Home Manipallavam Read Manipallavam Part 3 Ch20 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

Read Manipallavam Part 3 Ch20 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

109
0
Read Manipallavam Part 3 Ch20 Manipallavam Na. Parthasarathy, Read Manipallavam Online Free, Manipallavam PDF, Download Manipallavam novel, Manipallavam book, read Manipallavam free, Manipallavam,Manipallavam story in tamil,Manipallavam story,Manipallavam novel in tamil,Manipallavam novel,Manipallavam book,Manipallavam book review,மணிபல்லவம்,மணிபல்லவம் கதை,Manipallavam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,na parthasarathy,nithiliavalli Part 3,nithiliavalli Part 3,nithiliavalli part 3,nithiliavalli full story,nithiliavalli novel full story,nithiliavalli audiobook,nithiliavalli audio book,nithiliavalli full audiobook,nithiliavalli full audio book,
Read Manipallavam Part 3 Ch20|Na.Parthasarathy|TamilNovel.in

Read Manipallavam Part 3 Ch20 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

மணிபல்லவம் – நா. பார்த்தசாரதி

மூன்றாம் பாகம் – வெற்றிக்கொடி

அத்தியாயம் 20 : புதிய மனமும் பழைய உறவுகளும்

Read Manipallavam Part 3 Ch20 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

முல்லையின் முகத்தையும் அந்த முகத்திலிருந்து பருகுவது போன்ற ஆர்வத்தோடு தன்னை இமையாமல் பார்த்துக் கொண்டிருக்கும் கண்களையும் எதிரே நேருக்கு நேர் நிமிர்ந்து காணத் தயங்கியவனாகத் தங்கள் இருவருக்கும் நடுவில் நின்று கொண்டிருந்த மானின் கண்களை நோக்கியபடியே அவளோடு பேசினான் இளங்குமரன்.

“முல்லை! பூக்களைப்போல சில பருவ காலங்களில் மலர்ந்து பொலிவதும் பின் வாடி உதிர்ந்து தளர்வதும் குறைவதும்தான் மனித உடம்பின் அழகு, கவர்ச்சி இவை எல்லாம். பூக்கள் பூப்பதற்குப் பருவம், நேரம் முதலியன காரணமாவதுபோல இந்த உடம்பில் அழகு பூக்கும் பருவங்களும் சில உண்டு. உடம்பை வாகனமாகக் கொண்டு இயங்கும் நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் அழகும் கவர்ச்சிகளும் பூத்துப் பொலிகின்ற பருவங்கள் மிகவும் குறுகியவை. பூக்களுக்கும், நேரத்திற்கும் சேர்த்துத் தமிழில் ஒரே சொல்லாக வாய்த்திருப்பது ‘போது’ என்ற பதம். நேரத்தோடு மலரும் பண்பைக் குறிப்பதற்காகவே பூக்களுக்கும் போது என்று பெயரிட்டார்கள் போலிருக்கிறது, பவழமல்லிக்கை இரவிலேயே பூத்து விடுகிறது. தாமரை கதிரவனைப் பார்த்த பின்பே முகம் மலர்கிறது. குமுதப்பூ மாலையில்தான் மலர்கிறது. ஒவ்வொரு மலரும் தன்னுடைய போது தவறாமல் பூக்கும் இயல்பை நினைத்துக் கொண்டு பார்த்தால்தான் இரண்டு பொருளுக்கும் உரியதாக வாய்த்த போது என்ற சொல்லின் அழகு புரியும். சமயம் அறிந்து, இடம் அறிந்து, பொருத்தம் அறிந்து மலரும் அறிவின் மலர்ச்சியைப் பூக்களுக்கு இணை சொல்வது இதனால்தான் முல்லை! உன்னைப் போன்ற பெண்களுக்கோ ஆசை நேரும்போதுதான் அறிவும் மலர்கிறது. ஆசையைச் சொல்வதற்கு வேண்டிய சொற்களை மட்டும்தான் நீங்கள் தேடுகிறீர்கள்…”

“அதை மறுப்பதற்குத் தேவையான அழகிய சொற்களைத் தேடாமலே தெரிந்து சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்…”

இப்படி வெடுக்கென்று உடனே அவனுக்குப் பதில் சொன்னாள் முல்லை. அவளுடைய சொற்கள் உணர்ச்சி வசப்பட்டுப் பிறந்ததைக் கண்டு இளங்குமரன் புன்முறுவல் பூத்தான். எதிரேயிருப்பவர் கூறிய கருத்து எதுவோ அதை உடனே மறுத்துவிட வேண்டுமென்ற அவசரமும் அவளுடைய இந்தச் சொற்களில் தொனித்தது. முல்லையின் மனத்தில் இப்போது இன்னொரு சந்தேகமும் ஏற்பட்டது. ‘பூக்களைப் போல் சில பருவ காலங்களில் மலர்ந்து பொலிவதும் பின்பு வாடி உதிர்ந்து தளர்வதும், குறைவதும்தான் மனித உடம்பின் அழகு, கவர்ச்சி இவை எல்லாம்’ என்று இளங்குமரன் கூறியது தன்னைப் பற்றியா, அவனைப் பற்றியா எனச் சந்தேகத்தை இரண்டு கூறாகப் பிரித்து மனத்தைக் குழப்பிக் கொண்டாள் அவள். இந்தச் சந்தேகத்தை அவனிடமே கேட்டுப் புரிந்து கொள்ளலாம் என்றால் இதை அவனிடம் எப்படிக் கேட்பது என்றும் அவள் விளங்கிக்கொள்ள முடியாமல் பயந்தாள்.

இளங்குமரனோ தன் எதிரே நிற்பவளுடைய பெண் இதயத்தின் எல்லா வேதனைகளையும் உணர்ந்திருந்தும் ஒன்றுமே உணராததுபோல இளநகை தயங்கும் முகத்தினனாக நின்றான். அவன் இதழ்களிலும் முகத்திலும் தோன்றிய அந்தப் புன்னகையும் கூட பிறருடைய வேதனைகளுக்கு இரங்கும் அருளாளன் ஒருவனுடைய கருணை நகையாகவே இலங்கிற்று.

இவர்கள் இரண்டு பேரும் இப்படிப் பேசத் தயங்கி நின்ற சமயத்தில் இந்தக் குழப்பத்திலிருந்து இரண்டு மனங்களையுமே விடுவிக்க வந்தாற்போல ஓவியன் மணிமார்பனும் அவன் மனைவியும் படைக்கலச் சாலைக்கு வந்து சேர்ந்தார்கள். இலவந்திகைச் சோலையில் வந்து தங்கியிருந்த ஓவியனை ‘இந்திர விழா முடிகிறவரை நீ படைக்கலச் சாலையிலே வந்து தங்கிக் கொள்ளலாம்’ என்று நீலநாக மறவர் வேண்டிக் கொண்டதற்கு இணங்கித் தன் மனைவியோடு அப்போது அங்கு புறப்பட்டு வந்திருந்தான். முல்லையின் கேள்விகளுக்கும், ஆசைகளுக்கும் மறுமொழி சொல்லியும் சொல்லாமலும் இரண்டு விதமான நிலைகளுக்கு நடுவே தவித்துக் கொண்டிருந்த இளங்குமரனுக்கும் மணிமார்பனுடைய வரவு இப்போது நிறைந்த நிம்மதியை அளித்தது.

விலங்குகளை மாட்டிக் கொண்டு அவற்றால் பூட்டுண்டு கிடக்கும் கைகளே அவற்றைக் களைந்து கழற்ற முடியாமல் தவிக்கும்போது வேறு கைகள் வந்து கழற்றினாற் போலத் தன் மனத்தின் திண்மைகளை இளக்கும் நளினமான சூழ்நிலைகளோடு முல்லை எதிரே வந்து நின்றுகொண்டு ஒவ்வொரு வார்த்தை யாலும் தன்னை வளைத்து இறுக்கிச் சொல் விலங்கு பூட்டிக் கொண்டிருந்த சமயத்தில் மணிமார்பன் வந்து விடுவித்ததாகத் தோன்றியது, இளங்குமரனுக்கு. ஆனால் முல்லைக்கோ தன் மனத்தின் இரகசியங்களையெல்லாம், சொல்லித் தீர்த்துவிடுவதற்கிருந்த கட்டுக்காவலற்ற சுதந்திரமான சமயத்தில் திடீரென்று யாரோ வந்து தன் மனத்துக்கும் நாவுக்கும் விலங்கு பூட்டிவிட்டாற்போல் இருந்தது. அழகிய கண்களைத் திறந்து மருள மருளப் பார்க்கும் அந்தப் புள்ளிமானையொப்ப, இருந்தாற் போலிருந்து தானும் பேச முடியாதவளாகவே மாறி விட்டதாக உணர்ந்தாள் முல்லை. அவள் மனத்திலும் நாவிலும், நினைவாகவும் சொல்லாகவும் விளையாடிய தனிமை என்ற சுதந்திர உணர்வின் மேல் இப்போது கூச்சமும் பயமுமாகிய விலங்குகள் விழுந்து இறுக்கின.

ஓவியன் மணிமார்பனும் அவன் மனைவியும் அவர்களுக்கு மிக அருகில் வந்தார்கள்.

“பாதுகாப்பான இடத்துக்கு வந்துவிட்டாய் மணிமார்பா! இனிமேல் இந்திரவிழா முடிகிற வரையில் நீ இந்த நகரத்தில் கவலையில்லாமல் இருந்துவிட்டுத் திரும்பலாம்” என்றான் இளங்குமரன்.

நான்கு பேரும் புல்தரையில் அமர்ந்து கொண்டார்கள். இங்கு உட்கார முல்லைக்கு விருப்பமில்லை என்றாலும் நீலநாக மறவரோடு போயிருக்கும் தன் தந்தை கடற்கரையிலிருந்து வந்தாலன்றித் தான் வீடு திரும்ப முடியாதென்ற காரணத்தால் வேண்டா வெறுப்பாக அங்கேயே உட்கார்ந்து கொண்டாள். புதுமணப் பொலிவு குன்றாமல் திருமணத்துக்குப் பின் இன்னும் அதிகமாயிருந்த பேரழகோடு அருகில் உட்கார்ந்திருந்த மணிமார்பனின் மனைவியைப் பார்த்தாள் முல்லை. அப்படி அவளைப் பார்த்தவுடன் இன்னதற்கு என்று புரியாத எதற்காகவோ தான் அவள்மேல் பொறாமைப் படுவதற்கு இடமிருக்கிறதென்று தோன்றியது முல்லைக்கு. இந்த உலகத்தில் அழகிய நாயகனை மணந்து கொண்டு வாழும் அழகிய பெண்ணாயிருக்கும் எவளைப் பார்த்தாலும் அவள் மேல் தான் பொறாமைப் பட வேண்டியது நியாந்தான் என்று நினைத்தாள் முல்லை. அவளுடைய மனக்குமுறல்களை முகமே கண்ணாடியாயிருந்து பிரதிபலித்தது. சிறிது நேரம் நால்வரும் என்ன பேசுவதென்றே தோன்றாமல் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மணிமார்பன் அந்த மெளனத்தைக் கலைத்தான்.

“ஐயா! இன்று பகலில் உங்கள் பூம்புகார் நகரத்தின் துறைமுகத்துக்கு அருகிலுள்ள வீதிகளையும் யவனப் பாடியின் வளம் மலிந்த கடைத் தெருக்களையும் என் மனைவியோடு சுற்றிப் பார்த்தேன். சென்ற முறை நான் இந்த நகரத்துக்கு வந்திருந்தபோது கூட இவ்வளவு விரிவாய் இந்த நகரத்தை நன்றாகச் சுற்றிப் பார்க்கவில்லை. அப்போது இங்கே எனக்கு ஏற்பட்ட துன்ப அநுபவங்களால் நான் இந்த அழகிய நகரத்தின் ஒவ்வொரு பகுதியையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்குப் பதிலாக இங்கிருந்து எப்போது வெளியேறி என்னுடைய சொந்த ஊருக்குப் போவேனோ என்று முள்மேல் நிற்பதைப் போலத் தவித்துக் கொண்டிருந்தேன். இந்த முறை வந்த போதுதான் உங்கள் நகரத்தை ஒரு கலைஞனுடைய கண்களால் பார்த்து நான் அநுபவிக்க முடிந்தது. யவனர்கள் கடைத்தெருவில்தான் எத்தனை எத்தனை நுணுக்கமான பொருள்கள்! எங்கெங்கிருந்தோ கடல் கடந்து வந்து உங்கள் சோழ நாட்டு மண்ணில் பரவி விளங்கும் கலைகளைப் பார்த்தால் எனக்குத் திகைப்பே ஏற்படுகிறது. பாண்டி நாட்டின் தலைநகராகிய எங்கள் மதுரையில்கூட வேற்று நாட்டுக் கலைகளும் பண்பாடுகளும் இவ்வளவு அழகாக வேரூன்றவில்லை ஐயா!” என்று மணிமார்பன் வியந்து சொல்விக்கொண்டே வந்தபோது இளங்குமரன் அவன் பேச்சில் குறுக்கிட்டுச் சில வார்த்தைகள் சொன்னான்:

“மணிமார்பா! உன்னுடைய கருத்துக்களில் ஒரு பகுதியை மட்டும் நான் மறுக்கிறேன். இந்த நகரத்திலுள்ள யவனப் பாடியின் செழிப்புமிக்க கடை வீதிகளையும் அங்கு மலிந்துள்ள பிறநாட்டுக் கலைகளின் வளத்தையும் பார்த்து நீ வியப்பது இயல்புதான். ஆனால் வேற்று நாட்டுக் கலைகள் இந்த நகரத்தில் வந்து வேரூன்றியிருப்பதாக நீ சொல்வதுதான் பிழை. நியாயமாகப் பார்த்தால் எந்தக் கலையும் தான் தோன்றிய மண்ணில் வேரூன்றுவதைப் போல் இன்னொரு நாட்டில் வேரூன்ற முடியுமா என்பது சந்தேகம்தான். மிக உன்னதமான தொரு கலை எந்த நாட்டிலும் போய்ப் பரவலாம். ஆனால் அதனுடைய ஆணிவேர் அது பிறந்த மண்ணில் தான் ஊன்றிக் கொண்டிருக்க முடியும் என்று பெரியவர்கள் சொல்லி யிருக்கிறார்கள்.”

“அந்தத் தத்துவம் எல்லாம் எனக்கு விளங்காது ஐயா! கிழக்குக் கடலின் தென்பகுதியில் நாவலந்தீவுக்கே நுழைவாயில் போல் அமைந்திருக்கிறபடியால் பூம்புகாரின் வீதிகளில் பல நாட்டுக் கலைவளத்தையும், மொழி வழக்கையும் காண முடிகிறது. எங்கள் மதுரை நகரம் தமிழகத்தின் நடுநகரமாக அமைந்து விட்டதனால் இதற்கு வாய்ப்பில்லை. மேலும் இந்திர விழாவைப் போல இவ்வளவு பெரிய விழா எதுவும் எங்கள் நகரத்தில் நடைபெறுவதில்லை. பங்குனி மாதத்தில் வில் விழா என்று ஒன்று நடைபெறும். காமனுக்காகக் கொண்டாடப்படுகிற அந்த விழாவில் மதுரை மாநகரத்து இளைஞர்களின் உற்சாகத்தை மட்டுமே காணலாம்…!”

“காமனுக்கென்று தனியாக விழா எதற்கு மணிமார்பா? இளைஞர்களும் முதியவர்களுமாக உயிர் வாழும் மனிதர்களுடைய மனத்தில் ஆசைகள் அள வற்றுப் பொங்கும் ஒவ்வொரு விநாடியும் காமனுக்குத்தான் கொண்டாட்டம்! காமனுக்குத்தான் திருவிழா ஆசைகளின் முடிவுதான் காமதகனம். வைராக்கியம் வாய்ந்த மனம் இருந்தால் அந்த மனதுக்கு உரியவன் எவனோ அவன் ஒவ்வொரு விநாடியும் தன் மனத்தில் மேலெழுந்து நிற்கும் ஆசையைத் தன்னுடைய வைராக்கிய நெருப்பினால் தகனம் செய்துவிட்டு வெற்றிப் பார்வை பார்க்கலாம்” என்று சிரித்தபடியே தத்துவம் சொன்னான் இளங்குமரன்.

அப்போது படைக்கலச் சாலையின் வாயிற் பக்கமிருந்து சிரிப்பும் ஆரவாரமுமாக நாலைந்து இளைஞர்களோடு கதக்கண்ணன் அங்கே வந்து சேர்ந்தான். அவர்கள் யாவரும் அருகில் வந்தபோதுதான் கதக் கண்ணனோடு உடனிருந்தவர்கள் தன்னுடைய பழைய பூம்புகார் நண்பர்கள் என்பது இளங்குமரனுக்குப் புரிந்தது. அவர்களை எப்படி வரவேற்பது என்று அவன் அப்போது திகைக்க நேர்ந்தது.

கூட்டமாக ஆடவர்கள் வருவதைப் பார்த்ததும் பெண்கள் இருவரும் எழுந்து விலகி நின்று கொண்டார்கள். தன் தமையன் கதக்கண்ணனைப் பார்த்தவுடனே முல்லைக்கு ஒரு விதத்தில் ஆறுதல் பிறந்தது. நீலநாக மறவரோடு பேசிக்கொண்டே உலாவப் போயிருக்கும் தன் தந்தை திரும்பி வருவதற்குச் சிறிது தாமதமானால் தான் தன் அண்ணனோடு வீடு திரும்பி விடலாமென்று எண்ணிக் கொண்டாள் முல்லை. புதிய சிந்தனைகளோடு கூடிய தன் மனத்தைக் கொண்டு பழைய நண்பர்களிடம் எப்படி எதை உள்ளம் திறந்து பேச முடியுமென்ற தயக்கம் அப்போது இளங்குமரனுக்கு ஏற்பட்டது.

Previous articleRead Manipallavam Part 3 Ch19 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in
Next articleRead Manipallavam Part 3 Ch21 | Manipallavam Na. Parthasarathy | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here