுவர் எக்ஸலென்ஸி?” என்று கேட்டார்.

“யூ ஆர் த கமாண்டர் இன் சீப் (நீங்கள்தான் படைத் தலைவர்)” என்று குறிப்பிட்டார் கவர்னர்.

அதைக் கேட்ட மேஜர் கிளைவை நோக்கி, ”காப்டன் கெட் த மென் ரெடி, வீ ஆர் மூவிங் ஃபிபோர் டான் (காப்டன், படை வீரர்களைத் தயாராக இருக்கச் சொல். நாளை விடியுமுன்பு புறப்படுகிறோம்)” என்றார்.
“தே ஆர் ரெடி” என்றான் கிளைவ்.

அப்போதுதான் கவர்னர் தமது மனத்தைச் சிறிது திறந்து காட்டினார். ”மேஜர் இப் யூ ஹாவ் நாட் அரைவ்ட் டு டே, காப்டன் கிளைவ் வுட் ஹாவ் ஸ்டார்டெட் பார் ட்ரிச்சி ஆஸ் த கமாண்டர் இன் சீப் ஆப் த பிரிட்டிஷ் போர்ஸஸ் ஹியர் (மேஜர், நீங்கள் இன்று வரத் தவறியிருந்தால் நாளைக் காலையில் காப்டன் கிளைவ் இங்குள்ள பிரிட்டிஷ் படைகளின் தலைவனாகத் திருச்சிக்குப் பறப்பட்டிருப்பான்)” என்றார்.

நன்றி ததும்பும் மூன்று ஜோடிக் கண்கள் கவர்னரை நோக்கின. காப்டன் கிளைவ் தனது தலையை நன்றாகக் குனிந்து கவர்னரை வணங்கினான். கவர்னரின் இதழ்களில் புன்முறுவல் ததும்பியது. ‘நௌ யூ ஸீ ஆர்ம். ஐ ஸ்டில் ரெஸ்பெக்ட் சீனி யாரிட்டி! ஐ ஹாவ் நாட் மேட் காப்டன் கிளைவ் கமாண்டர் ஆப்டர் த அரைவல் ஆப் த மேஜர் (இப்பொழுது தெரிகிறதா ஆர்ம்! இன்னும் சீனியாரிட்டியை நான் மதிக்கிறேன். மேஜர் வந்த பிறகு நான் காப்டன் கிளைவைப் படைத் தலைவனாக்க வில்லை )” என்றார்.

கவர்னர் எழுந்து நின்றார் ஆசனத்திலிருந்து. ”மேஜர், யூ ஆர் ஸ்டார்ட்டிங் ஆன் எவைடல் மிஷன் ஆன் விச்டிபெண்ட்ஸ் த பிரிட்டிஷ் பிரஸ்டீஜ் ஹியர் (மேஜர்! நீங்கள் பிரிட்டிஷ் மதிப்பை இந்த நாட்டில் நிலை நிறுத்தும் ஒரு முக்கிய அலுவலை நோக்கிச் செல்கிறீர்கள்)” என்று கூறி, ”காட் பீ வித் யூ. (ஆண்டவன் உங்களுக்குத் துணையிருக்கட்டும்)” என்று சொல்லித் தமது கண்களைக் கூரையை நோக்கி உயர்த்தினார்.
அதே நேரத்தில் தஞ்சை அரண்மனையில் விஜயகுமாரனும் கண்களை உயர்த்தினான், கூரையிலிருந்த வண்ணச் சித்திரங்களை நோக்கி, எதிரே பைங்கிளியென நின்றிருந்த நந்தினியின் மலர்க் கைகள் அவன் கைகளில் சிறைப்பட்டுக் கிடந்தன.

Previous articleRaja Perigai Part 3 Ch22 | Raja Perigai Sandilyan | TamilNovel.in
Next articleRaja Perigai Part 3 Ch24 | Raja Perigai Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here