Home Kadal Pura Read Kadal Pura Part 3 Ch2 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch2 | Sandilyan | TamilNovel.in

100
0
Read Kadal Pura Part 3 Ch2 Kadal Pura Sandilyan, Read Kadal Pura Online Free, Kadal Pura PDF, Download Kadal Pura novel, kadal pura book, read kadal pura free
Read Kadal Pura Part 3 Ch2 | Sandilyan | TamilNovel.in

Read Kadal Pura Part 3 Ch2 | Sandilyan | TamilNovel.in

கடல் புறா – சாண்டில்யன்

மூன்றாம் பாகம், அத்தியாயம் 2 : எரி அம்புகள்.

Read Kadal Pura Part 3 Ch2 | Sandilyan | TamilNovel.in

கடல் மோகினியை நாடிச் செல்வதிலிருந்த பேராபத் தைக் கலவரத்துடன் பலவர்மன் எடுத்துரைக்க முயன்ற நெயத்திலேயே திடீரெனத் தென்மேற்குப் பருவக் காற்று ஊ ஊ என்ற சத்தத்துடன் ஊழிக்காற்றாக மாறிவிட்டதையும் அந்தக் காற்றின் பயங்கர ஒலியையும் கிழித்துக் கொண்டு எச்சரிக்கைக் கூச்சலொன்று நடுப் பாய்மரத்தின் உச்சியிலிருந்து எழுந்ததையும் கவனித்த இளையபல்லவன், கையிலிருந்த திசை காட்டும் கருவிப் பேழையைக் கண்டியத் தேவனிடம் கொடுத்து அதை மீண்டும் தனது அறைக்கு எடுத்துச் செல்லுமாறு உத்தரவிட்டுப் பக்கத்திலிருந்த பலவர்மனைப் பற்றிச் சிறிதும் சட்டை செய்யாமல் தனது மேலங்கியைக் கழற்றித் தளத்தில் எறிந்துவிட்டுக் காலிலிருந்து இடுப்புவரை மறைத்திருந்த சீனத்துச் சராயுடன் நடுப் பாய்மரத்தின்மீது தாவி மிகுந்த வேகத்துடன் அதில் ஏறிச்சென்றான்.

தன்னிடம் பேசிக்கொண்டிருந்த இளையபல்லவன் பாய்மாத்தின் உச்சியிலிருந்த மாலுமி போட்ட கூச்சலைக் கெட்டதும் தன்னைச் சிறிதும் சட்டை செய்யாமலும் மிகுந்த அநாகரிக முறையில் விலையுயர்ந்த மேலங்கியைக் கழற்றி எறிந்துவிட்டுப் பாய்மரத்தின்மீது தாவி விட்டதைக் கண்டதும் வெனமும் வெறுப்பும் கொண்ட பலவர்மன், இளையபல்லவன் மரத்திலேறிய லாகவத்தைக் கண்டதும் அந்தச் சினத்தையும் வெறுப்பையும் உதறிவிட்டு வாயைப் பிளந்துகொண்டு வியப்பின் வசப்பட்டு அண்ணாந்து பார்த்துக்கொண்டு நிறான்.

மரத்தின்மீது தாவியதும், அதன் தண்டில் இரு காளையும் வைத்து, கைகளை மேலும் கீழும் மாற்றிக் கொடுத்துத் தொத்தித் தொத்திச் சென்ற இளையபல்லவன் இலயே இருந்த இரண்டொரு தட்டுக்களில் கூடக் காலை வைத்துத் தன்னைத் திடப்படுத்திக் கொள்ளாமல் பக்கத்திலிருந்த பாய் கயிற்றைப் பிடித்துத் தாவிச் சுழன்று மேலே போய்விட்டதையும், சுமார் நாலைந்து விநாடிகளுக்குள்ளேயே அவன் உச்சியினருகில் மரத்தண்டில் வளைத்து நிர்மாணிக்கப் பட்டிருந்த பலகையில் கால்களை வைத்து ஏறி நின்று விட்டதையும் பார்த்த பலவர்மன், ‘பூர்வ ஜன்மத்தில் இவன் குரங்காய் இருந்திருக்க வேண்டும்’ என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான். என்றும் காணாத அந்தக் காட்சியால் பலவர்மன் பிரமித்து நின்றானே யொழிய அவனுக்கு முன்னும் பின்னும் பல அலுவல்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்த மாலுமிகள் அதைப் பொருட்படுத்திப் பார்க்காமல் தங்கள் வேலையைக் கவனித்துப் போய்க்கொண்டிருந்தார்கள்.

காற்று வரவரப் படு மோசமாகிவிட்டதால் அதுவரை காற்றைச் சமாளித்த பெரும் எடையுள்ள கடல்புறா கூட லேசாக முன்னும் பின்னுமாகச் சாயத் தொடங்கியதால் பலவர்மன் நின்ற இடத்திலேயே திடமாக நிற்கமுடியாமல் தடுமாறித் தடுமாறிப் பின்னடைந்து அந்தப் பெரும் மரக்கலத்தின் பக்கப் பலகையை அணுகியதன்றி அதன்மீது சாய்ந்தும் கொண்டான். சாய்ந்த அந்த இடமும் அவனை நிம்மதியாயிருக்க விடவில்லை.

பக்கவாட்டிலும் சாயத் தொடங்கிய கடல் புறாவைத் தாக்கிய பேரலைகளில் ஒன்று திடீரென நீரை வாரிக்கொட்டியதால் தலையிலிருந்து கால் வரை அபிஷேகம் செய்யப்பட்ட பலவர்மன் இஷ்ட விரோத மாக மேலங்கியைக் கழற்றிப் பிழிந்து தன் தலையைத் துவட்டிக்கொண்டான். நல்ல காற்று அடிக்கும் போது உபத்திரவம் ஏதுமில்லாத சமயத்தில் அக்ஷயமுனைக் கடற் கொள்ளைக்காரருடன் நாலைந்து முறை சிறிது தூரத்துக்கு மட்டும் உல்லாசப் பிரயாணம் செய்திருந்த பலவர்மன் ஊழிக் காற்றும் பனைமர உயரத்துக்கு எழுந்த பேரலைகளும் சேர்ந்து கடல் புறாவை ஆட்டியதைக் கண்டதும் கடல் பயணத்தின் பயங்கரத்தின் ஒரு பகுதியைப் புரிந்துகொண்டான்.

அக்ஷயமுனைக் கோட்டையின் பாதுகாப்பிலிருந்து கொண்டு மகத்தைத் தவிர வேறெதையும் அறியாதவனும் சூளூக்களையும் பதக்குகளையும் தன் வஞ்சகத்தால் இயக்கிக் காலத்தை பட்டியவனுமான பலவர்மன் கடலின் கோரத்தைக் கண்டு பெரிதும் கலங்கினான். அந்தக் கலக்கம் விளைவித்த பயத்தால் இருண்ட அவன் மனம் போலவே வானமும் கறுக்கத் தொடங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் எங்கிருந்தோ வந்த மேகங்கள் வானிலிருந்த நக்ஷத்திரக் கோலங்களைத் திடீரென மறைத்தன. பிறைமதியும் மேகத் திரையில் மறைந்துவிட்டது.

மையிருள் எங்கும் சூழ்ந்துவிட்டதாலும் கடலலைகளின் பேரிரைச்சலாலும் ஊழிக்காற்று வளைந்து வளைந்து அடித்து கடல் புறாவைப் பேயாட்டம் ஆட்டியதாலும் நிற்கவும் சக்தி பற்றுத் திகிலில் ஆழ்ந்துவிட்ட பலவர்மன் நடுப் பாய்மரத்தின் உச்சியிலிருந்து எழுந்த இளையபல்லவன் உத்தரவைக் கேட்டதும் பிரமித்தான். “யாரங்கே! தேவரே! பந்தங்களை அணைத்துவிடுங்கள். எனது அறையிலும் அடித்தளத்திலு முள்ள விளக்குகளைத் தவிர வேறெந்த விளக்கோ பந்தமோ எரிய வேண்டாம்” என்ற உத்தரவு கடலின் கோரச் சத்தத்தையும் மீறி, கணீரென்று கடல் புறாவின் தளத்தில் ஒலித்தது. கண்டியத்தேவன் திசைகாட்டும் கருவியை வைத்துவிட்டுத் தளத்துக்குத் திரும்பு முன்பே அந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டாலும் மற்ற மாலுமிகள் வெகுதுரிதமாக அதை நிறை வேற்ற நாலா பக்கங்களிலும் ஓடினார்கள்.

சில விநாடிகளுக்குள் தளத்தின் ஓரத்திலும் நடுவிலும் வளையங்களிலும் பாய்மரத் தண்டுகளிலும் செருகப்பட்டிருந்த பந்தங்களும் விளக்குகளும் அணைக்கப்பட்டதன் விளைவாக அந்தத் தளத்தை இருள் பரிபூரணமாகச் சூழ்ந்து கொண்டதால் யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் திணறிய பலவர்மன் இளையபல்லவன் அறையை நோக்கி நடக்க முற்பட்டான்.

சுமார் பத்தடிக்கு மேல் பலவர்மனால் காலை எடுத்து வைக்க முடியவில்லை. அவனுக்கு அக்கம் பக்கத்தில் மாலுமிகள் நடமாட்டமிருந்தது மட்டும் நடை ஒலியால் அவனுக்குத் தெரிந்தது. சில மாலுமிகள் அவனைத் தாண்டிச் செல்ல அருகில் வந்தபோது நகைத்துக்கொண்டே சென்ற தாலும், அந்த இருட்டிலும் கப்பலின் பேயாட்டத்திலும் அவர்கள் சர்வ சகஜமாக நடந்து சென்றதாலும் அவர்கள் பூர்வ ஜென்மத்தில் பிசாசுகளாய் இருந்திருக்க வேண்டு மென்று தனக்குள்ளேயே சபித்துக்கொண்டான் பலவர்மன். அப்படிச் சாபம் கொடுத்தும் அத்தகைய பிசாசுகளுடன் வரநேர்ந்த தன் விதியைப்பற்றி நொந்து கொண்டுமிருந்த பலவர்மன் அவர்கள் ஏன் மரக்கல விளக்குகளையும் பந்தங்களையும் அணைத்து விட்டார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியாமல் தவித்தான்.

தவித்ததோடு நிற்காமல் தன்னருகே சென்ற இரண்டொரு மாலுமிகளைத் தடுத்து அதற்குக் காரணமும் கேட்டான். மாலுமிகள் யாரும் அவனுக்குப் பதில் கூடச் சொல்லாமல் தங்கள் பணிகளை நிறைவேற்ற விரைந்து கொண்டிருந்தார்கள். ஆனால் கோபமுற்ற பலவர்மன் மாலுமியொருவனைக் கையைப் பிடித்து நிறுத்தி “கேட்பதற்குப் பதில் சொல்,” என்று அதட்டவும் செய்தான்.

அப்படி மாலுமியின் கையைப் பிடிக்க நேர்ந்ததாலும், வேகமாகச் சென்ற மாலுமியின் கையைத் தனது இடக்கையால் பிடித்த சமயத்தில் வலக்கை பக்கப் பலகையிலிருந்து நீங்கிவிட்டதாலும் கப்பலின் ஆட்டத்தில் ஆடி விழ இருந்த பலவர்மனைப் பிடித்துக்கொண்ட மாலுமி, “கோட்டைத் தலைவரே! இது அக்ஷயமுனைக் கடற்கரை அல்ல. நடனமாட இது இடமும் அல்ல. சீக்கிரம் தலைவர் அறைக்குச் சென்று விடுங்கள்!” என்று கூறி நகைத்து விட்டுச் சென்றான்.

சாதாரணமாக உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் திறன்வாய்ந்த பலவர்மன் இதயத்தில் கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது. அக்ஷயமுனைக் கோட்டையில் இருக்கையில் தன்னை அணுகவும் முடியாத சர்வசாதாரண மனிதர் களெல்லாம் கடலின் நடுவில் தத்தளித்த அந்த மரக்கலத்தில் தன்னை ஏளனம் செய்வதை எண்ணி மனதிற்குள் பெரிதும் பொருமினான்.

அவன் அப்படிப் பொருமிக் கொண்டு நிற்கையில் அவ்வழி வந்த கண்டியத்தேவனும் பலவர்மனை நோக்கி, “பலவர்மரே! கடலின் கொந்தளிப்பும் பருவக் காற்றின் வேகமும் அதிகமாய் இருக்கிறது. அறைக்குச் சென்றுவிடுங்கள். உங்களால் நடக்க முடியாவிட்டால் மாலுமியொருவனை அனுப்பிப் பிடித்து அழைத்துச் செல்லச் செய்கிறேன்” என்று ஆதரவுடன் கூறினான்.

“அவசியமில்லை. என்னாலேயே நடக்கமுடியும்,” என்று வீம்புக்குக் கூறிய பலவர்மன் மேலும் இரண்டடி எடுத்ததும் திடீரெனப் பின்னால் வீசியெறியப்பட்டு நடுப்பாய்மரத் தண்டின்மீது சென்று விழுந்தான். ஒரு விநாடி சென்றிருந்தால் அவன் தலை பாய்மரத் தண்டில் மோதி பலவர்மனுக்குக் கபாலமோட்சம் கிடைத்திருக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக, பாய்மரத் தண்டில் இறங்கி வந்த இளையபல்லவன் புறங் கால்களால் அவன் தலையைத் தடுக்கவே பலவர்மன் பின்பக்கமிருந்து முன்பக்கம் விழ ஓடினான்.

முன்னால் இருந்த கண்டியத்தேவன் அவனைப் பலமாகப் பிடித்து நிறுத்தினான். அதற்குள் பாய்மரத்திலிருந்து தளத்தில் குதித்த இளையபல்லவன், “பலவர்மரே! காற்று எழுந்ததும் நீங்கள் அறைக்குச் சென்றிருக்கவேண்டும். ஏன் இத்தனை நேரம் இங்கு தங்கிவிட்டீர்கள்?” என்று வினவினான்.

குழந்தையைப் பிடிப்பதுபோல் தன்னைப் பிடித்துக் கொண்டிருந்த கண்டியத்தேவனிடமிருந்து திமிறித் தன்னை விடுவித்துக்கொள்ள முயன்ற பலவர்மனை நோக்கிய இளையபல்லவன், “பலவர்மரே! பருவக் காற்று நாழிக்கு நாழி மும்முரமாகிறது. இந்த நிலையில் உங்களால் இந்தத் தளத்தில் நடக்க முடியாது” என்று கூறிவிட்டு, “தேவரே! கோட்டைத் தலைவரைக் கொண்டுபோய் என் அறையில் விட்டு வாரும்”என்றான். “முடியாது! நான் இங்குதானிருப்பேன். இங்கு நடப்பது என்னவென்பது எனக்குத் தெரியவேண்டும்,” என்று பிடிவாதம் பிடித்தான் பலவர்மன்.

இளையபல்லவன் கப்பல் பேயாட்டமாடியும் கால்களைப் பரப்பித் திடமாக நின்றுகொண்டு சொன்னான், “நீங்கள் இருப்பது எங்கள் வேலைக்கு இடைஞ்சல்,” என்று.

“என்ன வேலை செய்யப் போகிறீர்கள்?” என்று வினவினான் பலவர்மன், கண்டியத்தேவன் உறுதியான பிடியில் நின்ற வண்ணம்.
“பலவர்மரே! இந்த வேலையின் விவகாரங்களை நீங்கள் அறிய மாட்டீர்கள். இங்கு விஷம் வைத்து எதிரிகளைக் கொல்ல முடியாது. இங்கு நடக்க வேண்டியது வீரர்கள் போர். நிதானமாக உட்காருவதற்குத் திடமான தரையல்ல இது. வாழ்வைப்போல நிலையற்ற அலைகளில் நாமிருக்கிறோம். பாருங்கள் சுற்றிலும்” என்றான் இளையபல்லவன்.

சுற்றிலும் கண்களை ஓட்டினான் பலவர்மன். கடலின் பெரும் கொந்தளிப்பால் பேரலைகள் எழும்பி, சரேல் சரேல் என்று கடல்புறாவின் இறக்கைகளை அறைந்து கொண்டிருந்தன. அப்படி அறையப்பட்டதால் ஆடிய கடல்புறாவின் பக்கப் பகுதிகளிலிருந்து தளத்தில் வாரியடித்த நீர்த்துளிகள், ஆங்காங்கு துரிதமாகச் சென்று கொண்டும், உருளைகளைச் சுழலவிட்டும், கயிறுகளை இழுத்தும், சங்கிலிகளைச் சரசரவென அகற்றிக்கொண்டும் ஏதேதோ அலுவல்களைப் புரிந்து கொண்டிருந்த மாலுமிகள் மீது வாரியடித்தன.

அந்த நீர்த்துளிகளில் ஓரிரண்டு பலவர்மன் கன்னத்திலும் பாய்ந்து ஆணிகளை அறையும் துன்பத்தைக் கொடுத்தன. ஆணி செலுத்தப் படுவதுபோல் தன்னைத் துன்புறுத்திய நீர்த்துளிகளைப்போல் பல நீர்த்துளிகள் அலுவல் புரிந்துகொண்டிருந்த மாலுமிகள் மீது விழுந்தும் அவர்கள் அதைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் தங்கள் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த பலவர்மன் உண்மையில் பெருவியப்படைந்தான்.

வரவரக் காற்று கடுமையாகியது. கடல்புறாவின் ஆட்டமும் அதிகப்பட்டது. அத்தனை மையிருளிலும் திடமாகப் பாய்மரச் சீலை உருளைகளை நோக்கி அவற்றை இயக்கிக் கொண்டிருந்த மாலுமிகளின் உருவம் மங்கலாகத் தென்பட்டதால், ‘நமக்கு இவர்களையே சரியாகத் தெரிய வில்லையே, இவர்களுக்கு உருளைகள் இருக்குமிடம் எப்படித் தெரிகிறது?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான் பலவர்மன். இயற்கை மையிருட்டை அளித்திருக்க இளைய பல்லவன் எதற்காகப் பந்தங்களையும் விளக்குகளையும் அணைக்கச் சொன்னான் என்பது மட்டும் பலவர்மனுக்குப் புரியவில்லையாகையால் அவன் வாய்விட்டு இளைய பல்லவனைக் கேட்டான், “ஏன் விளக்குகளையும் பந்தங் களையும் அணைக்கச் செய்தீர்கள்?” என்று.

இளையபல்லவன் ஒரு விநாடி யோசித்தான். பிறகு கண்டியத்தேவனிடமிருந்த பலவர்மனை விடுவித்துத் தன் கையால் பிடித்துக்கொண்டு, “பலவர்மரே, காரணத்தை அவசியம் அறிய வேண்டுமா உங்களுக்கு?” என்று வினவினான்.

“ஆம்” என்றான் பலவர்மன்.

“அப்படியானால் வாருங்கள்,” என்று அவனைப் பிடித்து அழைத்துக்கொண்டு நடுப் பாய்மரத்துக்குச் சென்ற இளைய பல்லவன் அதை ஒட்டி நின்ற நூலேணியில் பலவர்மனை ஏறச் சொன்னான்.

“முடியாது, என்னால் முடியாது. மரக்கலம் பயங்கரமாக ஆடுகிறது,” என்றான் பலவர்மன்.

“நானிருக்கிறேன் பயப்படாதீர்கள்” என்று கூறிய இளைய பல்லவன் பலவர்மனை நூலேணியில் காலை வைத்து முன்னால் ஏறச் சொல்லிப் பின்னால் தானும் ஏறி அவனை ஒரு கையால் பிடித்துக்கொண்டு சென்றான். கால்கள் நடுங்க, கைகள் உதற, நெஞ்சு திக்திக்கென்று அடித்துக்கொள்ள அந்தப் பாய்மரத்து நூலேணியில் ஏறிச் சென்ற பலவர்மன் கப்பலின் ஆட்டத்தால் பலமுறை விழ இருந்தும் இளையபல்லவன் அவனை விழவொட்டாமல் தடுத்து நூலேணியின் மேல் ஏற்றிச் சென்றான்.

நூலேணியின் இருபது படிகள் தாண்டியதுமே கடல்புறாவின் பக்கப் பலகை கீழே போய் விட்டதால் கடலின் கோரக் காட்சி விரிந்தது பலவர்மனின் கண்களுக்கெதிரே. கொந்தளித்த கடலில் பெரும் அலைகள் கரிய உருளைகளாகத் திரண்டு திரண்டு கடல்புறாவை நோக்கி வந்து கொண்டிருந்தன. பருவக் காற்றின் பயங்கர வீச்சு பலவர்மன் காதுகளில் புகுந்து குப்பென்று அடைத்துக் கொண்டதன்றி மூக்கிலும் வீசி மூச்சைத் திணற அடித்தது. பாய்மரம் திடமாக நின்றாலும் பாய்கள் மட்டும் பேயாட்டம் ஆடி தடால் தடாலென்று கிழிந்து விடுவன போல் அடித்துக் கொண்டன.
நூலேணியின் இருபது படிகள் தாண்டியதுமே கடல்புறாவின் பக்கப் பலகை கீழே போய் விட்டதால் கடலின் கோரக் காட்சி விரிந்தது பலவர்மனின் கண்களுக்கெதிரே. கொந்தளித்த கடலில் பெரும் அலைகள் கரிய உருளைகளாகத் திரண்டு திரண்டு கடல்புறாவை நோக்கி வந்து கொண்டிருந்தன. பருவக் காற்றின் பயங்கர வீச்சு பலவர்மன் காதுகளில் புகுந்து குப்பென்று அடைத்துக் கொண்டதன்றி மூக்கிலும் வீசி மூச்சைத் திணற அடித்தது. பாய்மரம் திடமாக நின்றாலும் பாய்கள் மட்டும் பேயாட்டம் ஆடி தடால் தடாலென்று கிழிந்து விடுவன போல் அடித்துக் கொண்டன.

அந்தச் சூழ்நிலையில் நிற்கவும் மாட்டாமல் நூலேணியில் ஆடிய பலவர்மனை மேலே ஏறச் சொல்லித் தூண்டி, பாய்மரத்தின் முதல் தட்டில் நிற்க வைத்த இளையபல்லவன் தானும் அந்தத் தட்டில் நின்று கடலை நோக்கிக் கையை நீட்டி, “பலவர்மரே! இந்த மாதிரிக் காட்சியை நீர் இதற்கு முன் கண்டிருக்கிறீரா?” என்று கேட்டான்.

மிகுந்த குளிரினாலும் எதிரே கருமை தட்டிக்கிடந்த கடலின் கோரத்தினாலும் பற்கள் கடகடவென்று சப்திக்க, “இல்லை இல்லை,” என்று உளறினான் பலவர்மன்.

“இந்த மாதிரி காற்று… ” என்று மீண்டும் துவங்கினான் இளையபல்லவன்.
“பயங்கரம்,” என்று பதிலுரைத்தான் பலவர்மன்.

“அலைகள் எழுச்சி?”

“பயங்கரம். “

“கடல் புறாவின் நடனம்?”

“நடனமா இது!”

“ஆம். இதைவிட இன்ப நடனம் உலகில் எதுவும் கிடையாது. “

“அப்படியா?” பலவர்மன் அத்தனை பயத்திலும் இகழ்ச்சியைக் காட்டினான்.

“ஆம்! பலவர்மரே? இது இன்ப நடனம்தான். இதற்கு இயற்கைதான் ஆசிரியன். கடல் போடுகிறது தாளம். இதோ பாருங்கள், காற்று அளிக்கிறது கானம்” என்றான் இளைய பல்லவன், காற்றை மகிழ்ச்சியுடன் முகர்ந்துகொண்டே அந்தச் சமயத்தில் காற்று ‘ஊ ஊ’ என்ற பேரூதலாக ஊதியது. “இயற்கையின் குழலோசையைக் கேளுங்கள் பலவர்மரே! உமது ஆயுளில் கிடைக்காத காட்சி, கீதம், அனுபவம் அத்தனையையும் கடலன்னை அளித்திருக்கிறாள்,” என்று தொடர்ந்து கூறினான் இளையபல்லவன்.

பலவர்மன் கடலன்னையின் அந்த ‘வசதிகளை அனுபவிக்க இஷ்டப்படவில்லை. “இதைக் காட்டத்தான் இங்கு அழைத்து வந்தீர்களா?” என்று ஆத்திரத்துடன் வினவவும் செய்தான்.

“இல்லை, வேறொன்றைக் காட்டவும் அழைத்து வந்தேன். கீழே விளக்குகளையும் பந்தங்களையும் அணைக்கச் சொன்னதற்குக் காரணம் கேட்டீர்களல்லவா?”

“ஆம். “

“இப்பொழுது உற்றுப் பாருங்கள் நேரே” என்று கூறிய இளையபல்லவன் ஒரு திசையில் கையை நீட்டினான்.

அவன் கை குறித்த திசையை நோக்கிப் பலவர்மனின் இதயம் முன்னைவிடப் பலமாக அடித்துக் கொண்டது. “அதோ சின்னஞ்சிறு வெளிச்சங்கள் இரண்டு இடங்களில் தெரிகின்றன” என்று அந்தப் பயத்தின் ஊடே கூறினான்.

“ஆம்,” என்று ஆமோதித்தான் இளையபல்லவன்.

“அவை?” பலவர்மன் கேள்வியில் சந்தேகத்துடன் பயமும் கலந்து ஒலித்தது.

“இரண்டு மரக்கலங்கள்,” என்று இளையபல்லவன் விளக்கினான்.

“மிகவும் வேகமாக வருகின்றனபோல் தெரிகிறதே. “

“ஆம். “

“ஏன்?”

“நம்மைத் தாக்க?”

இதைக்கேட்ட பலவர்மன் திகைத்தான். “இந்த மையிருளில் கடல் போரா!” என்று வியப்பும் கிலியும் கலந்த குரலில் வினவவும் செய்தான்.

“ஆம்,” என்று கூறிய இளையபல்லவன் அந்த இடத்தி லிருந்தே கீழே குனிந்து, “கண்டியத்தேவரே! நமது பாய்களில் நடுவிலிருக்கும் பெரும்பாய் ஒன்றைத் தவிர மற்றவைகளை இறக்கிவிடுங்கள்,” என்று கூறினான்.

“ஏன் இறக்க வேண்டும்?” என்று குறுக்கே கேட்டான் பலவர்மன்.

“அந்த மரக்கலங்கள் நம்மை அணுக உதவுகிறோம்,” என்றான் இளையபல்லவன்.

இளையபல்லவன் புத்தி பிசகியிருக்கிறதோ என்று கூடப் பலவர்மன் நினைத்தான். இவன் எதற்காக ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறான்?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டே கடற்பகுதியை நோக்கினான். எதிரி மரக்கலங்கள் வெகு வேகமாகக் கடல்புறாவை நோக்கி ஓடி வந்தன. பாய்கள் இறக்கப்பட்ட கடல்புறாவின் வேகம் ஓரளவு குறைந்தது. அப்படிக் குறைந்ததால் எதிரி மரக்கலங்களுக்கும் கடல் புறாவுக்கும் இடையே இருந்த தூரம் மெள்ள மெள்ளக் குறைந்து கொண்டிருந்தது. அதற்கு மேல் அங்கு நிற்கச் சக்தி யற்ற பலவர்மனைப் பிடித்து இறங்கிக் கொண்டு கடல் புறாவின் தளத்துக்கு வந்த இளையபல்லவன், “தளம் தயாராகட்டும், விற்களும் வேல்களும் பொருத்தப்படட்டும். எல்லோரும் போருக்குச் சித்தமாகட்டும்,” என்று பெருங்கூச்சல் போட்டான்.

அந்தக் கூச்சலுக்குப் பிறகு பலப்பல விதமான ஒலிகள் தளத்திலும் மற்ற இடங்களிலும் கேட்டன. ஒரு நாழிகை பயங்கரமாக நகர்ந்தது. அந்த நாழிகையின் முடிவில் வானில் பறந்து வந்தன நான்கு எரி அம்புகள்.

Previous articleRead Kadal Pura Part 3 Ch1 | Sandilyan | TamilNovel.in
Next articleRead Kadal Pura Part 3 Ch3 | Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here